சகோதரர்கள் மத்தியில் உயர்வு
தேவனுடைய பிள்ளைகளை அழிக்கின்றவன்
பிசாசு. சதாகாலமும் யாரையாவது அழித்து விடலாமா என்று காரணம் தேடி சுற்றித் திரிகின்றான்(1
பேதுரு 5:8). பிசாசைப்போல் சில மனிதர்களும் இருக்கின்றார்கள். குறிப்பாக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட பிள்ளைகளை
எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதும், அவர்களுடைய உயர்வை எப்படியாவது தடுக்க வேண்டும்
என்பதும் அவர்களுடைய யோசனை. இப்படித்தான் பரிசுத்த வேதத்தில் ஒரு கூட்ட சகோதரர்கள்
இருந்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையை அழிக்க நினைத்தார்கள்.
முடிவில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும், தேவன் எப்படி கிரியை செய்தார் என்பதனையும்
இந்தச் செய்தியில் தியானிப்போம். இது தீர்க்கதரிசன செய்தி ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த
ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் பேசுவார்.
யாக்கோபின் குமாரன் யோசேப்பைக் குறித்து
நமக்கு நன்றாகவே தெரியும். பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம் பிரசங்கத்தில் கேட்டிருப்போம்.
இவனைக் குறித்து சர்வ வல்ல தேவன் ஒரு பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். அதை சொப்பனம்
மூலமாக அவனுக்கு வெளிப்படுத்தினார். சகோதரர்கள் மத்தியில் உயர்த்தப்படுவான் என்பதும், அவர்களை ஆளுகை செய்வான்
என்பதும் அந்த பெரிய திட்டம். இதைக் கேட்ட அவனுடைய சகோதரர்கள் பொறாமைக் கொண்டார்கள்.
அவனைப் பட்சமாய் பகைத்தார்கள்.
சமயம் கிடைத்ததும் அவனைக் கொன்று ”இந்தக் குழிக்குள்
அவனைத் தள்ளிவிடுவோம் அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் என்று பார்ப்போம்” என்று
சொல்லி, அவனைக் குழியில் போட்டார்கள்(ஆதியாகமம் : 37:20) இதில் கவனிக்க வேண்டிய ஒரு வார்த்தை உள்ளது. அவனுடைய சொப்பனங்கள் எப்படி
நடக்கும் என்பது தான் அது. தேவன் யோசேப்பை உயர்த்துவார் என்று தரிசனம் கொடுத்திருந்தார்.
அது எப்படி முடியும் அதை தடுத்துவிடலாம் என்று
அவனுடைய சகோதரர்கள் நினைத்தார்கள்.
இன்றைய ஆவிக்குரிய உலகத்திலும் இப்படிப்பட்ட
கள்ளச் சகோதரர்கள் இருப்பார்கள். அவனுடைய தரிசனங்கள் எப்படி நிறைவேறும் என்று சொல்லி, ஆவிக்குரிய சகோதரர்களை அழிக்க நினைப்பார்கள். அவர்களுடைய
உயர்வுக்கு தடையாக இருப்பார்கள். ஆசீர்வாதத்தை தடுப்பார்கள். இல்லாத வார்த்தைகளை பொய்யாக
சொல்லி தூஷிப்பார்கள்.
கடைசியில் நடந்தது என்ன? யோசேப்பு 13 வருடம்
கஷ்டப்பட்டான். தன் சகோதரர்கள் நிமித்தம் எகிப்திலே அடிமையாக இருந்தான். நாட்கள் வந்தது.
அவன் கண்ட சொப்பனத்தின்படியே உயர்த்தப்பட்டான். எகிப்துக்கு அதிகாரியாக மாறினான். பஞ்சத்தில்
கிடந்த தன் தகப்பனுடைய குடும்பத்தையும், தனக்கு விரோதமாக எழும்பின சகோதரர்களையும் அவர்களின்
குடும்பத்தையும், அவர்களின் பிள்ளைகளையும் போஷித்தான். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல
கிட்டத்தட்ட எழுபது வருடம் போஷித்தான்.
யாரை அழிக்கலாம் என்று நினைத்தார்களோ அவனைக்
கொண்டே தேவன் அவர்களைப் போஷித்தார். ஊழியத்தின் பாதையில் அபிஷேகம் பண்ணப்பட்ட உன்னையும்
அழிக்க வேண்டும் என்று நிறைய சகோதரர்கள் பகல் கனவு கண்டுக்கொண்டு இருப்பார்கள். பொறாமைப்படுவார்கள்
இல்லாத பொல்லாத வார்த்தைகளை தூஷணமாக சொல்வார்கள்.
தேவனுடைய பிள்ளையே! கவலைப்பட்டு சோர்ந்து போகாதே.
அவர்களுக்கு முன்பாக யோசேப்பை உயர்த்தியதுப்போல தேவன் உன்னை உயர்த்தி, அபிஷேகம் செய்து,
அவர்களைப் போஷிக்க உன்னை உயர்வான இடத்தில் வைப்பார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல
வருடங்கள் நீ அவர்களைப் போஷிப்பாய். கண்டிப்பாக தேவன் இதைச் செய்வார்.
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை
செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு
நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு
செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும்
அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும்
பெற Prophetic Words Ministries 8608833150, 8608096748)
Really your God's word is comforting and encouraging everyday. Praise the Lord Almighty 🙏
ReplyDelete