மரணத்தின் ருசி
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மரணத்தின் ருசி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை சங்கீதம் 91:16-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். English Hindi
பயம் என்பது மிகவும்
கொடுமையானது. அதிலும் மரணப்பயம் சொல்லவே வேண்டாம். மிகக் மிக கொடுமையானது. மரணம்
வந்துவிடுமோ? இப்பொழுது நான் இறந்து விடுவேனோ? என்னுடைய ஜீவன் எடுக்கப்படுமோ?
என்று அநேகர் மரண பயத்தினால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். உலகத்தார் மாத்திரம் அல்ல.
ஆவிக்குரிய விசுவாச பிள்ளைகளும் இதில் அடங்கும். தேவனுடைய பிள்ளைகளுக்கு மரணம்
என்பது கொடுமையானதா? கர்த்தருக்குள் மரித்தவர்கள் நிலை எப்படி இருக்கும்?
உண்மையாகவே மரணம் என்பது ருசியான ஒன்றா? போன்ற ஆவிக்குரிய ஆழமான இரகசியத்தினை இந்த
செய்தியில் தியானிப்போம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை
உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள்.
இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
பரிசுத்த வேதத்தில்
மத்தேயு 16:28-ல் ”இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில்
வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்” இந்த வசனத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை
ருசிக்கும் ஒரு அனுபவமாக கூறுகின்றார். ருசி என்பது நம் மனதை மகிழ்ச்சியாக்கும்
ஒன்றாகும். அதாவது மரணம் என்பது இனிமையான ஒன்றாகும். உண்மையாகவே மரணம் என்பது ருசி
பார்க்கும் ஒரு அனுபவமாகும்.
ஜெபத்தில் ஒரு மணி நேரம்,
இரண்டு மணி நேரம் தேவப்பிரசன்னத்தில் இருக்கும் போது, எவ்வளவு சமாதானம், சந்தோஷம்
காணப்படுகின்றது. சிலருக்கு தேவபிரசன்னத்தைவிட்டு வெளியே செல்லவே கொஞ்சம் கூட
பிடிக்காது. தேவப்பிரசன்னத்தை உணர முடியவில்லையென்றாலும், தேவப்பிரசன்னம்
இல்லையென்றாலும் போராடுவார்கள்.
பரலோகம் முழுவதும்
தேவப்பிரசன்னத்தினால் நிரப்பப்பட்டிருக்கும். இமைப்பொழுதும் தடையில்லா
தேவப்பிரசன்னம் எங்கும் எதிலும் காணப்படும். மரித்த ஒரு ஆத்துமா பரலோகம்
சென்றுவிட்டால், அதை எப்பொழுதும் தேவபிரசன்னமே சூழ்ந்திருக்கும். அதைவிட்டு வெளியே
வர விரும்பாது. பரலோகம் சென்ற ஒரு ஆத்மாவிடம் தேவாதி தேவன் ”நீ பூமிக்கு செல்”
என்று கூறினாலும் அந்த ஆத்துமா ”வேண்டாம்; நான் அங்கு செல்லமாட்டேன்; அங்கு சென்று
கஷ்டப்படமாட்டேன்; இங்கேயே நிரந்தரமாக இருக்கின்றேன்” என்று சொல்லும். பூமியில்
வாழும்போது கூட இந்த பூமி வாழ்க்கை வேண்டாம் என்று கூறுபவர்கள் பரலோகம் சென்ற
பின்பு ஒரு முறையாவது பரலோகம் வேண்டாம் என்று கூறமாட்டார்கள். அந்தளவுக்கு அங்கு
இனிமை, சமாதானம், மகிழ்ச்சி, சந்தோஷம் காணப்படும். பரலோகம் அனுபவம் உள்ளவர்களுக்கு
மரணம் என்பது ருசிக்கின்ற ஒன்றாகவே இருக்கும்.
இந்த தீர்க்கதரிசன
செய்தியை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! மரணப் பயம் உங்களை
கஷ்டப்படுத்துகின்றதா? மரணப் பயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கிறிஸ்து எனக்கு
ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21) என்று அறிக்கையிடுங்கள். மரணம்
என்பது வலிகள் நிறைந்தவைகள் அல்ல... ருசியுள்ளவை என்று உணருங்கள். இதை நீங்கள்
உணர்ந்தாலே மரணப்பயம் உங்களை விட்டு சென்றுவிடும். பின்பு மரண பயத்திலிருந்து
விடுதலையாவீர்கள்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment