வச்சவனுக்கு ஆப்பு
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி,
பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். வச்சவனுக்கு ஆப்பு என்ற
தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய்
வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன்தாமே உங்களை எண்ணாகமம் 23:23-ன் படி
ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
கிறிஸ்தவ வாழ்க்கையில் உபத்திரவங்கள், போராட்டங்கள், பிரச்சனைகள், பாடுகள், வியாதிகள் வரும்போது அநேக விசுவாசிகள் யாரோ, எவனோ எனக்கு சூன்யம் வைத்துவிட்டார்கள் அல்லது மாந்தீரீகம் செய்துவிட்டார்கள் என்று கூறுவார்கள். இதை நாம் கேட்டிருப்போம். ”யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை” என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது(எண்ணாகமம் 23:23). அதையும் மீறி தேவனுடைய பிள்ளைகளை அழிக்க நினைக்கும் துன்மார்க்கர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் மூலமாக வரும் சதிகளையும், தந்திரங்களையும் எப்படி மேற்கொள்ளவேண்டும்? என்பதனை இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக
இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள்.
இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
தேவனுடைய பிள்ளைகளின் வளர்ச்சியை கண்ட மனிதர்கள் பொறாமை கொண்டு அழிக்க வேண்டும், ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். கர்த்தருடைய கரம் கூட இருப்பதினால் நேரிடையாக அவர்களால் தாக்க முடியாது. ஆகையால், பில்லிசூன்யம், மாந்திரீகம், செய்வினை, ஏவல் போன்ற மந்திரத்தாக்குதல் மூலமாக முயற்ச்சி செய்வார்கள். மந்திரவாதிகள், சூன்யக்காரர்கள் மூலமாக அசுத்த ஆவிகளையும், குட்டிசாத்தான்களையும் ஏவி விடுவார்கள். இப்படி ஏவி விடும் ஆவிகள் தேவனுடைய பிள்ளைகளின் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் தாக்கி, ஆளுகை செய்து, அடிமைப்படுத்த வரும்.
பொதுவாக தேவனுடைய பிள்ளைகளை சுற்றி பரலோக பாதுகாப்பின் வேலி இருப்பதினால் எளிதில் அவர்களை தாக்க முடியாது. ஆனாலும், அந்த ஆவிகள் தாக்க முயற்ச்சி செய்யும். இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஆவியில், சரீரத்தில் குடும்பத்தில் வரும். வீனான எண்ணங்கள், குழப்பங்கள், எரிச்சல்கள், பாவ இச்சைகள் மேலோங்கி காணப்படும். இந்த நேரத்தில் தேவனுடைய பிள்ளைகள் சோர்ந்துபோகாமல் அந்த ஆவிகளோடு எதிர்த்து போராட வேண்டும். விசுவாசத்தில் நிலைத்திருந்து ஜெயமெடுக்க வேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் யுத்தம் செய்ய வேண்டும். அந்த அசுத்த ஆவிகள் மன்டியிட்டு நான் இனி இங்கே வரமாட்டேன் என்று கதறி சொல்லும் வரை யுத்தம் செய்ய வேண்டும். நாம் யுத்தத்தில் ஜெயமெடுக்கும்போது தோல்வியடைந்த மாந்திரீக ஆவிகள் யார்மூலமாக அனுப்பப்பட்டதோ அந்த நபரையும், எந்த மந்திரவாதி அனுப்பிவிட்டானோ அவனையும் தாக்கி அழித்துவிடும். வச்சவனுக்கு அதுவே ஆப்பாகிவிடும்.
இப்படித்தான் ஒரு பட்டணத்தில் தேவனுடைய பிள்ளைகள் Heart Attack-ல் மரிக்க வேண்டும் என்று ஒரு நபர் மாந்திரீகம் செய்து, அசுத்த ஆவிகளை அனுப்பினார். அது அவர்களை தாக்க முற்பட்டது. தேவனுடைய பிள்ளைகளோ அந்த ஆவியோடு எதிர்த்து நின்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெயமெடுத்தார்கள். முடிவில் மாந்திரீகம் செய்த நபர் Heort Attack-ல் மரித்தார்.
இந்த தீர்க்கதரிசன செய்திகளை கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே? யாரோ மந்திரத்தாக்குதல்களை செய்துவிட்டார்கள் என்று அங்கலாய்க்கின்றாயா? அதனால்தான் என் குடும்பத்தில் போராட்டம் என்று கலங்கி இருக்கின்றாயா? கவலைப்படாதே உன்னோடுதான் பரிசுத்த ஆவியானவர் பேசுகின்றார். உனக்குதான் இந்த ஆலோசனை அந்த அசுத்த வல்லமையோடு விசுவாசத்தில் உறுதியாக நின்று யுத்தம் செய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் ஜெயமெடு. உனக்கு செய்வினை வச்சவன்பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
God bless you trillion by IMMANUELDURAI Thoothukudi
ReplyDeleteHalleluyah God is good all the time....
ReplyDeleteகர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.இந்த தீர்க்கதரிசன செய்திகளுக்காக நன்றி Brother .எப்படி விசுவாசத்தில் இயேசுவின் நாமத்தில் இயேசுவின் இரத்தில்ஜெபிப்பது என்று ஒரு மாதிரிஜெபம் சொல்லிக்கொடுங்க பிரதர் நன்றி.
ReplyDeleteAmen.Praise be to the Lord Jesus Christ.
ReplyDeleteகர்த்தருக்கே எல்லா கனமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக
ReplyDelete