ஜெபத்தில் அமைதி

Praying,prayer,hands,application,hands clasped - free image from ...

   

     சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.  ஜெபத்தில் அமைதி என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை உங்கள் குடும்பத்தையும் யோவான் 14:14-ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.        

  நம் தேவன் ஜெபத்தை கேட்கின்றவர் (சங் 65:2). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதை அவர் செய்வார் என்பது ஜெபத்தை குறித்து பரலோகம் கொடுத்த வாக்குத்தத்தம். (யோவான் 14:14) ஆகும். ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கைக்கும் ஜெபம் மிக மிக இன்றியமையானது. ஜெபிக்க வேண்டும் என்ற விருப்பம், வாஞ்சை ஒரு பாரமாக இருக்கும். ஆனால், ஜெபிக்க முடியாமல் இருள் சூழ்ந்த சூழ்நிலை காணப்படும். அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று அங்கலாய்த்து கலங்குவோம். போராட்டமாக இருக்கும். இந்த நேரத்தில்தான் அமைதி ஜெபம் செய்ய வேண்டும். அமைதி ஜெபமா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அமைதி ஜெபம் என்றால் என்ன? அதை எப்படி செய்யலாம்? என்ற இரகசியத்தினை குறித்துதான் இந்த செய்தியில் தியானிப்போம். தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

  நாம் பூமியில் இருக்கின்றோம். நம்முடைய ஜெபம் மூன்றாம் வானத்திலிருக்கிற பிதாவின் சமூகத்திற்குள் செல்கின்றது. ஜெபம் அவர் சமூகத்திற்குள் செல்லக்கூடாதபடிக்கும், அவர் பிரசன்னம் நமக்கு கிடைக்கக்கூடாதபடிக்கும் இரண்டாம் வானத்தில் சூழ்ந்திருக்கின்ற அசுத்த ஆவிகள் தடுக்கும். இதைதான் நாம் அந்தகாரத்தடை என்று அழைக்கிறோம்.

  இந்த நேரத்தில் இருள் சூழ்ந்ததுபோல் காணப்படும். ஜெபிக்க முடியாது, துதிக்கமுடியாது, சர்வவல்ல தேவனை பாடல் பாடி ஆராதிக்க முடியாது. பரிசுத்த வேதத்தினையும் தியானிக்க முடியாது. சோர்வு, அசதி, கனநித்திரை சூழ்ந்துகொள்ளும். பழைய பாவ எண்ணங்கள் மேலோங்கும். பாவ சோதனைகள் வரும். அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பதால், ஜெபவாஞ்சையும் இருதயத்தில் இருக்கும். ஜெபிக்க வேண்டும் என்ற ஆசைவரும் ஆனால் ஜெபிக்க முடியாததினால் ஜெபிக்க வேண்டும் என்கிற பாரம் இருதயத்தினை அழுத்திக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில்தான் அமைதி ஜெபத்தினை செய்ய வேண்டும்.

    அமைதி ஜெபம் என்பது வாயை திறந்து ஒரு வார்த்தைகூட பேசாமல், அமைதியாக சர்வவல்ல தேவனையும், அவருடைய வசனத்தையும், பரிசுத்த வேதவார்த்தைகளையும், தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்களையும் இருதயத்தில் தியானிப்பது ஆகும்.  இதை உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, நடந்துகொண்டோ செய்யலாம். இந்த ஜெபம் செய்யும்போது Whats App, You Tube, Face Book போன்ற Social Media-க்களையும் பார்ப்பதும், ஏதோ ஒரு ஆவிக்குரிய பாடல்களையும், செய்திகளை கேட்பதும், போன்கால் எடுத்து பேசுவதும் கொஞ்சம் Snacks சாப்பிடுவதும் போன்ற எந்த ஒரு காரியத்தினையும் செய்யக் கூடாது. உலக மனிதர்களுடனான தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க வேண்டும். இல்லையேல் இது அமைதி ஜெபமாக இருக்காது. ஓய்வு எடுத்தாற்போல் மாறிவிடும்.

     ஒருமணி நேரம், அரை மணிநேரம் என நம்முடைய நேரத்திற்கு தகுந்தாற்போல் இருக்கலாம். இந்த ஜெபநேரத்தில் ஆவியானவர் நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தின்மேல் அசைவாடி அதில் உள்ள கறைகளை சுத்திகரிப்பார். அந்தகார வல்லமைகளோடு யுத்தம் செய்வார். ஆவியில் யுத்தம் நடக்கும். கடைசியில் நமக்கு விரோதமாக இருந்த அந்தகார கிரியைகள் எல்லாம் அழிக்கப்படும். ஆவியில் ஒரு விடுதலையை உணருவோம்.

   இந்த தீர்க்கதரிசன செய்திகளை ஆவலாய் வாசித்த தேவனுடைய பிள்ளைகளே! ஜெபம் செய்ய வேண்டும், வேதம் வாசிக்க வேண்டும் என்ற பாரம் இருதயத்திலிருந்தும் அங்கலாய்க்கின்றீர்களா? இந்த அமைதி ஜெபத்தினை செய்துபாருங்கள். ஆவியில் ஒரு விடுதலையை பெற்றுக்கொண்டு அந்தகார வல்லமைகளை மேற்கொள்வீர்கள்.

      இந்த செய்தி உங்களோடு பேசியிருந்தால் என்னோடுகூட சேர்ந்து ஒரு நிமிடம் கருத்தாக இந்த ஜெபத்தினை செய்யுங்கள்.

ஜெபம்:-

   எங்கள் அன்பின் பரலோக பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தபடுவதாக. நீர் தந்த இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஸ்தோத்தரிக்கின்றேன். ஜெபத்தில் அமைதி என்ற செய்தியின் மூலமாக என்னோடு பேசினீரே உமக்கு ஸ்தோத்திரம். வாசித்த இந்த செய்திக்கு என்னை ஒப்புக்கொடுக்கின்றேன். ஜெபம் செய்ய முடியாமல் சோர்ந்துபோகும் நேரங்களில் அமைதி ஜெபம் செய்ய கிருபைகளை தாரும். ஆவியில் பெலனடைய உதவி செய்யும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கின்றேன். எங்கள் அன்பின் பரலோக பிதாவே ஆமென்.   

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

English   Hindi

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்  Click here

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..