விரும்பாத திருமணம்


                       

         ஈசாக்கின் குமாரனாகிய யாக்கோபின் வாழ்க்கையில் அவனுடைய தாய்மாமனின் வஞ்சகத்தினால் விரும்பாத திருமணம் ஒன்று நடந்தது. இன்றைய நாட்களிலும் அநேகருடைய வாழ்க்கையில் பெற்றோர்களின் சதியினாலும், உறவினர்களின் தந்திரத்தினாலும் பிடிக்காதவர்களோடும், தகுதி இல்லாதவர்களோடும் திருமணம் நடக்கின்றன. இப்படி ஏதேச்சையாக திருமணம் நடக்கும் போது, வாழ்க்கையில் வந்த துணையை அற்பமாக பார்க்கின்றார்கள்.  சிலர் சேர்ந்து வாழாமல் தள்ளி விடுகின்றார்கள். இன்னும் மனமுறிவை ஏற்படும்படியாக பேசுகின்றார்கள்.  இப்படி பேசலாமா? அற்பமாக பார்ப்பது சரியா? அப்படி நடக்கும்போது பரலோக தேவன் என்ன செய்வார்? என்பதனை யாக்கோபின் வாழ்க்கையிலிருந்து இந்த தீர்க்கதரிசனம் செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

         இலாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள். இதில் ராகேல் ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாய் இருந்தாள். யாக்கோபு முதன்முதலாக ராகேலைத்தான் பார்த்தான். ராகேலைத்தான் நேசித்தான்.  ராகேல் மேல் பிரியப்பட்டு ஏழு வருடங்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய சம்மதித்தான். அவள் மேல் இருந்த பிரியத்தினால் அந்த வருடங்கள் கொஞ்ச நாளாகவே தோன்றியது.

            நாட்கள் நிறைவேறி ராகேலை திருமணம் செய்துக் கொள்ளும் நேரம் வந்தபோது, மூத்தமகள் இருக்க இளையவளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதற்காகவும், இப்படி திருமணம் செய்தால் மூத்த மகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமே; யாரும் அவளை திருமணம் செய்யமாட்டார்களே என்ற நல்லெண்ணத்தில் இலாபான் வஞ்சனையாக மூத்த மகளையே யாக்கோபுக்கு கொடுத்து விட்டான். இது தெரியாமல் அவன் லேயாளிடத்தில் சேர்ந்தான்.

   இந்த திருமணத்தில் யாக்கோபுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அவனுக்கும் லேயாளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவளை அவன் விரும்பவில்லை. திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்கும் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க லாபானின் தந்திரத்தால் இந்த திருமணம் நடந்தது. பின்பு இரண்டாவதாக ராகேலை திருமணம் செய்தான். இருவரும் லேயாளை அற்பமாக பார்த்தார்கள்.

     லேயாள் அற்பமாக எண்ணப்பட்டதை கண்ட கர்த்தர் அவளை கர்ப்பம் தரிக்கும்படி செய்தார். ராகேலின்  கர்ப்பத்தினை அடைத்து, லேயாளுக்காக  யுத்தம் செய்தார். உண்மையிலேயே யாக்கோபுக்காகத்தான் யுத்தம் செய்திருக்க வேண்டும். அவன்தான் ஏமாற்றப்பட்டான். ஆனால், லேயாள் அற்பமாக பார்த்து தள்ளப்படுவதை தேவன் விரும்பவில்லை. எனவே அவளுக்காக யுத்தம் செய்தார்.

      இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் திருமண வாழ்க்கையிலும் பெற்றோர்களின் சதியினாலோ, உறவினர்களின் தந்திரத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ உங்களுக்கு பிடிக்காத நபர் நீங்கள் விரும்பாதவர்  உங்கள் வாழ்க்கைக்கு துணையாக வந்திருக்கலாம். ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் போல்  உங்கள் திருமணம் நடந்திருக்கலாம். விரும்பாத திருமண வாழ்க்கைக்குள் சென்றிருக்கலாம்.  

      எப்படியிருந்தாலும் உங்களுக்கு துணையாக வந்தவர்களை நேசிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் பரலோக தேவன் விரும்புகின்றார்.  நீங்கள் அவர்களை அற்பமாக பார்க்கும் போதும், அவர்களை அசட்டை செய்யும் போதும் அவர்களுக்காக யுத்தம் செய்கின்றவராகவும் இருக்கின்றார்.

     ஏனெனில், பரலோக தேவன் அதை அனுமதித்திருக்கிறார். ஒருவேளை அது தேவனுடைய திட்டத்திற்குள் வரவில்லை என்றால் திருமணமே நடக்காமல் தடுத்திருப்பார். எனவே, ஏதேச்சையாக உங்கள் வாழ்க்கைக்குள் வந்து துணையை அற்பமாக பார்க்க வேண்டாம் அவர்களை நேசித்து, அவர்களோடு சேர்ந்து வாழ யோசிக்கவும் வேண்டாம். முழுமனதாய் அவர்களை நேசியுங்கள். பரலோக தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..