அழுத்தம் வேண்டாம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக
பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய
தேவனுக்கும் உண்டாகட்டும். அழுத்தம் வேண்டாம் என்ற
தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து ஆவலாய் வந்த உங்களுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்
சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம்
சர்வவல்ல தேவன் உங்களை யோபு 42:12-ன் படி
ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
யோபு என்ற உத்தமனைக் குறித்து
பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம். தேவனால் உத்தமன், சன்மார்க்கன், பொல்லாப்புக்கு
விலகுகிறவன் என்று சாட்சிப் பெற்றவன்.(யோபு 1:8,2:3) அவன் வாழ்க்கையில் பிசாசு சோதனைகளைக்
கொண்டு வந்தான். ஏனென்றால் அவன் ஒருவிதமான அழுத்தத்திற்கு இடங்கொடுத்தான். அது என்ன
என்பதனைக் குறித்து இந்தச் செய்தியில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். ஜெபத்துடன் யோபு
புஸ்தகத்தில் முதலிரண்டு அதிகாரங்களை வாசித்து முடித்த பின்பு இதை வாசியுங்கள். உங்களுக்கு நன்றாக புரியும். பரிசுத்த
ஆவியானவர் உதவி செய்வார்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக
இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன, பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள்.
இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
யோபுவுக்கு மூன்று குமாரத்திகளும்,
ஏழு குமாரர்களும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டில் விருந்து செய்வார்கள்.
தங்கள் மூன்று சகோதரிகளையும் விருந்து சாப்பிட அழைத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நல்ல வாழ்க்கையை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். யோபுவுக்கோ தன் குமாரர் யாரேனும்
பாவம் செய்து தேவனைத் தங்கள் இருதயத்தில் தூசித்திருப்பார்களோ,
என்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பின் வேலி உடைக்கப்படுமோ, என் சொத்துகள் பிடுங்கப்படுமோ,
என் சரீரம் பாதிக்கப்படுமோ, என் பிள்ளைகளை இழந்துவிடுவேனோ, என் ஆஸ்தி அழிக்கப்படுமோ
என்ற பயம் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது(யோபு 3:25).
எனவே, அதிகாலமே எழுந்து சர்வாங்க
தகனபலிகளை செலுத்தினான். தினமும் இப்படியே செய்து வருவான். நாளடைவில் இது அவனுக்கு
ஒரு அதீத பயமாகவே மாறிவிட்டது. பயந்து பயந்து பலி செலுத்தினான். இது தேவனுடைய பார்வையில்
தவறல்ல. ஆனால், இப்படி பயந்து பயந்து பலி செலுத்துவதைக் கண்ட பிசாசு கொஞ்சம் சோதித்துப்
பார்க்கலாம். ஒருவேளை யோபு தன் உத்தமத்தினை விட்டு வழி விலகுவான் என்று நினைத்தான்.
எனவே, தேவனிடத்தில் அனுமதிப் பெற்றான். யோபுவையும் சோதித்து பார்த்தான்.
இதைக் கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய
பிள்ளைகளே!! எப்பொழுதும் தேவனுக்கு பயந்திருப்பது மிகவும் நல்லது. ஆனால், அது ஒரு அழுத்தமாக
மாறிவிடக்கூடாது. அப்படி அழுத்தத்திற்கு இடங்கொடுத்தால் பிசாசு ஒருவேளை சோதித்துப்
பார்க்க அனுமதிக் கேட்கலாம். உங்களை சோதிக்கலாம்.
எனவே, நான் ஜெபிக்கவில்லையென்றால் அழிவு
வந்துவிடுமோ, எல்லாம் தோல்வியில் முடிந்துவிடுமோ, வியாதி, வறுமை வந்துவிடுமோ என்ற எந்தவிதமான
அழுத்தத்திற்கும் இடங்கொடுக்க வேண்டாம். ஆவிக்குரிய காரியங்களில், ஜெபத்தில், அதீத
பயத்திற்கு இடம் கொடாதிருங்கள். ஆமென்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற
இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE
செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
New message
ReplyDelete