சோதோமில் மிகப்பெரிய அழிவு


லோத்தின் குடும்பத்தினர் மட்டுமே தப்பினார்கள்          

     பாவங்கள் பெருகுவதைப் பார்க்கும்போது நாம் வாழ்வது கடைசி நாட்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. கடைசி நாட்களில் லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவே நடக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்.(லூக்கா 17:28). லோத்து சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டு அங்கே வாழ்ந்தான். சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கப்படும்போது லோத்துவும், லோத்தின் குடும்பத்தார்கள் மட்டுமே அந்த அழிவிலிருந்து தப்பினார்கள்.

 செழிப்புள்ள பட்டணங்கள்       

  சோதோம் கொமோரா பட்டணங்கள் கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தை போலவும் செழிப்புள்ளதாக இருந்தன. ஆபிராமை விட்டு லோத்துப் பிரிந்துச் செல்லும்போது தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து; சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். அங்கே குடும்பத்தோடு வாசம் செய்தான்.(ஆதி 13:9-12)

கூக்குரல் பெரிதாக இருந்தது    

    சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மிகப்பெரிய மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.(ஆதி 13:13) பாவங்களை தாறுமாறாக செய்துகொண்டிருந்தார்கள். பாலியல் வெறியாட்டங்கள் அங்கே அதிகமாக காணப்பட்டது. ஓரினைச்சேர்க்கைப் பாவம்,   வன்புணர்வு, கூட்டம் கூட்டமாக பாலியல் புணர்ச்சி செய்தல் போன்ற தாறுமாறான பாவங்கள் அந்தப் பட்டணத்தில் காணப்பட்டது. இதனால், அப்பட்டணங்களின் கூக்குரல் தேவசமூகத்தில் மிகப்பெரிதாக இருந்தது.(ஆதி 18:20)

நீதிமான்

           அப்பட்டணத்தில் முழுக்க முழுக்க அசுத்த ஆவிகள் நிரம்பியிருக்கும். பாலியல் உணர்வுகளை தூண்டும் ஆவிகள் அதிகமாக கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். ஆனாலும், அங்கு வாழ்ந்த லோத்தை பரிசுத்த வேதம் நீதிமான் என்று அழைக்கின்றது. (2 பேதுரு 2:8) காரணம் என்ன? எவ்வளவு அசுத்த ஆவிகள் அங்கே கிரியை செய்தாலும், எவ்வளவு உணர்ச்சிகள் தூண்டப்பட்டாலும், அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால்  வருத்தப்பட்டு நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டதினால் அவனால் துணிந்து பாவம் செய்ய முடியவில்லை. பரிசுத்தமாக தன்னை பாதுகாத்துக் கொண்டான்.

 லோத்தின் குடும்பத்திற்குள் பாவம் வரவில்லை       

   அசுத்தங்கள் நிறைந்த சோதோம் பட்டணத்தில் வாழும்போது, லோத்து பரிசுத்தமாக தன்னை பாதுகாத்து கொண்டதினாலும், அக்கிரம கிரியைகளைக் காணும்போதும், கேட்கும்போதும் நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டதினாலும் இரண்டு பிள்ளைகளும், அவன் மனைவியும் அங்கு இருக்கும் வரை எந்த ஒரு பாவமும் செய்யவில்லை. ஒருவேளை அவர்கள் பாவத்தைக் குறித்து உணர்வில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், லோத்தினிமித்தம், துணிகரமாக பாவம் செய்ய அவர்கள் ஒப்புக் கொடுக்கப்படவில்லை. 

அழிவிலிருந்து தப்பினார்கள்        

      சோதோம் மேலும் கொமோராவின் மேலும் வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் கர்த்தர் வருஷிக்கப்பண்ணினார். அந்தப் பட்டணங்கள் அனைத்தையும், எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப் போட்டார். இந்த அழிவிலிருந்து லோத்தின் குடும்பத்தார்கள் தப்பினார்கள். தேவத்தூதர்கள் லோத்தின் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து அவனை பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.(ஆதி 19:16) லோத்து தப்பினான். ஆனால், லோத்தின் மனைவி பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனாள்.  இதற்கு காரணம் வேறு.

 நீங்களும் தப்பலாம்     

       பரலோகத்திலிருந்து பரலோகக் குடிகளுக்கு அனுப்பப்படும் இந்த தீர்க்கதரிசன செய்தி மூலமாக பரிசுத்த ஆவியானவர் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்றார். இந்தக் கடைசிக் காலத்தில் பாலியல் பாவங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அது இன்னும் அதிகமாகவே பெருகும். சோதோம் கொமோரா பட்டணங்கள் போல தாறுமாறான பாவங்களை மக்கள் துணிகரமாக செய்வார்கள். நம் சொந்தக் கண்கள் இதைக் காணும். அந்நேரங்களில் துணிகரமாக இந்த பாவங்களை செய்யாமல், மற்றவர்களைப் பார்த்து பாவம் செய்து பரிசுத்தம் கெட்டுப்போகாமல், நம்மை பாதுகாக்கும் போது, இந்தப் பாவங்கள் நம் குடும்பத்திற்குள் வராது. பாவத்தினிமித்தம் வருகின்ற அழிவிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் தப்பலாம்.

தீர்மானம் செய்யுங்கள்       

  இதை வாசிக்கின்ற இந்த நேரத்திலே இப்பொழுதே ஒரு தீர்மானம் செய்யுங்கள். நான் துணிகரமாக பாவம் செய்ய மாட்டேன் என்று அர்ப்பணியுங்கள். பரலோக தேவன் உங்கள் அர்ப்பணிப்பைப் பார்த்து சோதோமின் பாவங்களுக்கும், அழிவுக்கும் விலக்கி பாதுகாத்து உங்களை ஆசீர்வாதிப்பாராக. ஆமென்.

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 


Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..