மரண பயத்தினால் வரும் நன்மைகள்


  

      











சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மரண பயத்தினால் வரும் நன்மைகள் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும்  ஆதியாகமம் 1:28-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

   இன்றைய நாட்களில் அநேகர் மரண பயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பொழுது இறந்துவிடுவேனோ, இந்த நிமிடம் இறந்துவிடுவேனோ என்று அடிக்கடி பயப்படுகின்றவர்களும் உண்டு. ஏதோ ஒன்று நடந்துவிட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வதற்காக வழியை ஆயத்தப்படுத்தி வைத்தவர்களும், ஏதோ ஒரு அவசரம் என்றால் மருத்துவமனைக்கு விரைந்து செல்வதற்காக மருத்துவமனையின் அருகில் தன் வீட்டை அமைத்து கொண்டவர்கள் உண்டு. இப்படி மரணபயம் அநேகரை வாட்டி வதைக்கின்றது. மரணத்தின் வலியை விட மரணபயத்தினால் ஏற்படும் வலி மிக அதிகம். தேவாதி தேவன் கொடுத்த வாழ்க்கையை நரகமாக்குவது மரணபயம். 

        இந்த மரண பயத்தினை கையாளும் முறையை பொறுத்து நன்மைகள் அல்லது தீமைகள் கிடைக்கும்.   சரியான வழிகளில் கையாண்டால் சில நன்மைகள் கிடைக்கும். அப்படி மரண பயத்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும், எப்படி மரண பயத்தினை கையாள வேண்டும் என்பதனை குறித்தும் இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

          நாளை இந்நேரத்தில் உன்னை கொலைசெய்துவிடுவேன் என்ற மிரட்டல் வார்த்தைகளை கேட்டு, தன் பிராணனை காப்பதற்காக வனாந்திரத்திற்கு ஓடி சென்றவன் எலியா. மரண பயத்தினால் சாக வேண்டும் என்று அறிக்கையிட்டு தன் அபிஷேகத்தினை இழந்துபோனான். மரண பயத்தினை சரியான வழியில் நாம் கையாளவில்லை என்றால் நம்மீது உள்ள பரலோக அபிஷேகத்தினையும், ஊழிய அழைப்பையும், ஏன் சில நேரங்களில் உயிரைகூட இழக்க நேரிடும். எனவே, மரண பயம் வரும்போது மிகவும் எச்சரிக்கையாக அந்த சூழ்நிலையை கையாள வேண்டும். ”போதும் ஆண்டவரே நான் சாகவேண்டும்” என்று எதிர்மறையாக பேசக்கூடாது. எனக்கு மட்டும் ஏன் என்று ஆவேசமாகவும் பேசக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டும் பேசிவிடக்கூடாது. (1 இராஜாக்கள்19 )

      இப்பொழுது எலியா ஸ்தானத்தில் எலிசா அபிஷேகம் பண்ணப்படுகின்றான். எலியா இழந்துபோன மீதி ஊழியத்தினை செய்வது எலிசாவைக் குறித்த பரலோக திட்டம். இனி எலியாவுக்கு இன்றோ, நாளையோ, எப்பொழுதும், எந்த நேரமும் மரணம் சம்பவிக்கலாம். இதை தெரிந்த எலியா தன்னை ஒவ்வொரு நாளும் ஆயத்தப்படுத்தினான். மரணம் வந்தாலும் எப்படியாவது பரலோகம் செல்ல வேண்டும் என்று தன்னை தயார்படுத்தினான். மரணபயம் ஆண்டவரோடு அவனை நெருக்கி சேர்த்தது. ஒவ்வொருநாளும் பரிசுத்தமாக மாறினான். முடிவில் மரணத்தை காணாமல் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டான். மரணத்தை குறித்து பயந்தவன் மரணத்தையே ஜெயித்தான்.

      முதலில் மரண பயத்தினால் எதிர்மறையாக பேசி தன் அழைப்பையும், அபிஷேகத்தையும் இழந்தவன், பின்பு சரியாக அந்த மரணபயத்தை கையாண்டு மரணத்தை ஜெயித்தான். மரண பயத்தின் நேரத்தில் சூழ்நிலைகளை சரியான முறையில் கையாண்டால் மரணத்தை வெல்லலாம்.

      இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! மரண பயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? எந்த நேரம் மரணம் வரும் என்று கலங்குகின்றீர்களா? அந்த நேரத்தில் எதிர்மறையான வார்த்தைகளை பேசாமல் பரிசுத்தப்படுத்த ஒப்புக்கொடுங்கள். மரணம் வந்தாலும் சர்வ வல்ல தேவனை சந்திக்க வேண்டும் என்று வாஞ்சையாக இருங்கள். அவரை சந்திக்க ஆயத்தமாகுங்கள். நிச்சயமாக மரணத்தை வெல்வீர்கள். மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்படுவீர்கள். ஆமென்!      

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

SWITCH TO ENGLISH  & HINDI

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here


Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..