ஊழிய அழைப்பா?



  சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். ஊழிய அழைப்பா? என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை ஏசாயா46:4 - ன் படி  ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

  தாயின் வயிற்றில் இருந்து பிறக்கும் போதே ஊழியம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தினை தேவன் வைத்திருப்பார். ஆனால், உலக ஆசைகள் மற்றும் உலகத்தின் பாடுகள் அந்த விருப்பத்திற்கு தடையாக இருக்கும். எனவே, ஊழிய அழைப்பு இருந்தும், தன்னை ஊழியத்திற்கு அர்பணித்தும், பரலோகத்திற்கு ஊழியம் செய்யாமல் உலகத்திற்கு ஊழியம் செய்து கொண்டிருப்பவர்கள் உண்டு. தனக்கு இருக்கும் ஊழிய அழைப்பை அசட்டை பண்ணுவார்கள்.

     உலக வேலை கிடைத்தவுடன் தன்னுடைய வாழ்க்கையில் செட்லாகிவிட்டோம். இனிப் பிரச்சனை இல்லை, உபத்திரவம் இல்லை, நல்ல சம்பளம், நல்ல வீடு, நல்ல வேலை என்று என்று தன்னுடைய இருதயத்தினை தானே சமாதானப்படுத்திக்கொள்பவர்கள் உண்டு.

 உண்மையில் தேவதிட்டத்திற்க்கு மாறாக செல்பவர்களின்  வாழ்க்கையில் சமாதானம் கிடைக்குமா? நிரந்தர மகிழ்ச்சி காணப்படுமா? என்று ஆராய்ந்து வேதவசனத்தில் ஆராய்ந்து பார்த்தால் இல்லை என்பது தான் முடிவாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக சமாதானம் கிடைக்காது. கொஞ்ச நாட்கள் நல்லா இருக்கின்ற மாதிரி இருக்கும். போக போக பிரச்சனைகள் குடும்பத்திற்குள் வரும். தாங்க முடியாத இழப்புகள், நஷ்டங்கள் வரும்.

 இப்படி ஊழிய அழைப்பு இருந்தும் அதை அசட்டை செய்து, இழப்பையும், நஷ்டத்தையும், கஷ்டத்தையும் சந்தித்த ஒரு குடும்பத்தைக்குறித்து பரிசுத்த வேதத்தில் இருந்து தியானிக்கலாம். ஜெபத்துடன் தொடர்ந்து உற்சாகத்துடன் வாசியுங்கள். செய்திக்குள் செல்வதற்கு முன் ரூத்தின் சரித்திரத்தை நன்றாக வாசியுங்கள்.

  எலிமெலேக்கு என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் நகோமி அவனுக்கு இரண்டு குமாரர்கள். ஒருவன் பேர் மக்லோன் மற்றொருவன் பேர் கிலியோன். இவர்கள் பெத்லெகேம் ஊரை சேர்ந்தவர்கள். யூதாவின் குடிகள். இந்த குடும்பத்தினை குறித்து தேவாதி தேவன் ஒரு பெரிய திட்டத்தினை வைத்து வைத்திருந்தார். இவர்களுடைய வம்சத்தில் தாவீது வர வேண்டும் என்பதும், அதைத் தொடர்ந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வர வேண்டும் என்பதும் பரலோக திட்டம். அதற்காக அவர்கள் பெத்லெகேமில் வாழ வேண்டும்.

 ஆனால்,  தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. கஷ்டம் வந்தவுடன் நமக்கு நஷ்டம் என்று எண்ணின அவர்கள் குடும்பத்துடன் மோவாப் தேசத்தில் போய் சஞ்சரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். தன்னுடைய சகோதரர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்க, தேவதிட்டத்தினை மறந்து  சொகுசான வாழ்க்கையை தேடி சென்றார்கள். பெத்லெகேமில் கஷ்டம் இருக்க, மோவாபிலோ இவர்கள் மனரம்மியமாக வாழ்ந்தார்கள். தன்னுடைய இரண்டு குமாரருக்கும் மோவாப் தேசத்திலே பெண் கொண்டார்கள். திருமணம் செய்து வைத்தார்கள்.

     திடீரென அவர்களின் வாழ்க்கையில் பெரும்இழப்பு ஏற்பட்டது. குடும்ப தலைவன் எலிமெலேக்கு இறந்தான். அவனை தொடர்ந்து அவனுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் இறந்து போனார்கள். குடும்பத்திலுள்ள மூன்று பெண்களும் விதவைகளாக மாறினார்கள். ஏறக்குறைய பத்து வருஷம் மட்டுமே அவர்களால் அங்கு வாசம் செய்ய முடிந்தது. மோவாபைவிட்டு வெளியே வர வேண்டிய நிலைமை.

        இதற்கு பின்பு நகோமி சொல்லும் வார்த்தையை கவனித்து பாருங்கள். நான் நிறைவுள்ளவளாக சென்றேன் ஆனால் குறைவுள்ளவளாக திரும்பி வந்தேன் என்று அறிக்கையிடுகின்றாள்.

   இப்படித்தான் தேவ திட்டம் தன்னிடம் இருக்க அல்லது ஊழிய அழைப்பு இருக்க அதை விட்டு வெளியே செல்பவர்களின் நிலைமையும் இருக்கும். கொஞ்ச நாட்கள் சமாதானம் இருப்பதை போல் இருக்கும். வீட்டில் திருமணங்கள் நடக்கும். வீடு கட்டுவார்கள். கார் வாங்குவார்கள். நகை வாங்குவார்கள். இது பத்து வருடங்கள் மட்டுமே தொடரும். பின்பு பல பாடுகள், போராட்டங்கள், இழப்புகள் சூழ்ந்து கொள்ளும். சமாதானம் சந்தோஷம் எடுக்கப்படும். இழப்புகள், நஷ்டங்கள் வரும்.

  இதை வாசிக்கின்ற நீங்கள் ஊழிய அழைப்பு இருந்தும், உங்களைக்குறித்தும் தேவன் ஒரு திட்டத்தினை வைத்திருந்தும், உலக ஆசைக்காக அரசாங்க வேலை என்ற மோவாபுக்கு சென்று சஞ்சரிக்கின்றீர்களா? கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு நேராக கடந்து வருகின்றது எச்சரிக்கை. உடனே அதை விட்டு வெளியே வாருங்கள் இழப்புகள் வருவதற்குள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அண்டிக்கொள்ளுங்கள். இழப்புகள் தடுக்கப்படும்.

   ஒருவேளை நகோமியை போல் மோவாபுக்கு சென்று எல்லாம் இழந்த நிலையில் இருக்கின்றீர்களா? கவலைப்படாதிருங்கள் அந்த நிலைமையிலே எழுந்து பெத்லேகேமுக்குள் வாருங்கள். நகோமி அப்படித்தான் வந்தாள்  அவள் குடும்பத்தினை தேவன் கட்டினார். உங்கள் குடும்பத்தினையும் தேவன் கட்டுவார்.

(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. என்னைக் குறித்த தேவ திட்டத்தை நான் எப்படி அறிந்து கொள்வது... ஒரு ஊழியர் என்னிடம் ஆலயத்தில் செய்தி கொடுக்க கர்த்தர் சொல்கிறார் என்று என்னிடம் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. தேவ சமூகத்தில் காத்திருங்கள் நண்பா...

      Delete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..