எகிப்தியரின் ஆவி
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! எகிப்தியரின் ஆவி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை
கிளிக் செய்து ஆவலாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களையும் உங்கள்
குடும்பத்தையும் ஆதியாகமம் 12:2,3 என்ற வாக்குத்தத்ததின் படி ஆசீர்வதிப்பாராக.
ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் வெவ்வேறு சுபாவங்கள் உண்டு.
அவைகளின் மூலமாக வெளியேறும் ஆவிகளுக்கும் அதே சுபாவம் காணப்படும். உதாரணமாக
வலுசர்ப்பத்தின் மூலமாக வெளியேறும் வலுசர்ப்பத்தின் ஆவிக்கு, வலுசர்ப்பத்தின்
சுபாவங்கள் அப்படியே காணப்படும். வலுசர்ப்பத்தின் கிரியைகளை அது நடப்பிக்கும்.
அதேபோல் எகிப்தியரின் ஆவி என்று ஒன்று உள்ளது. அந்த ஆவியை குறித்து அறிந்துகொள்வது
மிக அவசியம். ஏனெனில், அது இக்காலத்தில் கிரியை செய்து குடும்பங்களை
பிரிக்கின்றது. இந்த தீர்க்கதரிசன தியானத்தில் எகிப்தியரின் ஆவியைக் குறித்தும்
அது எப்படி கிரியை செய்கின்றது என்பதனை குறித்தும் கொஞ்சம் விரிவாக தியானிப்போம்
ஜெபத்துடன் வாசியுங்கள்.
தேசத்திலே பஞ்சம் உண்டானவுடன் எகிப்து தேசத்தில் தங்கும்படி ஆபிராம்
அவனுடைய மனைவியாகிய சாராய் உடன் சென்றான். சாராய் பார்வைக்கு அழகுள்ள பெண்ணாக
இருந்தாள். எனவே, ஆபிராம் தன் மனைவியை பார்த்து எகிப்தியர் உன்னை பார்க்கும் போது,
நீ என் மனைவி என்பதனை அறிந்து, என்னை கொன்றுபோட்டு உன்னை உயிரோடு வைப்பார்கள்
என்று சொல்லி, உன் நிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படி, நீ உன்னை என் சகோதரி
என்று சொல் என்றான். இதை ஆதியாகமம் 12-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
அதாவது,
எகிப்தியர் பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீயை இச்சித்து, அவளுடைய கணவனை கொலை
செய்துவிடுவார்கள். எகிப்து என்பது பாவம் இருக்கும் இடமாகும். பாவத்தில் ஊரி
இருக்கும் மனிதர்கள் அப்படித்தான் செய்வார்கள். இன்றைக்கும் நாம்
வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகமும் பாவம் நிறைந்த உலகம்தான். இங்கேயும்
எகிப்தியர் வாழ்கின்றார்கள். அவர்கள் மூலமாக எகிப்தின் ஆவி கிரியை செய்கின்றது.
அது எப்படி கிரியை செய்கின்றது? பார்வைக்கு அழகுள்ள ஸ்திரியை இச்சிக்க செய்து,
அதனை அடையத் துடிப்பதும், அதற்கு தடையாக உள்ள அவளுடைய கணவனை கொலை செய்வதும்
எகிப்திய ஆவியின் கிரியை ஆகும்.
இந்த ஆவியினால் ஒரு பெண் தாக்கப்பட்டாள் என்றால் அவளுடைய கணவன் பாதிக்கப்படுவான்.
அவனை தரித்திரம், நோய், அடிமைத்தனம் சூழ்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மரணத்திற்கு
நேராக நடத்தும். அவன் வேலைக்கு செல்லாமல் தறுத்தலையாக ஊர் சுற்றுவான்.
குடிவெறிக்கும், விபச்சாரத்திற்கும், போதைவஸ்துக்கும் அடிமையாகிவிடுவான். இப்படி
இறந்த கணவன்மார்களும் உண்டு.
இந்த
ஆவியை குறித்து ஆவிக்குரிய குடும்ப பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எங்கேயோ, எப்போதோ ஒரு ஆண்மகன் இச்சையோடு பார்த்தாலே, அது எகிப்தியரின் ஆவி என்று
அறிந்து, கடிந்து துரத்த வேண்டும். அதை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஜெயமெடுக்க வேண்டும்.
இல்லையேல் குடும்பத்தில் இந்த ஆவிகள் சில சில பாதிப்புகளை கொண்டு வரும்.
எனவே,
தேவனுடைய பிள்ளைகள் இக்காரியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமான
ஒன்றாகும். எதையும் சாதாரணமான பார்வை
என்று உதாசினப்படுத்த வேண்டாம்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற
இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE
செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.Click here
Thank you my Lord Jesus 🙏 intha vasanam thanthaku
ReplyDelete