இவனுக்கா இப்படி?
நியாயாதிபதிகள்
19:1 ல் எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான் என்று
வாசிக்கின்றோம். அவன் நல்ல சுபாவம் உள்ள மனிதன் அவனிடம் தெய்வீக சுபாவம் காணப்பட்டது.
அந்த லேவியன்
பெத்லேகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான். அவளோ
அவனுக்கு துரோகம் செய்தாள். பிறர் முகம் பார்த்து விபச்சாரம் செய்தாள். தன் தகப்பன்
வீட்டிற்கு சென்று நான்கு மாதங்கள் இருந்தாள்.
அவள் புருஷனோ
அவளை ’எப்படியும் போ என்று சொல்லி’ தள்ளிவிடாமல் அவளோடு நல்ல வார்த்தைகளைச் சொல்லவும்
மறுபடியும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வரவும் அவள் வீட்டிற்கு சென்றான். உண்மையிலே
அவனுடைய மனது மிகவும் பெரியது. யாருக்குமே இந்த நல்ல குணம் இருக்காது. இப்படிப்பட்ட
நல்ல குணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்றைய விசுவாசிகள் ஜெபிக்க வேண்டும். இந்தக்
குணம் பாராட்டுதற்குரியது.
இந்தத் தீர்க்கதரிசன
செய்தியில் இதைக் குறித்து நாம் விரிவாக தியானிக்கப் போவதில்லை. இவ்வளவு நல்ல சுபாவத்தைக்
கொண்ட இந்த லேவியனுக்கு தன்னுடைய மறுமனையாட்டி
எப்படி துரோகம் செய்தாள்? இந்த நல்லவனை விட்டுவிட்டு எப்படி பிறர் முகம் பார்த்தாள்?
நல்ல கணவர்களை விட்டு விட்டு மனைவிமார்கள்
பிறர் முகம் பார்க்க காரணம் என்ன? என்பதனைக் குறித்து இதில் விரிவாக தியானிக்கப்
போகின்றோம். இதில் நிறைய ஆவிக்குரிய அர்த்தங்கள் உள்ளன. கொஞ்சம் ஜெபத்துடன் வாசியுங்கள்.
CONCUBINE என்ற
ஆங்கில பதத்திற்கு மறுமனையாட்டி என்றும் காமக்கிழத்தி என்றும் தமிழில் அர்த்தம் உள்ளது.
Ambilified Bible ல் of inferior status
than a wife என்று கூறியுள்ளது. அதாவது மனைவியை விட தாழ்ந்த நிலை ஆகும். மறுமனையாட்டி
என்பவள் மனைவியை விட தாழ்ந்த நிலையில் நடத்தப்படுபவள்.
நல்ல சுபாவத்தைக்
கொண்ட அந்த லேவியன், பெத்லேகம் ஊராளாகிய அந்த ஸ்திரீயை மனைவியாக்கிக் கொள்ளாமல் மறுமனையாட்டியாகக்
கொண்டான். அதாவது மனைவியை விட மிக மோசமாக தாழ்வான நிலையில் நடத்தினான். மனைவிக்குரிய
எந்த அந்தஸ்தையும், மதிப்பையும், கனத்தையும் கொடுக்கவில்லை. மனைவியைப் போல் நேசிக்கவில்லை.
ஒருவேளை காமஇச்சைக்கும், வீட்டு வேலைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தியிருக்கலாம். இந்தக்
காரணத்திற்காகக் கூட அவனுடைய மனைவி அவனுக்கு விரோதமாக துரோகம் செய்திருக்கலாம்.
இன்றைய நாட்களிலும்
கூட நிறைய குடும்பங்களில் இப்படிப்பட்ட கணவன்மார்கள் உள்ளார்கள். நல்ல சுபாவம் இருக்கும்,
நல்ல குணம் இருக்கும், அன்புள்ளவர்களாக இருப்பார்கள், மன்னிக்கின்ற தன்மைக் காணப்படும்.
ஆனால், தனக்கென்று தன் சரீரமாக தேவன் கொடுத்த மனைவியை தனக்கு அடிமையாக நடத்துவார்கள்.
மனைவியைப் போல் நேசிக்காமல் ஒரு மறுமனையாட்டியாக பார்ப்பார்கள். காமஇச்சைகளை தீர்ப்பதற்கு
மாத்திரமே பயன்படுத்துவார்கள். அவர்கள் பார்வையில் மனைவி என்பவள் வீட்டு வேலைகளைச்
செய்யும் ஒரு கருவி. சிலருக்கு வேலைக்கு சென்று சம்பளத்தைக் கொண்டு வரும் பணங் காய்க்கும்
மரம் அவ்வளவுதான்.
இப்படிப்பட்டவர்களுக்கு
மனைவி என்ற வடிவில் காணப்படும் மறுமனையாட்டிகள் சீக்கிரத்தில் பிறர் முகம் பார்த்து,
ஆசை மற்றும் இச்சைகளுக்கும், மற்றவர்கள் காட்டும் அன்புக்கும் இணங்கி, துரோகம் செய்து
விடுவார்கள். ”எவ்வளவு நல்ல மனுஷன் நீ; ஈ, எறும்புக்குக் கூட துரோகம் பண்ணமாட்டியேபா;
உனக்கா இந்த நிலமை; உனக்கா இப்படிப்பட்ட மனைவி” என்று உறவினர்கள் சொல்லும் நிலைக்கும்,
இவனுக்கா இப்படி என்று ஊரார் சொல்லும் நிலைக்கும் அந்த நல்ல மனிதன் தள்ளப்படுவான்.
உண்மையிலே நீங்கள்
நல்ல சுபாவம் கொண்டவர்தான் சார். உங்கள் Character நல்ல Character
தான். உங்களுக்கு தேவன் தந்த மனைவியை எப்படி பார்க்கின்றீர்கள்? உங்கள் சரீரமாக
பார்க்கின்றீகளா? உங்களுக்கு தேவன் தந்த பொக்கிஷமாக பார்க்கின்றீர்களா? நல்ல மனைவியாக
பார்க்கின்றீர்களா? அல்லது காம இச்சைக்கு பயன்படும் மறுமனையாட்டியாக பார்க்கின்றீர்களா?
கொஞ்சம் உங்களை ஆராய்ந்துப் பாருங்கள்.
மனைவியாகப்
பார்த்தால் உங்கள் குடும்பம் கட்டப்படும். நல்ல சுகம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, சமாதானம்
உங்கள் குடும்பங்களில் காணப்படும். மறுமனையாட்டிப் போல் நடத்தினால், கட்டினக் குடும்பமும்
ஒருவேளை உடைக்கப்படலாம். எனவே, இக்காரியங்களில் மிக எச்சரிக்கையாக இருங்கள். அந்த நல்ல
லேவியன் அந்த ஸ்திரீயை மனைவியாக கொள்ளாமல்
மறுமனையாட்டியாகக் கொண்டான், அவள் அவனுக்கு விரோதமாக விபச்சார துரோகம் செய்தாள்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment