எது சிலுவை?
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். எது சிலுவை? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யோவான் 15:7-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
தன் சிலுவையை சுமந்துக் கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக்கா 14:27) சிலுவை என்பது எது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சுமந்ததுப் போல் ஒரு மரக்கட்டையை சிலுவையாக செய்து அதை சுமக்க வேண்டுமா? என்பது அநேகருக்கு ஏற்படும் சந்தேகமாகும். உண்மையிலேயே எந்த சிலுவையை நாம் சுமக்க வேண்டும்? வாழ்க்கையில் உள்ள சிலுவை எது எப்படி சகிக்க வேண்டும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் தியானிப்போம் ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் பேசுவது நிச்சயம். இந்த தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் எல்லா மகிமையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் செலுத்துங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலக மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தப் பூமியில் சிலுவையை சுமந்தார். தன்னுடைய குடும்பத்தார், சகோதரர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் நாம் சிலுவையை சுமப்பது அவசியமான ஒன்றாகும். நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும் நாம் ஊக்கமாக இரவும் பகலுமாக ஜெபிப்போம். அவர்களும் வியாதி, நோய், தரித்திரம் நீங்கி ஆசீர்வாதமாக இருப்பார்கள். இதை உணராத அந்த குடும்பத்து உறுப்பினர்கள் ஜெபிக்கின்ற நமக்கு விரோதமாக பரியாச வார்த்தைகளையும், மனஸ்தாபத்தையும் கொண்டுவரும் வார்த்தைகளையும் தாராளமாக பேசுவார்கள். துணிகரமாக நிந்திப்பார்கள். ஆ... ஆ... என்று மட்டம் தட்டி சிரிப்பார்கள்.
இவர்களுக்கா ஜெபித்தோம்? என்றும் இவர்களுக்கு ஜெபிக்க வேண்டுமா? என்றும் யோசிக்கும் அளவிற்கு வார்த்தைகளினால் காயப்படுத்துவார்கள். இனி ஜெபிக்க வேண்டுமா? என்று யோசிக்க தூண்டும். அந்த நேரத்தில் பொறுமையாக அவர்களுடைய நிந்தனைகளையும், பரியாச வார்த்தைகளையும், அவர்கள் மூலமாக வரும் கஷ்டங்களையும் ஆசையாக சகிப்பதுதான் சிலுவையை சுமப்பதாகும். அதாவது நாம் யாருக்காக மிகவும் பிரயாசப்பட்டு உத்தரவாதம் பண்ணி ஜெபிக்கின்றோமோ அவர்கள் மூலமாக வரும் கஷ்டங்கள், பரியாசங்கள் சிலுவையாகும். அதை சகிப்பது சிலுவையை சுமப்பதாகும்.
எதிராளியாகிய பிசாசு அதிகமாக ஜெபிக்கின்றவர்களை கண்டாலோ, வேத வசனங்களை தியானிப்பவர்களைக் கண்டாலோ, அதிகமாக உபவாசிப்பவர்களைக் கண்டாலோ எளிதில் பயப்படமாட்டான். அதில் யார் அதிகமாக சிலுவையை சுமக்கின்றார்களோ அவர்களைக் கண்டு அலறியடித்து ஓடுவான்.
மிகப்பெரிய ஊழியக்காரர் ஒருவர் பிரசங்கம் பண்ணும்போதே திரள் கூட்ட மக்களுக்காக ஜெபிக்கும் போது சத்தமில்லாமல் சாப, பாவக் கட்டுகள் சரளமாக உடைக்கப்படும். காரணம் என்ன? அவருடைய ஜெப வாழ்க்கையா? என்று தேவ சமூகத்தில் ஆராய்ந்துப் பார்த்தேன். ஜெப வாழ்க்கை என்றால் அவரைவிட மிகவும் அதிகமாக ஜெபிப்பவர்கள் உண்டு. அவர்களுடைய ஊழியங்களில் இப்படிப்பட்ட அற்புதங்கள் நடப்பதில்லை. மாறாக அவர் சுமந்த சிலுவைதான் பிசாசுகளை பயந்தோடச் செய்கின்றது.
எனவே யாருக்காக ஜெபிக்கின்றோமோ அவர்கள் மூலமாக வரும் நிந்தைகளையும், கஷ்டங்களையும் சகித்து சிலுவையை சுமப்போம் பிசாசுகளையும், பிரச்சனைகளையும் துரத்துவோம். ஆமென்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment