ஆவி பயிற்சி

மனிதனுக்கு ஆவி, ஆத்துமா, சரீரம் வலிமையாகவும்,
பெலமுள்ளதாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்ச்சி செய்கின்றோம். உடற்பயிற்ச்சி
செய்வதினால் உடல் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்பது
மருத்துவர்களின் கூற்று. அதேபோல் ஆவி பயிற்ச்சி என்று ஒன்று உள்ளது. இதை
செய்வதினால் ஆவி வலிமையுள்ளதாகவும், பெலமுள்ளதாகவும், ஆரோக்கியமுள்ளதாகவும்
இருக்கும். ஆவி பயிற்ச்சியா? புதுசா இருக்கு என்று நீங்கள் கேட்கலாம். ஆவிக்குரிய
பயிற்ச்சி என்றால் என்ன? அதை எப்படி தினமும் செய்ய வேண்டும் என்பதனை குறித்துதான்
இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் இதை வாசியுங்கள்.
ஆவி பயிற்ச்சியை குறித்து பரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுப்பார். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு
மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
சரீரத்தில் பல
செல்கள் உள்ளன. தினமும் உடற்பயிற்ச்சி செய்வதினால், சரீரத்தில் உள்ள அனைத்து
செல்களும் சீராக இயங்கும் மற்றும் அனைத்து உறுப்புகளுக்கும் மாம்சத்தின் உயிராகிய
இரத்தம் சீராக செல்கின்றது. எனவே, சரீரம் ஆரோக்கியமாகவும், பெலமுள்ளதாகவும்
இருக்கின்றது.
அதேபோல் ஆவியில்
பல வரங்கள், தாலந்துகள் உள்ளன. பரலோகம் இதைக் கொடுத்துள்ளது. அந்த வரங்களையும்,
தாலந்துகளையும் இயங்கச்செய்து பயன்படுத்துவது ஆவிப்பயிற்ச்சி எனப்படும். அப்படி
இயங்க செய்வதினால் ஆவி பெலமுள்ளதாகவும், வலிமையாகவும், ஆரோக்கியமுள்ளதாகவும்
இருக்கும்.
எப்படி இந்த ஆவி பயிற்ச்சியை செய்யலாம் என்று
பார்த்தால், தேவபிரசன்னம் நிறைந்த ஜெபவேளைதான் ஆவிக்குரிய பயிற்ச்சிகளை செய்கின்ற
இடம். தினமும் ஜெபவேளையில் தாலந்துகள் மற்றும் ஆவிக்குரிய வரங்களை அனல்முட்டி
பயன்படுத்த வேண்டும். அந்நிய பாஷை பேசுதல், பற்பல பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம்
உரைத்தல் போன்ற பல வரங்களையும், பாடுதல், ஆராதனை செய்தல், எழுதுதல் போன்ற பல
தாலந்துகளை பரலோகம் கொடுத்திருக்கும். தேவ பிரசன்னத்தில் இவை அனைத்தையும் தினமும்
பயன்படுத்த வேண்டும். நன்றாக கவனியுங்கள் தினமும் பயன்படுத்த வேண்டும்.
அனேக
விசுவாசிகள் மற்றும் ஊழியக்காரர்கள் செய்கின்ற பொதுவான தவறு என்னவென்றால், ஏதாவது
ஒன்றை மட்டும்தான் ஒருநாள் பயன்படுத்துவார்கள். மற்ற தாலந்துகள் மற்றும் வரங்களை
பயன்படுத்தாமல் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல தாலந்துகள் மற்றும் வரங்கள்
மங்கிவிடும். இதனால் ஆவி வலிமை இழந்து பலமிழந்துவிடும். இந்த நேரத்தில் பிசாசு
தாக்குதல்கள் இருக்கும். எனவே, தினமும் கொடுக்கப்பட்டுள்ள தாலந்துகள் மற்றும்
வரங்களை பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக,
ஒருவருக்கு அந்நிய பாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் உரைத்தல் ஆகிய இரண்டு ஆவிக்குரிய
வரங்களையும், வேதத்தினை ஆராய்ச்சி செய்தல், ஆவிக்குரிய கட்டுரைகளை எழுதுதல் போன்ற
தாலந்துகளையும் பரலோகம் கொடுத்திருக்கலாம். இந்த நான்கையும் சரியாக தினமும்
பயன்படுத்த வேண்டும். காலையில், மாலையில், மதியம் என எந்த வேளையிலும் பயன்படுத்த
வேண்டும். இப்படி பயன்படுத்துவதால் வரங்கள் மற்றும் தாலந்துகள் மங்காது. ஆவி
பயிற்ச்சி பெறும்.
தினமும் ஆவிக்கு
பயிற்ச்சி கொடுப்பதன் மூலம் ஆவி வலிமையை பெறும். இதனால், சின்ன சின்ன பாவங்கள்
இச்சைகளில் விழுந்துபோகாமல் அதை எளிதாக மேற்கொண்டு ஜெயமெடுக்கலாம்.
எனவே, தேவனுடைய
பிள்ளைகள் தினமும் ஆவிக்குரிய தாலந்துகள் மற்றும் வரங்களை பயன்படுத்த
ஒப்புக்கொடுங்கள். ஆவியை வலிமையுள்ளதாக பெலப்படுத்துங்கள். பாவங்களை
மேற்கொள்ளுங்கள். தேவனுடைய நாமத்தினை மகிமைப்படுத்துங்கள். சதாகாலமும் தேவனுக்கே
மகிமையுண்டாகட்டும்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற
இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE
செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube
–ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
Really it is very useful .
ReplyDeletePraise the Lord.இந்த தீர்க்கதரிசன வார்த்தை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. God Bless. You Brother.
ReplyDeleteAmen, praise the Lord 🙏
ReplyDeleteAvi Athuma enraal enna
ReplyDelete