Meditation-10

பாதுகாப்போம் ஜெயித்திடுவோம் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாமுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வேலை ஏதேன் தோட்டத்தை பண்படுத்த வேண்டும் அதை பாதுகாக்க வேண்டும் (ஆதி 2:15) சரி யாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்? தோட்டத்திற்குள் எந்தவிதமான காட்டு ஜீவன்களும் வராதபடிக்கும் அந்நிய ஜீவன்கள் வராதப்படிக்கும் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஆதாமோ அந்த வேலையை சரியாக செய்யவில்லை. எனவே, காட்டு ஜீவனை சர்ப்பத்தின் வழியாக பிசாசு தோட்டத்திற்குள் புகுந்து, முதலில் ஏவாளையும் பின்பு ஆதாமையும் வஞ்சித்துவிட்டான். ”தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்” என்று சத்திய வேத வசனம் கூறுகின்றது (1யோவான் 5:18). தேவ பிள்ளைகளாகிய நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒவ்வொரு நாளும் பாதுகாக்க வேண்டும். அப்படி நம்மை பாதுகாக்க தவறினால் பொல்லாங்கனான பிசாசு ஆவி, ஆத்துமா, சரீரத்தை தொட்டுவிடுவான். வியாதி, போராட்டம், உபத்திரவங்களை கொண்டு வந்துவிடுவான். எனவே, ஒவ்வொரு நாளும் நம்மையும், நம் கு...