யார் மனித பிசாசு?
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை
எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். யார் மனித பிசாசு?
என்ற
தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய்
வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களையும் உங்கள்
குடும்பத்தினையும் யாக்கோபு 1:5-ன்
படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
எவனை
விழுங்கலாம் என்று காரணம் தேடி பிசாசு சுற்றிதிரிகின்றான். (1 பேதுரு 5:8, யோபு
1:7) நம்முடைய எதிரி யார் என்று கேட்டால் பிசாசு என்று சொல்லுவோம். விசுவாசிகள்
அனைவருக்கும் இது தெரியும். சில நேரங்களில் மனிதர்களும் பிசாசைப்போல்
இருப்பார்கள். அவர்கள் மனித பிசாசுகள் என்று அழைக்கப்படுவார்கள். அது எப்படி?
என்பதனையும் அப்படிப்பட்டவர்கள் யார்? என்பதனையும் இந்த தீர்க்கதரிசன தியானத்தில்
தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். நிச்சயமாக பரிசுத்த ஆவியானவர் சத்திய
வார்த்தைகள் மூலமாக பேசுவார்.
பிசாசு என்று சொல்லப்படும் வலுசர்ப்பம் ஆரம்பத்தில்
தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்ட கேரூபாக இருந்தான் (எசே 28:14). அவனுக்கு நித்தியஜீவன்
இருந்தது. தேவாதி தேவனுக்கு விரோதமாக தன்னை உயர்த்தி கலகம் செய்தான். உடனே
தள்ளப்பட்டான் பிசாசாக மாறிப்போனான். இன்று பரலோகத்திற்கு எதிரியாகவும்,
மனிதகுலத்தை அழிக்கின்றவனாகவும் மாறிவிட்டான். தேவன் கொடுத்த வரங்களை கொண்டே
மனிதர்களை அழிக்கின்றான். பிசாசாக பூமியில் சுற்றித் திரிகின்றான்.
அதேபோல்
நன்மை செய்வதற்காகவும், பரலோக திட்டத்தினை நிறைவேற்றுவதற்காகவும் சர்வ வல்ல தேவன்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக ஒரு மனிதனை அபிஷேகம் செய்கின்றார். அவன்
வரங்களையும் தாலந்துகளையும் உடையவனாக இருக்கின்றான். எப்பொழுது அதை தீமைக்கும்,
சுயத்திற்கும் பயன்படுத்துகின்றவனாகவோ அல்லது அதை கொண்டு தேவசித்தத்திற்கு மாறாக
கிரியை செய்கின்றவனாகவோ மாறுகின்றானோ அப்பொழுதே அவன் பிசாசாக மாறிவிட்டான். இவன்தான்
பிசாசைப்போல் வரும் மனிதன் ஆவான்.
பிசாசுக்கு எப்படி எச்சரிக்கையாக இருக்கின்றோமோ அதேபோல் இப்படிப்பட்டவர்களுக்கும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் பிசாசைப்போல் விழுங்கிவிடுவார்கள்.
இதை
வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! பிசாசின் சுபாவம் கொண்ட, பின்வாங்கிப்போன
மனிதர்களை கண்டால் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. அதுவும்
இரட்சிக்கப்பட்டு பின்வாங்கிபோனவன் என்றால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது மிக மிக
நல்லது. அவன் மனிதனாக உள்ள பிசாசு.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
9434283727
ReplyDeleteபின் வாங்கி போன ஆத்மாக்கள் விட்டு விடலாமா எனக்கு புரியவில்லை கொஞ்சம் சொல்லு ங்க ஐயா
ReplyDelete