அதிகாரம்

சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமைகைளையும்
மேற்க்கொள்ளவும், பிசாசுகளை துரத்தவும், வியாதியஸ்தர்களை சுகமாக்கவும், பரலோகம் அதிகாரம்
கொடுத்துள்ளது(மாற்கு 16:17 லூக்கா 10:19) அதிகாரம் என்பது வேறு வல்லமை என்பது வேறு.
அதிகாரத்தினைக் குறித்து நன்கு அறிந்துக் கொண்டால், எல்லா விசுவாசிகளும் பிசாசுகளை
மிக எளிதாக துரத்தலாம்.
பிசாசு பிடித்த ஒரு மனிதனுக்குள் இருக்கும் அசுத்த ஆவிகளை, விசுவாசி ஒருவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தினாலே துரத்துகின்றார். அந்த விசுவாசியின்
வாயிலிருந்து துரத்தும் வார்த்தை வந்தவுடனே, அந்த மனிதனுக்குள் இருக்கும் அசுத்த ஆவிகள்
வெளியே செல்ல வேண்டும். இது பரலோகச்சட்டம். இல்லையேல், அந்த அசுத்த ஆவிகள் மீது பரலோக
சட்டத்தை மீறியதாக பரலோக அரசாங்கத்தில் குற்றம் சாட்டப்படும். உடனே பரலோக சேனைகள் வந்து
அந்த ஆவிகளோடு யுத்தம் செய்து, அதை சிறைப்படுத்துவார்கள். சில நேரங்களில் பல ஆயிரம்
தூதர்கள் கூட வருவார்கள். சிறைப்படுத்தப்படும் அந்த ஆவி தண்டனை தீர்ப்பு பெற்று நிரந்தரமாக
பாதாளத்தில் தள்ளப்படலாம் அல்லது அக்கினியால் சுட்டெரிக்கப்படலாம்.
இதைத் தெரிந்த
அசுத்த ஆவிகள் துரத்தும் போதே, கலகம் செய்யாமல் வெளியே சென்றுவிடும். ஏனென்றால், துரத்தும்
போதே சென்றால் பூமியில் அங்கும் இங்கும் உலாவலாம். அதே மனிதனுக்குள் மறுபடியும் சென்று ஆளுகை செய்யலாம்.
மாறாக பரலோக இராஜ்யத்தில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை தீர்ப்புகளைப் பெற்றால், எங்கும்
செல்ல முடியாது. சிறைக்கைதியாக இருக்க வேண்டியதுதான்.
எனவே, விசுவாசிகள்
பரலோகம் கொடுத்துள்ள அதிகாரத்தினை பயமில்லாமல் பயன்படுத்த வேண்டும். பிசாசுகளைத் தேடிக்
கண்டுப்பிடித்து துரத்த வேண்டும். நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை தடை செய்கின்ற பிசாசுகளையும் துரத்த வேண்டும். ஒருவேளை அப்படி
துரத்தியும் செல்ல வில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று விசுவாசக்
குறைவு மற்றொன்று நாவின் அதிகாரத்தினை இழத்தல். எனவே, விசுவாசத்தோடும் நாவின் அதிகாரத்தோடும்
பிசாசுகளைத் துரத்தும் போது அது கண்டிப்பாக நம்மை விட்டு ஓடிப்போய்விடும்.
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை
செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன வார்த்தைகள்
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த
செய்தியை WHATS APP - ல் தினமும் பெற
Prophetic Words Ministries
8608833150, 8608096748)
ஆமென் அல்லேலூயா
ReplyDeletePraise and Glory to Trinity God
ReplyDelete