மருத்துவத்திற்கான வரம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மருத்துவத்திற்கான வரம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை கொலோசெயர் 2:3-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
1 கொரிந்தியர் 12 ல் ஆவிக்குரிய வரங்களைப் பற்றி பரிசுத்த வேதத்தில் வாசிக்கலாம். மொத்தம் ஒன்பது வரங்கள் உள்ளன. ஆவியினுடைய அனுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கு என்று அளிக்கப்பட்டு இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் இந்த ஆவிக்குரிய வரங்களை ஊழியங்களுக்கு மாத்திரமல்ல படிப்பு, தொழில், அரசியல், நிர்வாகம் மற்றும் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் தேவனுடைய நாமம் மகிமைக்காகப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும், தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாகவும் இருக்கும்.
இந்தத் தீர்க்கதரிசனச் செய்தியில் ஒரு மருத்துவர் தன்னுடைய மருத்துவ சேவையில் எப்படி ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தலாம்? என்னென்ன வரங்களைப் பயன்படுத்தலாம்? என்பதனைக் குறித்து விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உதவிச் செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
ஒன்பது வரங்களில் அறிவை உணர்த்தும் வசனம் என்ற வரமும் ஒன்றாகும். இந்த வரம் மிகவும் விலையேறப்பெற்றது. இந்த வரம் ஒரு தேவனுடைய பிள்ளைகளுக்குள் கிரியை செய்யும் போது தனக்கு முன் என்ன இருக்கின்றது, எந்த ஆவி கிரியை செய்கின்றது யாரெல்லாம் இருக்கின்றார்கள் அவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் எந்த ஆவி இருக்கின்றது, என்ன யோசிக்கின்றார்கள், அவர்களுடைய சரீர உறுப்புகளில் என்ன உள்ளது என்பதனை ஆவியில் அறிந்துக் கொள்வார்கள். ஏன் சின்ன வைரஸ் கிருமிகளைக் கூட மிகத் தெளிவாக அறிந்து உணர்ந்துக் கொள்ள முடியும். மொத்தத்தில் Scan செய்யும் கருவிகளை விட மிகத் துல்லியமாகவும், அதிக வல்லமையுள்ளதாக மனிதருக்குள் கிரியைச் செய்யும்.
உதாரணமாக நீங்கள் ஒரு மருத்துவராக இருந்து தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்காக மருத்துவ சேவைகளை பொது மக்களுக்குச் செய்யலாம். அறிவை உணர்த்தும் வசனம் என்ற வரம் உங்களுக்குள் இருந்தால், உங்களிடம் மருத்துவ சேவைகளைப் பெறும் நோயாளிகள் உங்களுக்கு முன் வந்து அமரும் போதே, இந்த வரம் உங்களுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்துவிடும். அவர்களுடைய எந்த உறுப்புகளில் வியாதி உள்ளது. எந்த உறுப்பில் கட்டி உள்ளது, இரத்தக் குழாயில் எங்கு அடைப்பு உள்ளது, எந்த எலும்பு பாதிக்கப்பட்டுள்ளது, இது சாதாரண வியாதியா அல்லது மோசமான வியாதியா என்பதனை Scan மற்றும் X-Ray செய்யாமலே ஆவியில் உணர்த்திவிடும். பின்பு அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சைக் கொடுக்கலாம். தேவையென்றால் X-Ray, Scan செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அந்த Test எடு, இந்த Test எடு என்று அங்கே, இங்கும் அலைக்கழிக்காமல் சரியான நேரத்தில் ஏற்ற சிகிச்சைக் கொடுப்பதினால் சீக்கிரத்தில் அவர்கள் குணமாகி விடுவார்கள். நோயாளிகளுக்கு வீண் செலவும் ஏற்படாது. அப்படி நீங்கள் சரியான சிகிச்சையைக் கொடுத்து, சரி செய்வதினால் மக்கள் மனதில் கைராசியான மருத்துவர் என்ற இடத்தினைப் பெற்றுவிடுவீர்கள். உங்களிடத்தில் வந்தால் எந்த வியாதியும் சீக்கிரத்தில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களுக்குக் கிடைக்கும். எனவே, வியாதிகளினால் பாதிக்கப்பட்ட அநேகர் உங்களைத் தேடி ஓடி வருவார்கள். அனைவரும் சுகம் பெற்று விடுவார்கள். அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தலாம். உங்கள் மருத்துவ சேவை ஆசீர்வதிக்கப்பட்டு எல்லைகள் விரிவாகும். இதனால் தேவனுடைய பரிசுத்த நாமமும் மகிமைப்படும்.
இதைக் கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கலாம் அல்லது மருத்துவம் படித்துக் கொண்டு இருக்கலாம் அல்லது மருத்துவராக மாற வேண்டும் என்று நோக்கம் உடையவராக இருக்கலாம், அல்லது தன்னுடைய மகனையோ, மகளையோ எதிர்காலத்தில் நல்ல ஒரு மருத்துவராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் பெற்றோராகக் கூட நீங்கள் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் அறிவை உணர்த்தும் வசனம் உங்களுக்குள் கிரியை செய்ய வேண்டும் என்பதற்காக கருத்தாக ஊக்கமாக ஜெபியுங்கள். உங்கள் ஜெபத்தைக் கேட்கின்ற தேவன் கண்டிப்பாக, நிச்சயமாக உங்களுக்கு இந்த வரங்களைத் தருவார். உங்களையும் ஆசீர்வதிப்பார். உங்கள் மருத்துவ சேவைகளையும் ஆசீர்வதிப்பார். ஆமென்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Amen
ReplyDeleteAmen alleluia
ReplyDeleteஆமென்
ReplyDelete