நல்ல ஊழியன்

Free stock photo of worship

          சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். நல்ல ஊழியன் என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யோவான் 12:26-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

       தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பணிவிடை செய்ய பரலோக அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் உத்தமமும், உண்மையுமுள்ளவர்கள் என்ற சாட்சியினை பரலோக எஜமானால் பெறுவது மிக அவசியம். இந்த சாட்சியை பெறவேண்டுமென்றால் சில தகுதிகள் தேவை. அவற்றுள் ஒரு முக்கியமான தகுதியை குறித்து தாவீதின் படைத்தளபதி யோவாபின் வாழ்க்கையில் இருந்து தியானிக்கலாம். ஜெபத்துடன் இதை வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் சத்திய வசனத்தின் மூலம் பேசுவார். நீங்களும் நல்ல ஊழியக்காரர்களாக மாறுவீர்கள்.

       இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

   பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலின் அரசனாக தாவீது இருந்தான். இவனுக்கு படைத்தளபதியாக ஊழியம் செய்துகொண்டிருந்தவன் யோவாப் ஆவான். இவன் அம்மோன் புத்திரருடைய ரப்பா பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதை பிடித்தான். இதற்கு பின்பு அவன் தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி “நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான்” இதை 2சாமு 12:27,28-ல் வாசிக்கலாம்.

       அதாவது, யோவாப் ஏற்கனவே யுத்தம்பண்ணி பட்டணத்தை பிடித்துவிட்டான். ஆனாலும், மக்கள் அவனை புகழ்ந்து, அவன் பேரை வழங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், இராஜாவின் பேரை கனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இராஜாவை அழைப்பித்தான். இவனுடைய செயல் நல்ல செயலாக இருந்தது.

   அதேபோல், தேவனுடைய பிள்ளைகளுக்கு ஊழியம் செய்யும்போது அற்புதங்கள், அதிசயங்களை ஊழியக்காரர்களை கொண்டு சர்வவல்ல தேவன் செய்வார். இதில் அந்த ஊழியக்காரர்களின் பெயர் வழங்காதபடிக்கு தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கதிகமாக தன்னை மறைத்து பரலோக தேவனின் நாமத்தையும், குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தையும், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தையும் வெளிப்படுத்துகின்றார்களோ அவர்கள் உண்மையும், உத்தமுமான ஊழியக்காரர்கள் என்ற பெயரினை சீக்கிரமாக பெறுவார்கள்.

     இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற நீங்களும் ஏதோ ஒரு ஊழியத்தினை செய்துகொண்டிருக்கலாம். ஊழியத்தில் என்ன செய்தாலும் தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை வருகின்றதா? என்று ஆராய்ந்துபார்க்க வேண்டும். ஊழியம் செய்கின்ற நாம் சிறுக வேண்டும். அவரோ பெருக வேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இருக்க வேண்டும். இப்படி ஊழியம் செய்தால் நல்ல ஊழியர்கள் என்ற சாட்சியினை பெறுவோம்.  பரலோக தேவனின் மகிமையை தொடாமல் இருக்கின்றவர்கள் நல்ல ஊழியக்காரர்கள்.

  (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ClicK here

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்ClicK Here

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் பெற இதை கிளிக் செய்யுங்கள்.

Comments

  1. I would likely to get this daily devotional message on my whst'sapp number 7358411670.
    I tried on the form provided. All the required colour filled up and finally asked for signature. But to sing on the provided slot / box could not sign. During the virtue of signing the form moving. So unable to sign. This incomplete the form and I am unable to sent.
    So I request you Pls send me the daily devotional message to my what'sapp number. +91 7358411670
    Thank you

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..