ஒரு மாதத்தில் ஒரு அற்புதம்
Switch To ENGLISH
சகல, துதி, கனம், மகிமை, புகழ்ச்சி,
கீர்த்தி எல்லாம் பரலோக பிதாவாகிய தேவனுக்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த
ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். ஒரு மாதத்தில் ஒரு அற்புதம் என்ற இந்த திட்டம்
பரலோக தேவன் கொடுத்த திட்டம் ஆகும். ஆதலால்,
இந்த ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபம்பண்ணுகிறவர்களுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அற்புதங்களை செய்வார். அவர் உண்மையுள்ளவர். நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவர். நீங்களே ஜெபித்து நீங்களே தேவனிடத்தில் இருந்து அற்புதத்தைப்
பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். 1 தீமோத்தேயு 2: 1-4 வசனங்களை
மையமாகக் கொண்டு இந்த ஜெபக்குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்தும் தீர்க்கதரிசன ஜெபக் குறிப்புகள்.
தினமும் ஒரு மணி நேரம் ஊக்கமாக
உங்கள் தனி ஜெபத்தில் ஜெபியுங்கள். முடிந்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை
உபவாசம் இருந்து ஜெபியுங்கள்.
1.இந்தியாவின் மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும்
என்பதற்காகவும், இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர்களுக்காகவும்
ஜெபியுங்கள்.
2.தேசத்தில் காணப்படும் அநீதிகள் நீங்க வேண்டும்
என்பதற்காகவும், ஏழைகள், சிறுமைப்பட்டவர்கள், திக்கற்றப்பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதற்காகவும் ஜெபியுங்கள்.
3.தமிழக மக்களுக்காகவும், முதலமைச்சர் மற்றும்
அமைச்சர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்காகவும்
அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபியுங்கள்.
4.நீங்கள்
வசிக்கும் ஊரில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காகவும், ஊர் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்காகவும்
ஜெபியுங்கள். துப்புரவு தொழிலாளி போன்ற கடைநிலை ஊழியர்களுக்காகவும் ஜெபியுங்கள்.
5.நீங்கள்
வசிக்கும் தெருவில் உள்ள மக்களுக்காகவும், அவர்கள் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும்
ஜெபியுங்கள். (முடிந்தால் பெயர்களை எழுதி ஜெபியுங்கள்).
6.உங்கள் வீட்டின் பக்கத்தில் மிக அருகில்
வசிப்பவர்களின் குடும்ப இரட்சிப்பிற்காக பெயர்களை எழுதி ஜெபியுங்கள். மேலும் அவர்களை
ஆசீர்வதித்து ஜெபியுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆசீர்வாதம் தடைப்பட்டிருந்தால் அதற்காக
ஊக்கமாக ஜெபியுங்கள். அவர்களுடன் சண்டை என்றால் ஒப்புரவாகுங்கள் அல்லது ஒப்புரவாக ஜெபியுங்கள்.
7.உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்காகவும்,
அவர்கள் இரட்சிக்கப்படாமல் இருந்தால் இரட்சிக்கப்படுவதற்காகவும் ஜெபியுங்கள். அவர்கள்
எல்லோரையும் ஆசீர்வதித்து ஜெபியுங்கள். (தாய், தகப்பன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
மாமனார், மாமியார் மேலும் உங்கள் வீட்டில் உங்களுடன் வசிக்கும் நபர்கள்) கண்டிப்பாக
பெயர்களை எழுதி ஜெபியுங்கள்.
8.உங்களுக்கு மிகமிக நெருங்கின இரத்த சம்பந்தமான
உறவினர்களின் குடும்பங்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும்
அவர்களின் பெயர்களை எழுதி ஜெபியுங்கள். (சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா,
மாமா, அத்தை என உங்களுடன் வசிக்காத உறவினர்கள்).
9.சொந்த அண்ணன் தம்பிகளுக்குள் ஏதேனும் சண்டை,
பிரச்சனை இருப்பின் அவர்களை மன்னித்து ஆசீர்வதித்து ஜெபியுங்கள். கண்டிப்பாக அவர்களுடன்
ஒப்புரவாகுங்கள் அல்லது ஒப்புரவாக ஜெபியுங்கள்.
10.நீங்கள் யாரையாவது சபித்திருந்தாலோ, கோபப்பட்டு
எரிச்சலினால் மனம் புண்படும்படி பேசியிருந்தாலோ, குறைச்சொல்லியிருந்தாலோ அவர்களின்
ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள். கண்டிப்பாக அவர்களுடன் சமாதானமாகுங்கள் அல்லது சமாதானமாக
ஜெபியுங்கள்.
11.உங்களுடன் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளின்
இரட்சிப்பிற்காகவும், அவர்களின் குடும்ப இரட்சிப்பிற்காகவும், குடும்ப உறுப்பினர்களின்
பெயரை எழுதி ஜெபியுங்கள்.
12.உங்கள் உறவினர்கள் அல்லது உங்கள் தெருவில்
உள்ளவர்கள் யாரேனும் ஏதாவது விடமுடியாத பாவ வாழ்க்கையில் (மதுபானம், விபச்சாரம் மற்றும்
பல….) சிக்கியிருந்தால் அவர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காகவும், இரட்சிக்கப்பட
வேண்டும் என்பதற்காகவும் ஜெபியுங்கள்.
13.நீங்கள் செல்லும் சபைக்காகவும், சபை வளர்ச்சிக்காகவும்,
ஆவிக்குரிய எழுப்புதல் அடைய வேண்டும் என்பதற்காகவும், சபையின் பொருளாதார தேவைகளுக்காகவும்,
சபையில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபியுங்கள்.
14.உங்கள் சபையின் போதகர், மேய்ப்பர், குருவானவர்,
சபை ஊழியர் ஆகியோர் குடும்பங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தேவன் இன்னும் பயன்படுத்த
வேண்டும் என்பதற்காகவும் ஜெபியுங்கள் இவர்களில் யாரையாவது குறைச்சொல்லியிருந்தால் அறிக்கை
யிட்டு ஜெபம் பண்ணுங்கள். கண்டிப்பாக மன்னிப்பு கேட்டு ஜெபியுங்கள். அவர்களிடம் ஒப்புரவாகுங்கள்.
15.நீங்கள் செல்லும் சபையின் விசுவாசிகள் யாராவது
நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது பணக்கஷ்டத்தில் இருந்தால் அல்லது சபைக்கு வராமல் பின்மாற்றமாகி
இருந்தால் அவர்கள் நிலைமை மாறவேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள்.
16.தேசத்தில் நடக்கும் மற்ற ஊழியங்களுக்காகவும்,
ஊழியத்தின் தேவைகளுக்காகவும், அதில் உள்ள ஊழியக்காரர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபியுங்கள்.
(உங்களுக்கு தெரிந்த ஊழியங்களின் பெயரை எழுதிக்கொள்ளுங்கள்).
17.ஏதாவது ஒரு ஊழியத்தை குறித்தோ அல்லது ஊழியக்காரரை
குறித்தோ குறைச்சொல்லி இருந்தாலோ அல்லது நியாயம் தீர்த்தாலோ அதை அறிக்கையிட்டு ஜெபம்
பண்ணுங்கள் அவர்களையும் அவர்களின் ஊழியத்தையும் ஆசீர்வதித்து ஜெபம் பண்ணுங்கள்.
18.தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற இந்த ஊழியங்களுக்காகவும், தேவன் இதைக்கொண்டு
பரலோகத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், இதனோடு இணைந்துள்ள ஊழியர்களுக்காகவும்,
அவர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் குடும்பங்களுக்காகவும், ஊழிய தேவைகளுக்காகவும்
ஜெபியுங்கள்.
19.அறுப்பு மிகுதி ஆட்களோ குறைவு எனவே திரளான
ஊழியர்கள் எழும்ப வேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள்.
20.இன்னும் தேசத்தில் செய்யப்படாத ஊழியங்கள்
நிறைய உள்ளன. சந்திக்கப்படாத மக்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே தேவன் என்னை ஆசீர்வதித்தால்
அல்லது எனக்கு ஒரு அற்புதம் செய்தால் தேவனுடைய ஊழியத்தை பணத்தால், உழைப்பால், ஜெபத்தால்
தாங்குவேன் என்று தீர்மானம் எடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
21.பார்வையில் பரிசுத்தம், பேச்சில் பரிசுத்தம்,
சிந்தையில் பரிசுத்தம், செயல்களில் பரிசுத்தம் பெற வேண்டும் என்பதற்காகவும், பரிசுத்த
வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுக்கின்றேன் என்றும் அர்ப்பணித்து ஜெபியுங்கள். மேலும் கடைசிக்கால
அபிஷேகத்தைப் பெறவும் ஜெபியுங்கள்.
22.அதிகமான மனத்தாழ்மை வரவேண்டும் என்பதற்காகவும்,
ஏதேனும் பெருமையான எண்ணங்கள் இருப்பின் உங்களை ஆராய்ந்துப் பார்த்து ஒப்புக்கொடுத்து
ஜெபம் பண்ணுங்கள்.
23.கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதற்காகவும், முதன்முதலாக தேவனுடைய இராஜ்ஜியத்தையும்
அவருடைய நீதியையும் தேடுகின்றவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவும், உங்களையும் உங்கள்
குடும்பத்தையும் அர்ப்பணித்து ஜெபம் பண்ணுங்கள்.
24.உங்களிடத்திலும்,
உங்கள் குடும்பத்திலும், வேலையிலும், தொழில்களிலும் முழுவதுமாக தேவத்திட்டம் நிறைவேற
வேண்டும் என்றும், சொந்த விருப்பம் நிறைவேற வேண்டாம் என்றும் ஒப்புக்கொடுத்து ஜெபம்
பண்ணுங்கள்.
25.உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள்
அல்லது உங்கள் தெருவில் உள்ளவர்கள் யாருக்காவது குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்களுக்காக
ஊக்கமாக பெயரை எழுதி வைத்து ஜெபம் பண்ணுங்கள்.
26.உங்களுக்கு தெரிந்தவர்களில் யாருக்காவது
திருமணத்தடை காணப்படுமானால் அவர்கள் பெயரை எழுதி வைத்து திருமணத் தடை மாற வேண்டும்
என்பதற்காக ஜெபியுங்கள்.
27.உங்களுக்கு தெரிந்தவர்களில் யாராவது குடும்ப
பிரச்சனைகளின் நிமித்தம் கணவன்-மனைவி பிரிந்து இருந்தால் அவர்கள் பெயரை எழுதி வைத்து
சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள்.
28.உங்களுக்குத் தெரிந்தவர்களில் யாராவது வறுமையிலும்,
பணக்கஷ்டத்திலும் இருந்தால் அவர்கள் பொருளாதார நிலைமை மாற வேண்டும் என்றும், நன்றாக செழிப்பாக இருக்கவும் ஜெபியுங்கள்.
29.உங்களுக்கு தெரிந்தவர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டு
இருந்தால் அவர்கள் பரிபூரண சுகம் அடைய வேண்டும் என்பதற்காக பேரை எழுதி வைத்து ஜெபியுங்கள்.
30.உங்கள் தெருவில் அல்லது வீட்டின் அருகில்
விதவை, திக்கற்றப் பிள்ளைகள், ஏழைகள், வீடுகள் இல்லாதோர் இருந்தால் அவர்களுக்காக ஜெபியுங்கள்.
31. கடைசியாக உங்கள் ஜெபவிண்ணப்பத்தினையும்,
எந்த காரியத்தில் அற்புதங்களுக்காக காத்திருக்கின்றீர்களோ அதை எழுதி வைத்து அதற்காக
ஊக்கமாக தேவச்சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து தினந்தோறும் ஜெபியுங்கள். (கண்டிப்பாக
எழுத வேண்டும்) தேவன் அற்புதம் செய்தால் உடனே சாட்சிகளை எங்களுக்கு தெரிவியுங்கள்.
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment