பாவம் ஏன்?
எகிப்து என்பது பாவமாகும். தேவனுடைய
பிள்ளைகளின் நன்மைக்காகவும் தன்னுடைய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும்
சில நேரங்களில் எகிப்துக்கு அனுப்புவார். அது ஏன்? எப்படி? என்பதனைக் குறித்து இந்த
தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம்.
இஸ்ரவேல் மக்கள் கொஞ்ச ஜனங்களாக கானானில் இருந்தார்கள்.
ஒரு யுத்தம் உண்டானால் மொத்த முழு சந்ததியும் அழிந்துவிடும். ஆகையால் அவர்கள் பலுகிப்
பெருக வேண்டும் என்று சர்வவல்லதேவன் விரும்பினார். ஆனால், அவர்களால் கானானில்
பெருக முடியாது. எனவே, எகிப்து தேசத்துக்கு அனுப்பினார்.
எகிப்து என்பது விக்கிரகங்களினால் நிறைந்து, விக்கிரக
ஆராதனை செய்கின்ற ஒரு இடமாகும். மனைவி அழகாக இருந்தால் போதும், அவளுடைய கணவனை கொன்றுவிட்டு,
அவளை தனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்கின்ற மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள். தன் வீட்டு
வேலைக்காரன் மீது கண் போட்டு அவனோடு சயனிக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்த பெண்களும்
அங்கு உண்டு. விபச்சார வேசித்தனங்கள் மிகுதியாக காணப்பட்ட இடமாகும்.
அப்படி இருந்தும் அங்கே ஒரு நன்மை இருந்ததால், எப்படிப்பட்ட
நன்மை? சந்ததிகளை பாதுகாத்து, பலுகிப், பெருகச்
செய்கின்ற நன்மைகள் காணப்பட்டதால், அங்கே தன்னுடைய பிள்ளைகளை அனுப்பினார். பரிசுத்தமுள்ள
சந்ததியை பாவ தேசத்திற்குள் கொண்டு சென்றார்.
எகிப்துக்கு சென்ற அவர்கள் மிகுதியாக பலுகிப் பெருகினார்கள்.
ஏற்ற வேளையில் அவர்களின் அடிமைத்தனத்தின் கட்டுகளை உடைத்தெறிந்து, மறுபடியும் அவர்களை
கானானுக்குள் கொண்டு வந்தார். எகிப்துக்கு கூட்டி சென்றால், கானானுக்குள் கொண்டு வருவது
மிக நிச்சயமாகும்.
தாயின் கர்ப்பத்தில் உருவாகு முன்னே
ஒரு சகோதரனை குறித்து பரலோக தேவன் மிகப்பெரிய திட்டம் வைத்திருந்தார். இதை தெரிந்த
பிசாசு அந்தத் திட்டத்தினை கெடுக்க திட்டம் தீட்டினான். அந்த சகோதரனை மூன்றாம் பாலினத்தாராக
மாற்றி, ஊழியம் செய்யக்கூடாதபடிக்கு தேவத்திட்டத்தினை விட்டு துரத்தி விட வேண்டும்
என்பது அவனுடைய திட்டம். சிறுவயதிலிருந்தே மூன்றாம் பாலினத்திற்கான அறிகுறிகளை காட்டத்
தொடங்கினான். சிந்தனையில் பேசி ஒரே பாலினத்தார் மீது ஈர்ப்பை கொடுத்தான். எனவே,
அந்த சகோதரனுக்கு எதிர் பாலினத்தார் மீது எந்த ஈர்ப்பும், ஆசையும் இல்லை. எதிர்ப்பாலினத்தாரை
வெறுக்க ஆரம்பித்து விட்டான்.
எதிர்ப் பாலினத்தவரை திருமணம் செய்யாமல்
ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால் எப்படி சந்ததி பெருகும்? எப்படி பலுகிப் பெருக முடியும்?
பிசாசின் இந்தத் திட்டத்தினை உடைக்க பரலோக தேவன் சித்தம் கொண்டார். எதிர்ப்பாலினத்தவர்
மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காகவும், எதிர்பாலினத்தவரை திருமணம் செய்ய வேண்டும்
என்பதற்காகவும், அந்த சகோதரன் மீது விபச்சார வேசித்தனத்தின் ஆவியை அனுமதித்தார்.
அந்த சகோதரன் விபச்சார அடிமைத்தனத்தின் பாவங்களில் சிக்கினான். பல வருடங்கள் அதற்குள்
அடிமையாக இருந்தான்.
இப்பொழுது மூன்றாம் பாலினத்தினருக்கான சாபக் கட்டுகள்
உடைக்கப்பட்டு, அவனுக்குள் எதிர்ப்பாலினத்தவர்
மீது ஈர்ப்பு வந்துவிட்டது. எதிர் பாலினத்தவரை தேடிச் சென்றான். எதிர்ப்பாலினத்தவரை
திருமணம் செய்ய விரும்பினான். ஏற்ற நேரத்தில் அந்த அடிமைத்தனத்தின் கட்டுகளை உடைத்தெறிந்து,
விபச்சார பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து, நல்ல திருமண வாழ்க்கையை கர்த்தர் கொடுத்தார்.
நல்ல ஊழியத்தையும் குடும்பத்தையும் கொடுத்தார். சந்ததியைப் பெருக செய்தார். இப்பொழுது
அந்த சகோதரனின் சந்ததி பெருகியுள்ளது.
விபச்சாரம் என்பது மிக மோசமான பாவமாகும்.
விபச்சாரத்தில் சிக்கி உள்ளவர்கள் பரலோக இராஜ்ஜியம் செல்ல முடியாது. இது வேதச் சத்தியம்
ஆகும். ஆனாலும், பிசாசின் சதி திட்டங்களை முறியடித்து பரலோகத் திட்டத்தினை நிறைவேற்ற
சிலருக்கு அந்த அடிமைத்தனத்திற்குள்ளாக செல்ல அனுமதி கொடுக்கின்றார். எல்லோருக்கும்
அல்ல. ஒரு சிலருக்கு.. பின்பு அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்து பயன்படுத்துகின்றார்.
எனவே, அடிமைத்தனத்தின் பாவங்களில்
சிக்கியிருக்கும் தேவனுடைய பிள்ளைகளே! ஏன் இந்த அடிமைத்தனம் என்று புலம்ப வேண்டாம்.
உங்களைக் குறித்து கலங்கவும் வேண்டாம். சீக்கிரமாக பாவக் கட்டுகளிலிருந்து வெளியே வர
வேண்டும் என்று ஜெபியுங்கள். பரலோக தேவன் நிச்சயமாகவே உதவி செய்வார். பாவக்கட்டுகளில்
இருந்து வெளியே வந்த பின்பு எழும்பி பிரகாசிப்பீர்கள்.
நினைவிருக்கட்டும் சில நன்மைக்காகவும் பரலோகத் திட்டங்களை நிறைவேற்றவும் எகிப்திற்குள்
அனுமதித்தாலும், அதை விட்டு வெளியே வந்தால்தான் கானானுக்குள் செல்ல முடியும். அதேப்போல்
பாவக் கட்டுகளிலிருந்துக் கொண்டே பரமக் கானானுக்குள் செல்ல முடியாது. இதை மறந்து விடாதீர்கள்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment