தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய பாவம் எது?
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். தேவனுடைய பார்வையில் மிகப்பெரிய பாவம் எது? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 23:23-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
பாவத்தில் சின்ன பாவம், பெரிய பாவம் என்ற எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. கொலை செய்வதும், விபச்சாரம் செய்வதும், வேசித்தனம் செய்வதும் எப்படி பாவமோ அதேபோல் பொய் சொல்லுதல், கோபப்படுதல், மதிகேடு, பொறாமை போன்றவைகளும் பாவமாகும். இவைகள் அனைத்தும் மனிதர்களை தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:20-22). ஆனால், சில பாவங்கள் உடனே தேவக்கோபத்தை கொண்டு வந்து நீதியை சரிகட்டும். சில பாவங்கள் கொஞ்சம் தாமதமாக தேவனுடைய கோபத்தை கொண்டுவரும் (1தீமோத்தேயு 5:24). அதாவது மனம் திரும்புவதற்கு தவணைகளை கொடுக்கும். அந்த வகையில் விபச்சாரம், வேசித்தனம், இச்சைகள், காமவிகாரம் போன்ற பாலியல் பாவங்களா? அல்லது விக்கிரகாராதனையா? எது தேவக்கோபத்தை உடனே கொண்டு வரும்? எது உடனே நியாயதீர்ப்பை கொடுக்கும்? எது உடனே நீதியை சரிகட்டும்? போன்றவற்றை இந்த தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிப்போம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் விபச்சாரம், வேசித்தனம், இச்சைகள், காமவிகாரம் போன்ற பாலியல் பாவங்களும், விக்கிரகாராதனை போன்ற பாவங்களும் மனிதனை பாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதனையும், இவைகள் அனைத்தும் பரலோகத்திற்கு விரோதமான பாவங்கள் என்பதனையும் மனதில் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும்.
பிலேயாம் என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களை சபிக்க நினைக்கின்றான். ஆனால், சபிக்க முடியவில்லை. ஏனென்றால் சர்வவல்ல தேவனுடைய பாதுகாப்பின் கரம் அந்த ஜனங்களோடு இருந்தது. இதை உணர்ந்த பிலேயாம் தேவனைவிட்டு அந்த ஜனங்களை பிரிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.(எண்ணாகமம் 25:18) மோவாபின் ஸ்திரீகளை இஸ்ரவேல் மக்களுக்குள் அனுப்பி அவர்களை வேசித்தனம் செய்ய வைப்பதும், பின்பு அவர்களை விக்கிரகங்களுக்கு இட்ட பலிகளை புசிக்கவைத்து, விக்கிரகங்களை பணிந்துகொள்ள செய்வதுதான் அந்த திட்டம். ஜனங்கள் விக்கிரகங்களை ஆராதித்தால் தேவன் அவர்களைவிட்டு பிரிந்து சென்று விடுவார் என்றும், அவருடைய கோபம் அவர்கள்மேல் வரும் என்பதனையும் பிலேயாம் அறிந்திருந்தான்.
இந்த திட்டத்தின்படி இஸ்ரவேல் மக்கள் சித்தீமிலே இருக்கையில் மோவாபிய ஸ்திரீகள் அவர்களுக்குள் வந்து அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி வேசித்தனம் செய்ய அழைத்தார்கள். இஸ்ரவேல் மக்களும் அவர்களுடன் வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். இப்படி அவர்கள் பாலியல் பாவங்களை செய்யும் நேரத்தில் கர்த்தருடைய கோபம் அவர்களுக்குள் வரவில்லை. வாதையும் தொடங்கவில்லை. கர்த்தருடைய சமுகத்தில் வந்து, பாவங்களை அறிக்கையிட்டிருந்தால் ஒருவேளை இரக்கம் கிடைத்திருக்கும்.
இப்படி அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தங்களோடு வேசித்தனம் செய்த மக்களை விருந்துக்கு அழைத்து, தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை புசிக்கவைத்தார்கள். இஸ்ரவேல் மக்களும் அந்த பலிகளை புசித்து, அவர்கள் தேவர்களை பணிந்துகொண்டார்கள் (எண் 25:1-2)
எண்ணாகமம் 25:3-ல் ”இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது” என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகின்றது. இதில் அதனால் என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். அதாவது விபச்சாரம், வேசித்தனம், இச்சைகள் போன்ற பாலியல் பாவங்கள் கொடுமையான பாவங்கள்தான். அவைகள் உடனே தேவ கோபாக்கினையை கொண்டுவராது. மனந்திரும்புவதற்கு தவணைகள் கொடுக்கும். ஆனால், சர்வவல்ல தேவனைப்பற்றி அறிந்த ஜனங்கள் அவரைவிட்டு பின்வாங்கி விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று, அதை பணிந்துகொண்டு, அதைப் பற்றிக்கொள்ளும்போது கர்த்தருடைய கோபம் எழும்பும். வாதைகள் தொடங்கும். அப்படிதான் இஸ்ரவேல் மக்கள்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. அந்த வாதையினால் 24,000 பேர் செத்தார்கள்.(எண்ணாகமம் 25:9)
எனவே, தேவனுடைய பிள்ளைகள் எக்காரணத்தைக்கொண்டும் சர்வவல்ல தேவனைவிட்டு பின்வாங்கி சென்றுவிடக்கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்துவிடக்கூடாது. விக்கிரகங்களுக்கு முன்பாக விழுந்து பணிந்து அதைப்பற்றிகொள்ளக்கூடாது. ஒருவேளை பிசாசின் சூழ்ச்சியினால் விபச்சாரம் போன்ற பாலியல் பாவங்களில் சிக்கிவிட்டாலும், விசுவாசத்தை கைவிடாமல் பொறுமையாக காத்திருக்கும்போது, அவர் மனந்திரும்புவதற்கு தவணைகளை தந்து, கிருபைகளை தருவார். பாவத்திலிருந்து தூக்கி எடுப்பார்.
இந்த தீர்க்கதரிசன செய்தியின் வழியாக அறிந்துகொள்ளும் மிகப்பெரிய சத்தியம் பாலியல் பாவங்களா? அல்லது விக்கிரகாராதனையா? என்று வரும்போது தேவனுடைய பார்வையில் விக்கிரகாராதனையே மிகப்பெரிய பாவமாகும் என்பதனையும், ஒருவேளை பாலியல் பாவங்களில் பிசாசின் தந்திரத்தினால் சிக்கிக்கொண்டால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்காமல் இருந்து விசுவாசத்தை பாதுகாத்துக்கொண்டால் மனந்திரும்புவதற்கு தவனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment