பிசாசின் அபிஷேகம்
பரலோகராஜ்ஜியம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கும், அழிவுக்கு நேராக செல்கின்ற ஆத்துமாக்களை ஜீவனுக்கு நேராக திருப்புவதற்கும், அநேகரை நீதிக்குட்படுத்துவதற்கும் ஒரு மனிதனை பரலோக இராஜ்ஜியத்தின் ஊழியக்காரனாக அபிஷேகம் செய்கின்றது. அபிஷேகம் என்பது ஒரு மனிதனை தன்னுடைய வேலையை செய்பவனாக நியமிப்பது ஆகும். அதேபோல் பிசாசின் இராஜ்ஜியமும் ஆத்துமாக்களை நரகத்திற்கு நேராக திருப்புவதற்கும், ஜீவனுக்கு நேராக செல்கின்ற ஆத்துமாக்களை அழிப்பதற்கும், அநேகரை அநீதிக்குட்படுத்துவதற்கும் சில மனிதர்களை நியமிக்கின்றது. அப்படி நியமிக்கப்பட்ட மனிதர்கள் பிசாசினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பிசாசின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் மேல் உள்ள பிசாசின் அபிஷேகம் அவர்களை கொண்டு தேவனுடைய பிள்ளைகளை இடறி விழச்செய்ய தூண்டும்.
இப்படிப்பட்டவர்கள் மேல் உள்ள அபிஷேகத்தினை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே Cancel பண்ணலாம். அந்த அதிகாரத்தினை பரலோகம் கொடுத்துள்ளது. இப்படி Cancel பண்ணும்போது அந்த மனிதர்களால் எந்த ஒரு கிரியைகளையும் நடப்பிக்க முடியாது. தேவனுடைய பிள்ளைகளை இடறிப்போகபண்ண முடியாது.
உதாரணமாக, சில பெண்கள் மற்றும் வாலிப பிள்ளைகள் மேல், ஊழியக்காரர்களை இடறிப்போக பண்ணுவதற்கான அபிஷேகத்தினை பிசாசு வைத்திருப்பான். இது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் ஊழியக்காரர்களை இச்சையாக பார்ப்பார்கள். உணர்ச்சிகளை தூண்டும் விதமாக பேசுவார்கள். ஊழியக்காரர்களுக்கு திருமணம் ஆனது தெரிந்தும், இரண்டாவது அவர்களை திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள். இது ஊழியக்காரர்களுக்கு இடறலாக இருக்கும். அவர்களிடம் உள்ள அசுத்த ஆவிகள் விரோதமாக போராடும்.
இவர்கள் மேல் உள்ள பிசாசின் அபிஷேகத்தினை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் Cancel பண்ணும்போது, பிசாசினால் அவர்களைக்கொண்டு எந்த ஒரு இடறலையும் ஏற்படுத்த முடியாது. எந்த ஒரு பாவச்சோதனைகளையும் கொண்டுவர முடியாது. ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் இந்த இரகசியத்தினை அறிந்து இந்த அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்.
சரி எப்படி அந்த அதிகாரத்தை பயன்படுத்துவது? என்ன செய்யவேண்டும்? எப்படி பிசாசின் ஒரு மனுஷி, மனிதன் மேல் உள்ள அபிஷேகத்தினை கண்டுபிடிப்பது? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்பதாய் நீங்கள் கேட்கலாம். இது மிக எளிதான காரியம். உங்களை யாரெல்லாம் தேவனைவிட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விட்டு பிரிக்கும்படியான பாவச்சோதனைகளை துணிகரமாக கொண்டு வருகின்றார்களோ அவர்கள்தான் பிசாசின் ஏஜென்ட். அவர்கள் மேல் உள்ள பிசாசின் அபிஷேகத்தினை Cancel செய்யுங்கள். பின்பு அவர்களை பிசாசு பயன்படுத்தவே முடியாது.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Glory to God
ReplyDelete