தீர்க்கதரிசன தியானம்
அதிகாலையில் நடந்த Online Prayer Meeting- ல் தியானித்த கர்த்தருடைய தீர்க்கதரிசன
வார்த்தையின் ஒரு பகுதியை உங்களுக்காக எழுத்துவடிவத்தில்
.அனுப்புகின்றோம். ஜெபத்துடன் தியானித்து பரலோக ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.
பரிசுத்த வேதத்தில் 1சாமுவேல் புஸ்தகத்தில் சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ண பரலோக தேவன் தீர்க்கதரிசியாகிய சாமுவேலை பயன்படுத்தினார். பூமியில் ஒரு மனிதனை பரலோகத் திட்டத்தின்படி அபிஷேகம்பண்ண மற்றும் தேவையில்லாத அபிஷேகத்தை
அவர்களிடமிருந்து பிடுங்க தீர்க்கதரிசிகளைத்தான் பயன்படுத்துவார். இது தீர்க்கதரிசிகளின் ஊழியத்தில் ஒன்றாகும். இராஜாக்கள் எதிரி
நாட்டுடன் யுத்தத்திற்கு செல்லும்போது, தீர்க்கதரிசிகளுக்காக காத்திருக்க வேண்டும். தீர்க்கதரிசிகள் வந்து சர்வாங்கதகனபலியைச் செலுத்தி, கர்த்தருடைய
சமூகத்தில் விண்ணப்பம்பண்ணி, தேவனுடைய
வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக உரைத்து,
சேனைகளைப் பலப்படுத்தி யுத்தத்திற்கு அனுப்புவார்கள். இது தீர்க்கதரிசிகளுக்கான நியமம்
ஆகும். தீர்க்கதரிசிகளுக்கும்
இராஜாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டு. அபிஷேகத்திலும் நியமத்திலும் வித்தியாசங்கள் உண்டு.
இதைக்குறித்து கொஞ்சம் கூட அறிவில்லாத சவுல், குறித்தக் காலத்தில் சாமுவேல் வராததைக் கண்டவுடன், துணிந்து தேவ சமூகத்திற்குள் சென்று சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தினான்.
அதாவது தீர்க்கதரிசிகளுக்கு நியமிக்கப்பட்ட வேலையைத் துணிந்து செய்தான்.
இது தேவனுடைய பார்வையில் பாவமாக இருந்தது. இதனால், அவனுடைய இராஜ்ஜியபாரம் நிலைநிற்காமல் விழுந்தது.
இதை தீர்க்கதரிசியாகிய சாமுவேல் சொன்னான்.
நாம் அனைவரும் கிருபையினால் நிலைநிற்கின்றோம். கிருபையா?
அல்லது நியாயப்பிரமாணமா? என்று கேட்டால் கிருபைதான் ஜெயிக்கும். கிருபைக்கு முன்பாக நியாயப்பிரமாணத்தினால் நிற்க
முடியாது. எந்த மந்திரவாதியாலும் நிற்க முடியாது. யாராலும் நிற்கவே முடியாது. ஆனால், கிருபையா?
அல்லது பரலோக
நியமமா?
என்று பார்த்தால் கிருபைக்கல்ல
பரலோக நியமத்திற்கே பரலோக தேவன் துணை நிற்பார். ஆதலால், எனக்கு கிருபை இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு பரலோகத்திற்கு எதிராக இருக்கக்கூடாது. தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விரோதமாகவும், ஊழியத்திற்கு விரோதமாகவும் துணிகரமாக நாவினால் பேசக்கூடாது.
ஊழியர்களை குறைச் சொல்லக்கூடாது. ஏனென்றால், அவர்கள் பரலோக சங்கத்தினால் தீர்மானம் இயற்றப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டவர்கள்.
சவுலின் இராஜ்ஜியபாரம்
நிலைநிற்கவில்லை. இதன்பின்பு அவனுடைய இடத்திற்கு தாவீதை பரலோக தேவன் அபிஷேகம் செய்தார்.
குப்பினால் சவுலை அபிஷேகம் செய்த தேவன்,
தாவீதையோ கொம்பினால் அபிஷேகம் செய்தார்.
குப்பி என்பது குறைந்த அளவு. கொம்பு
என்பது அதிக அளவு.(1
சாமுவேல் 10, 16) சவுல் விழுந்ததுபோல் தாவீது விழுந்துவிடாமல் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக அதிக அளவு அபிஷேகத்தினை
கொடுத்தார். அது மாத்திரமல்ல பரலோக
நியமத்தினைக் குறித்தும் மிக ஆழமாக கற்றுக்
கொடுத்தார். இதனால்தான் தாவீது அபிஷேகம் பண்ணப்பட்ட சவுலுக்கு விரோதமாக தன்னுடைய கரங்களை நீட்ட பயந்தான்.(
1 சாமுவேல் 24,26)
இன்றும் நாம் ஏதோ ஒரு காரியத்திலும் விழுந்து போகலாம், தூக்கி நிறுத்த சர்வவல்லமையுள்ள தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்.
(ரோமர் 14:4) ஆனால், அதற்கு முன்பு அதிகளவு அபிஷேகத்தினை கொடுப்பார். விழுந்துபோன காரியத்தைக் குறித்து கற்றுக் கொடுப்பார். ஏன் விழுந்தாய்? எதனால் விழுந்தாய்? எப்படி விழுந்தாய்? எங்கே விழுந்தாய்? விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார். இனி விழாமல் இருக்க அதிக அளவு அபிஷேகத்தை கொடுப்பார். பின்பு நிலை நிறுத்துவார்.
நீங்களும் ஏதோ ஒரு காரியத்தில் விழுந்து விழுந்து எழும்பலாம்.
அது பாவக்காரியமாக இருக்கலாம்
அல்லது ஊழியத்தின் காரியமாக இருக்கலாம். விழுந்து விழுந்து எழுகின்ற அனுபவம்
வாழ்க்கையில் காணப்படலாம்.
தேவ சமூகத்திற்கு நீங்கள் செல்லும் பொழுது, எந்த காரியத்தில்
விழுந்தீர்களோ அதைக்குறித்து முதலில்
கற்றுக் கொடுப்பார்.
அதிக அளவு அபிஷேகத்தினால் நிரப்புவார். அதைக் கற்றுக் கொண்ட பின்பு உங்களை நிலைநிறுத்துவார்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கி,
கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கலாம்.
கடன்காரனின் தொல்லையால் தேவசமூகத்திற்கு சென்று, ஆண்டவரே! என் கடன் பிரச்சனையை மாற்றும்
என்று கதறினால், உடனே கடன் பிரச்சனையை மாற்றமாட்டார். முதலில் கடன் பிரச்சனைக்கு காரணம்
என்ன என்பதனை கற்றுக்கொடுப்பார். பின்பு இனி கடன்பிரச்சனையில் சிக்கிக்கொள்ளாதபடிக்கு
அபிஷேகத்தினை கொடுப்பார். பின்புதான் கடன்
பிரச்சனையை மாற்றுவார். இதேபோல்தான் ஒவ்வொரு காரியத்திலும் பரலோகக் கிரியை இருக்கும்.
எனவே,
கர்த்தருடைய வார்த்தையை தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! முதலில் கற்றுக்கொள்ள உங்களை
ஒப்புகொடுங்கள். பரலோக பாடத்தினைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்பு ஆசீர்வாதத்தினைக் காண்பீர்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் திரியேக தேவனுக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Glory to God
ReplyDelete