மெகா வேதாகமம் எழுதும் தேர்வு
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு
எங்கள் அன்பின் வாழ்த்துகள். ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதவசனத்தை வாசித்து, சொந்த
கைகளால் எழுதி, தியானிக்க வேண்டும். மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்
என்பது இதன் நோக்கமாகும். கடந்த
வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் அநேகர் கலந்துக்கொண்டு தேர்வினை எழுதி, பரலோக
தேவனுடைய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள். மேலும் தேர்வில் கலந்து கொள்பவர்களை
உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக பரிசுகளும் வழங்கப்படுகின்றது. இந்த தேர்வில்
யார் வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம். எந்த விதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. அனுமதி
முற்றிலும் இலவசம். கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வினைக்குறித்து விரிவாக
அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். பரலோக தேவன்
தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு -2020
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2021
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2022
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2023
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு -2024
Comments
Post a Comment