இதுவும் காரணம் தான்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். இதுவும் காரணம் தான் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை 1பேதுரு 3:24-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
கிறிஸ்துவ விசுவாச வாழ்க்கையில் அநேகர் பல நேரங்களில் வியாதிப்படுகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் எப்பாப்பிரோதீத் போன்ற ஊழியர்கள் இந்த வியாதி என்ற பலவீனத்தின் வழியாக கடந்து சென்றனர். (கலாத்தியர் 4:13, பிலிப்பியர் 2:26) இன்றும் அநேக பரிசுத்தவான்களும், விசுவாசிகளும் இப்படியே கடந்து செல்கின்றார்கள். விசுவாசிக்கு வியாதி என்ற பெலவீனம் ஏற்படுவதற்கு பலவகையான காரணங்கள் உண்டு. அவைகளில் கொடுக்கப்பட்டுள்ள வரங்கள் மற்றும் தாலந்துகளை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். இந்தக் காரணங்களைக் குறித்து தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிக்கலாம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தாலந்துகள் பரலோகம் கொடுக்கும் ஒரு ஈவு. இது பிசாசின் இராஜ்யத்திற்கு முடிவு கட்டப் பயன்படும் ஆயுதங்கள் ஆகும். அதனால் ஆவிக்குரிய வரங்கள் அல்லது தாலந்துகள் இருக்கும் விசுவாசிகளை எதிரியாகிய பிசாசு தன்னுடைய இலக்காகப் பார்ப்பான். அவர்களை வீழ்த்துவதற்கு குறி வைப்பான். எப்படியாவது வரங்களையும், தாலந்துகளையும் பயன்படுத்தக்கூடாதபடிக்கு பல வழிகளில் தடுப்பான் அதில் ஒன்றுதான் வியாதியைக் கொடுத்து சரீரத்தை பெலவீனப்படுத்துவது. சரீரத்தில் ஏதோ ஒரு வியாதி கொடுத்து சோர்வடையச் செய்து பெலவீனப்படுத்துவதினால் அநேகர் ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக தீராத வியாதியைக் கொடுத்து ஆளுகை செய்வான் நிரந்தரமாக பயன்படுத்தக்கூடாதபடிக்கு தடை செய்வான் இது பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும்.
எந்த பிரச்சனைகள் வந்தாலும், பெலவீனங்கள் வந்தாலும், சோர்வுகள் வந்தாலும் பரலோகம் ஈவாக கொடுத்த வரங்களையும், தாலந்துகளையும் பயன்படுத்துவேன் என்று உறுதியாக நிற்கும் போதும், உறுதியாக பயன்படுத்தும் போதும் பிசாசினால் நிரந்தரமாக ஆளுகை செய்யவே முடியாது. நோய் என்ற வடிவில் சரீரத்திர்குள் இருக்கும் அவன் சரீரத்தினை விட்டு வெளியே சென்றுவிடுவான்.
இதை வாசித்து தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் சரீரத்தில் தீராத நோய் என்ற வடிவில் பிசாசு ஆளுகை செய்கின்றானா? பரலோகம் தந்துள்ள ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்த தடை உள்ளதா? அப்படி இருந்தால் எந்த சூழ்நிலையிலும் ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று ஒப்புக்கொடுங்கள். உறுதியான தீர்மானம் எடுங்கள் தீராத வியாதியிலிருந்து விடுதலைப் பெறுவீர்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
Comments
Post a Comment