Meditation -01
1. புதுப்பிக்கின்ற தேவன் சர்வ வல்ல தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்தார் ( ஆதி 1:1) எதிராளியான பிசாசு அதை கெடுத்து ஒழுங்கின்மையும் , வெறுமையும் , இருள் நிறைந்ததாக மாற்றிவிட்டான் . படைத்த தேவனோ அதை அப்படியே விடவில்லை . மறுபடியும் அதை புதுப்பித்து உருவாக்கினார் . தாயின் கர்ப்பத்தில் பிறக்கும் ஒரு மனிதனை ஊழியக்காரனாகவும் , அபிஷேகம்பண்ணப்பட்டவனாகவும் , வரங்கள் நிறைந்தவனாகவும் , சர்வ வல்ல தேவன் உருவாக்குவார் . எதிரியான பிசாசு போராடி அவர்களை கெடுத்துவிடுவான் . பாலியல் பாவங்களில் சிக்கவைத்து அபிஷேகத்தையும் வரங்களையும் இழக்க செய்வான் . அன்பின் தேவனோ “ சரி எப்படியும் போ என்று உதறித்தல்லாமல்” மறுபடியும் அவர்களை புதுப்பிப்பார் . பழைய நிலைக்கு உயர்த்துவார் . இதை வாசிக்கின்ற நீங்களும் ஒருவேளை பிசாசினால் கெடுக்கப்பட்டு , வெறுமையாக்கப்பட்ட நிலைமையில் இருக்கலாம் . “ வேண்டாம்” என்று உங்களை தள்ளிவிடாமல் புதுப்பிக்கின்ற தேவன் ...