கட்டு.. கட்டவிழ்…



சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.  கட்டு.. கட்டவிழ்… என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 24:1-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

   தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருக்கு பிரியம் என்று பரிசுத்த வேதவசனம் கூறுகின்றது (எண்ணாகமம் 24:1). ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் பிரியமாயிருக்கின்றார். வாழ்க்கையில் சகலவிதமான ஆசீர்வாதங்கள் மற்றும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில காரியங்களை கட்ட வேண்டும். சில காரியங்களை கட்டவிழ்க வேண்டும். அப்படியென்றால் எதை கட்ட வேண்டும்? எதை கட்டவிழ்க்க வேண்டும் என்பதாய் நீங்கள் யோசிக்கலாம். அதன் இரகசியத்தைதான் இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் இந்தச் செய்தியை வாசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் கட்ட வேண்டியவற்றினை கட்டுங்கள். கட்டவிழ்க்க வேண்டியவற்றினை கட்டவிழுங்கள். உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

       பரிசுத்த வேதத்தில் ஏனோக்கு என்ற பரிசுத்தவானைக்குறித்து வாசித்திருப்போம். இவனுடைய மொத்த ஆயுசு நாட்கள்  முன்னூற்று அறுபத்தைந்து(365) வருடம். அதில் முன்னூறு வருடம்(300) தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அப்படி சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் தேவன் அவனை எடுத்துக்கொண்டார். அவன்  காணப்படாமற்போனான் (ஆதி 5:21-24).

ஆனால், அவனுடைய குமாரனாகிய மெத்தூசலாவைப்பாருங்கள் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் வாழ்ந்து (969) மரித்தான். இவன் தன் தகப்பனைப் போல தேவனோடு சஞ்சரிக்கவில்லை. தகப்பனைப்போல எதிர்காலத்தைக் குறித்த வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்ளவில்லை. உயிரோடு எடுத்துக்கொள்ளப்படவும் இல்லை. ஏனென்றால், தகப்பனின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் கிடைக்கக்கூடாதபடிக்கு பிசாசு கட்டி வைத்திருந்தான்.  

 மனுக்குலத்தின் எதிரியாகிய பிசாசு தகப்பனார் மூலமாக வருகின்ற ஆவிக்குரிய மற்றும் உலக ஆசீர்வாதங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடாதபடிக்கு அதை கட்டிவைத்து தடைசெய்வான். அதேநேரத்தில் தகப்பனின் மூலமாக வருகின்ற சாபங்களை பிள்ளைகளுக்கு கொடுப்பான். அதாவது, பரம்பரையாக வருகின்ற ஆசீர்வாதங்களை தடுப்பான். ஆனால், பரம்பரையாக வருகின்ற சாபங்களை கொடுப்பான். இது பிசாசின் மிகப்பெரிய தந்திரம்.

  பொதுவாக எல்லாருடைய பரம்பரைகளிலும் சில ஆசீர்வாதங்கள் இருக்கும். சில சாபங்களும் இருக்கும். உதாரணமாக சில பரம்பரைகளில் உள்ளவர்கள் நல்ல திருமண வாழ்க்கைக்குள் சென்றிருப்பார்கள், கர்ப்பத்தின் கனியை பெற்றெடுத்திருப்பார்கள,. நல்ல வீட்டை கட்டி அதில் வாழ்ந்திருப்பார்கள், கடன் இல்லாமல், தரித்திரம் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள். இவைகள் அனைத்தும் பரம்பரையின் ஆசீர்வாதங்கள் ஆகும். அதே நேரத்தில் சிலர் குடிக்கு அடிமையாகவும், குழந்தை பாக்கியம் இல்லாமலும், திருமண வாழ்க்கை இல்லாமலும், நோயோடும், கடனோடும் வாழ்ந்திருப்பார்கள். இவைகள் அனைத்தும் சாபங்கள் ஆகும். இந்த சாபம் அந்த பரம்பரையில் வருகின்ற வாரிசுகளை தாக்கும்.

 இப்படி பரம்பரை பரம்பரையாக வருகின்ற சாபங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கட்ட வேண்டும். அந்த சாப ஆவிகளை துரத்த வேண்டும். அதே நேரத்தில் பரம்பரை பரம்பரையாக வருகின்ற ஆசீர்வாதங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டவிழ்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்யும்போது தலைமுறை ஆசீர்வாதங்கள் உங்களை தொடர்ந்து வரும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருப்பீர்கள்.

  இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் எந்த ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கின்றீர்களோ, அதை உங்களுக்கு முன் நான்கு தலைமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் தகப்பனார், தாத்தா, பூட்டன் என உங்கள் முன்னோர்கள் அந்த ஆசீர்வாதத்தினை சம்பூரணமாக பெற்றிருந்தால் பிசாசுதான் அந்த ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கக்கூடாதபடிக்கு கட்டி வைத்துள்ளான் என்பதை அறிந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அதை கட்டவிழுங்கள். அந்த ஆசீர்வாதம் உங்களை தேடி வரும். ஆமென்!

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)


Switch To ENGLISH    HINDI


தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here


Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..