எதை நம்புகின்றோம்?
1 இராஜாக்கள் 19 ஆம் அதிகாரத்தில் எலியா பாகாலின் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தால் கொன்றுப் போட்ட செய்தியை, ஆகாப் மூலமாக யேசபேல் கேள்விப்பட்டாள். அப்பொழுது, எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி ’நாளைக்கு இந்த நேரத்தில் அந்த தீர்க்கதரிசிகளை எப்படி கொன்றாயோ, அப்படியே உன் பிராணனுக்கும் செய்வேன். அப்படி செய்யவில்லையென்றால் தேவர்கள் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்கள்’ என்று சொல்லச் சொன்னாள். அதாவது உன் உயிரை எடுக்கவில்லையென்றால் தேவர்கள் என் உயிரை எடுக்கட்டும் என்று சபதம் இட்டாள்.
இந்த வார்த்தைகள் எலியாவுக்கு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல தீர்க்கதரிசிகளை அவள் பட்டயத்தினால் கொலை செய்திருந்தாள். இது எலியாவுக்கு நன்றாக தெரியும். இந்த சூழ்நிலைகளையும், வார்த்தைகளையும் கேட்ட எலியா இதை ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்டான். உண்மையாகவே அவள் பட்டயத்தினால் கொன்று போடுவாள் என்று எண்ணி, பயந்து, தன்னைக் காக்க யூதாவை சேர்ந்த பெயர்செபாவுக்கு புறப்பட்டுப் போனான். கிட்டத்தட்ட நாற்பது நாளைக்கு பின்பும், அவள் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியாமல், ஆண்டவரின் பிரசன்னத்திற்கு முன்பாகவே இரண்டு முறை என் பிராணனை வாங்க தேடுகின்றார்கள் என்று அறிக்கையிடுகின்றான். கடைசியில் தன்னைக் குறித்து பரலோகம் வைத்திருந்த திட்டத்தினை பாதியிலே இழந்துவிட்டான்.
ஆனால், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதை கவனித்துப்பாருங்கள், வாலிப வயதில் காத் ஊரானாகிய கோலியாத் அவனைப் பார்த்து ’நீ தடியோடு என்னிடத்தில் வருவதற்கு நான் என்ன நாயா’ என்று சொல்லி தன்னுடைய தேவர்களை கொண்டு சபிக்கின்றான். இன்னும் ”என்னிடத்தில் வா நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்று மிரட்டல் விடுகின்றான். சூழ்நிலையை பார்த்தால் அதற்கு ஏற்றார் போல்தான் இருந்தது. ஆனாலும், தாவீது அவன் சொன்ன வார்த்தைகளை நம்பவில்லை. அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மாறாக அந்த பெலிஸ்தனை நோக்கி ’நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று ஒரு பெரிய அறிக்கையை சர்வசாதாரணமாக கூறுகின்றான். அவனுக்கு தைரியமாக எதிர்த்து யுத்தத்திற்கு போகின்றான். முடிவில் கோலியாத்தை வீழ்த்தி ஜெயம் எடுக்கின்றான். (1 சாமுவேல் 17)
இந்த நாட்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாம் எந்த வார்த்தைகளை நம்புகின்றோம் என்பது மிக மிக முக்கியமாகும். உங்கள் சூழ்நிலைகளை காண்பித்து, பிசாசு பொய்களை காதிலே விழச் செய்வான். அதை மனிதர்கள் மூலமாக பேச வைப்பான். இந்த வார்த்தைகளை நம்பி விட வேண்டாம். கண்டிப்பாக நம்ப வேண்டாம். அதற்கு எதிர்த்து நில்லுங்கள். கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தைகளை உறுதியாக பிடியுங்கள். உங்களுக்கு முன்பாக கோலியாத்து வந்தாலும், எந்த யேசபேலின் ஆவி வந்தாலும் நிற்க முடியாது. நீங்கள் ஜெயம் எடுப்பீர்கள். உங்களுக்கு விரோதமாக எந்த மருத்துவமனை ரிப்போர்ட்டும் இருக்க முடியாது.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் திரியேக தேவனுக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
It is usefull for spritual life.Amen
ReplyDelete