ஆத்தும பிணைப்பு



     ஒரு சகோதரிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் தன்னுடைய பெற்றோர்கள் மீது தீராத பாசம். அவர்களை விட்டுப் பிரிந்து தன் கணவன் வீட்டில் தங்கி குடும்ப வாழ்க்கையை நடத்த அவளுக்கு மனதில்லை. மாதத்தில் 20 நாட்கள் பெற்றோர்களைப் பார்க்க வந்து விடுவாள். தன் கணவனையும் அங்கே நிரந்தரமாக தங்க வைக்க முயற்சி செய்தாள். கடைசியில் அது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இப்பொழுது ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்கிறார்கள்.

     இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான ஒரு மனிதன் தன் மனைவியின் பேச்சை ஒருபோதும் கேட்பதில்லை. அவளுக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. ஆனால், தன் அம்மாவின் வார்த்தைக்குப் பயந்து நடுங்குவான். தன் மனைவியுடன் தனியாக வெளியே செல்வதற்கும் கூட அம்மாவிடம் சென்றுதான் அனுமதி வாங்குவான். தன்னைவிட அம்மாவை தன் மனதில் அதிகமாகவும். ஆழமாகவும் வைத்திருந்ததால், ‘உனக்கு பொண்டாட்டி யாருடா? நானா? அல்ல உங்க அம்மாவா? முதல்ல அதை முடிவு பண்ணிட்டு வா அப்புறம் நாம வாழலாம்’ என்று அவனுடைய மனைவி பிரிந்துச் சென்றுவிட்டாள். 

    தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து, ஆளாக்கி சம்பாதிக்க வைத்து, பார்த்து பார்த்து நல்ல பெண்ணை திருமணம் செய்து வைத்த தாய்க்கு, அவன் தன் மனைவியுடன் சந்தோஷமாக பேசி, அன்பாக இருப்பது பிடிக்கவில்லை. அதை பார்க்கும்போதெல்லாம் ஒரே எரிச்சல் கோபம்தான் அவளுக்கு வரும்.  அவன் தன் மனைவியிடம் ஐக்கியமாக இருப்பது பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் கொடூரமான தாயாக மாறி விடுகின்றாள். கடைசியில் தந்திரமான பேச்சினால் மகனையும் மருமகளையும் பிரித்துவிட்டாள். இப்பொழுது இருவரும் Divorce வாங்கிச் சென்றுவிட்டார்கள்.

   மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? என்று கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால் பிசாசினால் போடப்படும் ஆத்தும பிணைப்பு என்பது தெரியவரும்.

  மனித சமுதாயத்தின் அடிப்படை  குடும்பமாகும். ஆதாமை உருவாக்கிய தேவன், அவன் தனிமையாக இருக்க அனுமதிக்காமல், ஏவாளைக் கொடுத்து அவனை ஒரு குடும்பமாக மாற்றினார். பிள்ளைகள் தேவபக்தியில் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் குடும்பங்களை குறித்ததான பரலோகத் திட்டமாகும்.

 இன்றைய நாட்களில் பல ஆவிக்குரியக் குடும்பங்களில் பிரிவினைகள், பிரச்சனைகள், ஒருமனக்குலைச்சல்கள், போராட்டங்கள் காணப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ’ஆத்தும பிணைப்பு’ என்பது ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஆம், பிசாசினால் போடப்படுகின்ற ஆத்தும பிணைப்பு குடும்ப பிரிவினைக்கு மிகவும் முக்கியமான காரணமாகும்.

      இது அநேகருக்கு தெரிவதில்லை. ஆத்தும பிணைப்பு என்ற வார்த்தையைக் கூட இப்பொழுது இதை வாசிக்கும்போதுதான் கேள்விப்படுகின்றேன் என்று சொல்கிறவர்களும் உண்டு.    

   இந்த தீர்க்கதரிசன செய்தியில் குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவியின் பிரிவினைக்கு மிக முக்கிய காரணமான ஆத்தும பிணைப்பைப் பற்றியும், அதை எவ்வாறு உடைத்தெறியலாம் என்பதனைப் பற்றியும் விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

        ‘சந்ததி’ என்பது தேவனுடைய பார்வையில் மிக முக்கியமான ஒன்றாகும். தேவனுடையப் பிள்ளைகளின் சந்ததியை அவர் பாதுகாப்பார். ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை கர்ப்பத்தில் சுமந்துப் பெற்றெடுக்கும் போதே அந்த பிள்ளைக்கும் அந்தத் தாய்க்கும் இடையில் பரிசுத்த ஆவியானவர் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவார். அது தான் ஆத்தும பிணைப்பு எனப்படும்.

       அந்தப் பிணைப்பு இருக்கும் வரை பிள்ளை எங்கு சென்றாலும் பெற்றோர்களின் மனமும் அங்குச் செல்லும். விளையாட சென்றாலும், உறவினர்கள் வீட்டிற்குச் சென்றாலும் அங்குச் செல்லும். ஒவ்வொரு நொடியும் அவர்களின் சிந்தனை, மனம், எண்ணங்கள் எல்லாம் பிள்ளையை பற்றியே நிரம்பியிருக்கும்.

         இப்படி அவர்களின் பிள்ளையை உற்று கவனிப்பதால் பிசாசின் சகலவித தந்திரங்களுக்கும், மனிதர்களின் நயவஞ்சகங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் பிள்ளை விலக்கிப் பாதுகாக்கப்படும்.

     பிள்ளை வளர்ந்து ஆவியில், சரீரத்தில் பெலனடைந்த பின்பு, பிள்ளைக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். மாறாக துண்டிக்கப்படாமல் பிணைப்பு தொடர்ந்து இருந்தால் அது பிசாசின் கருவியாக மாறி விடும். பெரிய பிரச்சனையை கொண்டுவரும்.

          நன்றாக ஆவிக்குரிய இரகசியங்களை அறிந்து, ஜெபிக்கின்ற குடும்பங்களாக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மூலமாகவே காரியங்களை வெளிப்படுத்தி பிணைப்பை உடைத்தெரிவார். ஆனால், ஆவிக்குரிய ஆழ்ந்த சத்தியங்களை அறியாத குடும்பங்களில் இதற்கு வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்தாலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு அப்படியேதான் இருக்கும். 

       இப்படி ஏற்ற நேரத்தில் துண்டிக்கப்பட வேண்டிய ஆத்தும பிணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும்போது, அதை பிசாசு பயன்படுத்த ஆரம்பித்து விடுவான். அதன் வழியாக ஆளுகைச் செய்ய ஆரம்பித்துவிடுவான். அதனால்தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடந்த பின்பும், ஏற்றத் துணை கொடுக்கப்பட்ட பின்பும் பெற்றோர்கள் அவர்களுடைய வாழ்க்கைக்குள் உட்புகுகின்றார்கள். அதேபோல் பிள்ளைகளும் பெற்றோர்களை நாடித் தேடி ஓடுகின்றார்கள். பிள்ளைகளின் மனம் பெற்றோர்களையும், பெற்றோர்களின் மனம் பிள்ளைகளையும் சார்ந்து நிற்கின்றது. இதனால் குடும்பங்களில் தேவையில்லாத பிரச்சனைகள், குழப்பங்கள், சமாதானக்குலைச்சல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நிரந்தரமாக பிரிந்தும் செல்கின்றார்கள். எனவே, பிசாசு பயன்படுத்தும் ஆத்தும பிணைப்புகளை cancel பண்ணி ஜெபிக்க வேண்டும். இப்படி உடைத்தெரிந்தாலே குடும்பத்தில் காணப்படுகின்ற பல பிரச்சனைகள் மாறும்.

   சரி, எப்படி உடைப்பது? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்பதாய் நீங்கள் ஆவலுடன் கேட்கலாம். பிசாசு பயன்படுத்தும் ஆத்துமப் பிணைப்புகளை உடைத்தெரிய வேண்டும் என்றால், முதலில் எது பிசாசினால் போடப்பட்டுள்ள ஆத்தும பிணைப்பு என்பதனை நன்றாக அறிந்துக்கொள்ள வேண்டும்.

     கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அடையாளங்கள் உங்கள் வாழ்க்கையில் காணப்படுமானால் அது பிசாசினால் போடப்பட்டுள்ள ஆத்தும பிணைப்பு என்பதனை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

1. பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் மீது பெற்றோருக்கும் மிதமிஞ்சிய பாசம் காணப்படும். அல்லது இரண்டு பேருக்கும் இடையில் மிக அதிகமான பகை உணர்வு காணப்படும்.

2. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பட்சமாய் அன்புக் கூறுவார்கள். பாசத்தை அதிகமாக காண்பிப்பார்கள். கோபத்தை காண்பித்தாலும் அதிகமாகவே காண்பிப்பார்கள். 

3. ஆத்தும பிணைப்பு எந்த பிள்ளைகள் மீது இருக்கின்றதோ அவர்களுக்கு அதிக சொத்துக்களையும், நன்மைகளையும், உரிமைகளையும் கொடுப்பார்கள். 

4. தனக்குத் துணையாக நல்ல மனைவியை தேவன் கொடுத்திருந்தும், பிசாசினால் பயன்படும் ஆத்துமப் பிணைப்பு இருக்குமானால், பெற்றோர்கள் சொல்லும் வார்த்தைகளுக்குதான் கீழ்ப்படிவார்கள். 

      மேற்கண்ட சில அடையாளங்கள் பிசாசினால் போடப்பட்டுள்ள ஆத்தும பிணைப்பை உறுதிப்படுத்தும். இதைப்போல் இன்னும் நிறைய அடையாளங்கள் உள்ளன. 

   சரி, பிசாசினால் போடப்பட்டுள்ள ஆத்தும பிணைப்புகளை எப்படி உடைப்பது? முதலில் ஆத்தும பிணைப்பு பிசாசினால் போடப்பட்டுள்ளதா? என்பதனை நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அந்தப் பிணைப்புகளை உடைத்தெறிய வேண்டும். திரும்ப திரும்ப இவ்வாறு செய்வதினால் சீக்கிரத்தில் அந்தப் பிணைப்புகள் உடைக்கப்படும். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் காணப்படும். பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. துணை வசனங்களை பதிவிட்டால் இன்னும் நல்ல இருந்து இருக்கும், நீங்க சொல்றது 100%உண்மை..

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..