Caring-ஆல் கெட்ட சந்ததி
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். Caring-ஆல் கெட்ட சந்ததி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை தானியேல் 6:28 - ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் மற்றவர்கள் தன்னை Care பண்ணவேண்டும். அக்கறையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். குடும்ப வாழ்க்கையில் மனைவி தன்னுடைய கணவன், தன்னை எப்பொழுதும் Care பண்ணவேண்டும் என்று விரும்புவாள். மற்றவர்களைவிட தன்னை அதிகமாக கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். அதுபோல் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பான். பிள்ளைகள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பார்கள். இது எல்லா மனிதர்களிடம் காணப்படும். இது நல்ல காரியம்தான். இது கெட்ட ஆசை கிடையாது.
மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்ற Caring கிடைக்காத போதும், விரும்பும் நபர் Care பண்ணாமல் இருக்கும்போதும், பிசாசு என்ற மனுக்குலத்தின் எதிரி மிகவும் நூதன தந்திரமாக கிரியை செய்கின்றான். இது யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக இருக்கின்றது. நீதியின்படி கிடைக்க வேண்டிய நபர்களிடம் கிடைக்காத போது, கிடைக்கக்கூடாத நபர்களிடம் இருந்து அநீதியாக கிடைக்கும்படி செய்கின்றான்.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை Care பண்ணாமல் இருக்கும்போதும், மனைவிக்கு கணவனிடம் இருந்து கிடைக்கும் அன்பு கிடைக்காத போது புது நண்பர்களை அறிமுகப்படுத்துகிறான். அவர்களிடம் இருந்து Caring கிடைக்கின்றது. இதனால் அந்த நபர்களிடம் பழகுகின்ற மனைவிமார்கள் உண்டு. அதே போல் கணவனும் மனைவி ஸ்தானத்தில் இருந்து அன்பு செலுத்துகின்ற மற்றவர்களை மற்ற பெண்களை தேடுவதை பார்க்கலாம்.
வாலிப வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களிடம் இருந்து கிடைக்காமல் போகும்போது மற்றவர்களின் அன்பை எதிர்பார்த்து மனதை பறிகொடுத்தவர்கள் உண்டு. சகோதரனுடைய அன்பு இல்லை எனக்கு உடன் பிறந்த அண்ணன் கிடையாது என்பதற்காக அண்ணனைப்போல் பேசும் ஆசாமியை நம்பி கெட்டுப்போன தங்கச்சிமார்கள் உண்டு.
இப்படிப்பட்ட பழக்கங்கள் முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கும். பின்பு அதுவே காதலாகவும், கள்ளக்காதலாகவும் தகாத உறவாகவும் மாறி குடும்பங்களை உடைத்து நார் நாராக சிதைத்துவிடும். அருவருக்கப்படத்தக்க அவமானத்தை கொண்டு வந்துவிடும்.
இக்காரியங்கள் தேவாதி தேவனைப்பற்றி அறியாத அஞ்ஞானிகள் மத்தியில் நடந்தால் பிரச்சனை இல்லை. அதைப்பற்றி கவலைப்படவும் தேவையில்லை. ஆனால் சர்வவல்ல தேவனை அறிந்து இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்து திருச்சபையில் பரிசுத்தவான்கள் வரிசையில் அங்கத்தினராக இருக்கும் விசுவாசிகள் மத்தியில் நடப்பதுதான் கர்த்தருக்குள் வேதனைப்படவும், கவலைப்படவும் வைக்கின்றது.
ஒரு விசுவாச குடும்பத்தில் கணவன் தன் மனைவியை நேசிக்கவில்லையென்றாலோ, Care பண்ணவில்லையென்றாலோ அதே போல் மனைவியிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பு கணவனுக்கு கிடைக்காமல் இருந்தாலோ அவர்கள் இருவரில் யாரோ ஒருவர் ஏதோ ஒரு காரியத்தை சரிசெய்ய வேண்டும் என்று தேவாதி தேவன் விரும்புகின்றார். அதனால்தான் அதை குடும்பத்தில் அனுமதித்திருக்கின்றார்.
எனவே, குடும்ப வாழ்க்கையில் தேவாதி தேவன் தந்த துணையிடம் இருந்து எதிர்பார்த்த Caring கிடைக்கவில்லையென்றால் அதை தேவசமூகத்திற்குதான் கொண்டு செல்ல வேண்டும். குடும்பத்தில் சரிசெய்ய வேண்டிய காரியங்களை சரிசெய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் அதை செய்ய வேண்டும். அப்படி தேவ சமூகத்திற்கு செல்லாமல் Caring தரும் மற்ற மனிதர்களிடம் செல்லும்போது அது பிரச்சனையை கொண்டுவரும். பெரிய பிரச்சனையாக முடியும்.
எனவே, தேவன் தந்த உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் Caring கிடைக்கவில்லையா? உங்கள் கணவர் உங்களை நேசிக்கவில்லையா? உங்கள் மனைவி உங்களை நேசிக்கவில்லையா? பெற்றோர்களின் பாசம் கிடைக்கவில்லையா? அண்ணனின் பாசத்திற்காக ஏங்குகின்றீர்களா? இதை தேவ சமூகத்திற்கு கொண்டு செல்லுங்கள். சரி செய்ய வேண்டிய காரியங்களை சரிசெய்யுங்கள். தேவாதி தேவன் காரியங்களை மாறுதலாக முடியப்பண்ணுவார்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக மனிதர்களை விட, மனைவியை விட, கணவனை விட, பிள்ளைகளை விட, பெற்றோர்களை விட, சகோதரர்களை விட மிகச்சிறந்த முறையில் எப்பொழுதும் எக்காலமும் எந்நேரமும் மிக சிறந்த முறையில் Care பண்ணுகின்றவர் நாம் ஆராதிக்கின்ற தேவன் இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரைப்போல் நம்மை Care பன்றவங்க யாரும் கிடையாது. அவரைப்போல் அன்பு காட்டுகின்றவர் யாரும் கிடையாது. உலகத்தில் எங்கு எந்த மூலைக்கு சென்றாலும் பார்க்கமுடியாது.
எனவே, மற்றவர்களிடம் ஆறுதலையும், அக்கறையும் எதிர்பார்க்காமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் எதிர்பார்க்கும் போது எந்த பிரச்சனையும் வராது. தகுதியில்லாதவர்களிடம் Caring-ஐ எதிர்பார்த்து கெட்டுப்போவதை விட தகுதியுள்ள தேவாதி தேவனிடம் எதிர்பார்ப்போம். அவர் தரும் Caring-ஐ பெற்றுக்கொள்வோம்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment