அதிகமதிகமாய் விருத்தியடைய வேண்டுமா?
சகல துதி, கனம், மகிமை,
புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.
அதிகமதிகமாய் விருத்தியடைய வேண்டுமா? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக்
செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை மத்தேயு 4:15-ன் படி ஆசீர்வதித்து
உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும்
உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். English or Hindi
ஈசாக்கும் வரவர
விருத்தியடைந்து மகா பெரியவனானான் (ஆதி 26:13). அதேபோல் தாவீதும் நாளுக்கு நாள்
விருத்தியடைந்தான் (2சாமுவேல் 5:10) என்று பரிசுத்த வேதத்தில் பார்க்கின்றோம்.
ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும் மாறுதல் விருத்தியடைதல்
ஆகும். இது பரலோக தேவனின் ஆசீர்வாதமாகும். நம்மில் அனேகர் தொழிலில்,
குடும்பத்தில், ஆவிக்குரிய வாழ்க்கையில், ஊழியத்தில், அபிஷேகத்தில் விருத்தியடைய
வேண்டும் என்று ஆசைப்படுவோம். அது நல்லதுதான் இப்படி விருத்தியடைய என்ன செய்ய
வேண்டும்? யாரெல்லாம் விருத்தியடைவார்கள்? விருத்தியடைய தகுதி உள்ளதா? அல்லது
இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? போன்ற ஆவிக்குரிய இரகசியங்களை இந்த
தீர்க்கதரிசன செய்தியில் வாசிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். நிச்சயமாக பரிசுத்த
ஆவியானவர் உதவி செய்வார்.
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்து இந்த பூமியில் மனுஷ குமாரனாக வாழ்ந்த நாட்களில் தன்னுடைய
பன்னிரண்டாம் வயதில் ஆவியில் பெலனடைந்து ஞானத்தினால் நிறைந்தவராய் இருந்தார்.
தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது (லூக்கா 2:40) அவர் பேசக்கேட்ட யாவரும்
அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்து பிரமித்தார்கள். ஏன்
அவருடைய பெற்றோர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள். அந்தளவுக்கு ஞானத்தினால்
நிறைந்தவராய் இருந்தார்.
”மகனே ஏன் எங்களுக்கு
இப்படிச்செய்தாய்? இதோ உன் தகப்பனும், நானும் விசாரத்தோடு தேடினோம்” என்று அவருடைய
தாய் கூறினாள். முதலில் ஏன் என்னைத் தேடினீர்கள் என்று கேட்டவர், பின்பு
அவர்களுடனே நாசரேத்துக்கு சென்று 30 வயதுவரை அவர்களுக்கு கீழ்ப்படிந்திருந்தார்.
அவர் 12 வயதில் ஆவியில்
பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தவராய் இருந்தும் தன்னிச்சையாக சுதந்திரமாக
செயல்படாமல் பரலோக தேவனின் திட்டத்தின்படி பெற்றோர்களுக்கு 30 வயது வரைக்கும்
கீழ்ப்படிந்திருந்தார். எனவே ”ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும்,
மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக்கா 2:52)
கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவைப்போல் அபிஷேகத்தின் நிறைவைப் பெற்ற போதும், ஆவிக்குரிய வரங்கள்
கிடைத்தபோதும், ஆசீர்வாதத்தினை சுதந்தரித்தபோதும், ஏற்ற காலம் வரும் வரைக்கும்
சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படாமல், கொஞ்சம் கீழ்ப்படிந்திருப்போம். அப்படி
கீழ்ப்படிந்திருக்கும்போது, அபிஷேகத்தில், தொழில், ஊழியங்களில், வருமானத்தில்
அதிகமதிகமாய் விருத்தியடையலாம்.
ஆனால், இந்த நூற்றாண்டில்
இதைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆவிக்குரிய வாழ்க்கையில் கொஞ்சம் அபிஷேகத்தை
பெற்றால் கூட உடனே தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி தன்னை
வழிநடத்தினவர்களையும், தனக்கு மேல் உள்ளவர்களையும் எதிர்த்துப் பேசுகின்றார்கள்.
அவர்கள் வார்த்தைக்கு கீழ்ப்படிவதில்லை. விளைவு விருத்தியை பார்க்க முடிவதில்லை,
வளர்ச்சியும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை.
எனவே, தேவனுடைய
பிள்ளைகளே! விசுவாசிகளே! ஊழியம் செய்கின்றவர்களே! அபிஷேகம் இருந்தாலும், தொழில்
ஆசீர்வாதம் இருந்தாலும், தேவனுடைய நாட்கள் வரும் வரை கீழ்ப்படிந்து
அடங்கியிருங்கள். அதிகமதிகமாய் விருத்தியடைவீர்கள்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment