கட்டு.. கட்டவிழ்…

சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். கட்டு.. கட்டவிழ்… என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 24:1 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருக்கு பிரியம் என்று பரிசுத்த வேதவசனம் கூறுகின்றது ( எண்ணாகமம் 24:1 ). ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் பிரியமாயிருக்கின்றார். வாழ்க்கையில் சகலவிதமான ஆசீர்வாதங்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில காரியங்களை கட்ட வேண்டும். சில காரியங்களை கட்டவிழ்க வேண்டும். அப்படியென்றால் எதை கட்ட வேண்டும்? எதை கட்டவிழ்க்க வேண்டும் என்...