ஈகோ
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். “ஈகோ” என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யோவேல் 2:21 - ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
“ஈகோ” என்ற ஆங்கில பதத்திற்கு தன்மானம், கௌரவம், அகங்காரம், என்று தமிழில் பொருள்படும். “ஈகோ” தேவனிடத்திலிருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்களை தடுக்கும் பிசாசின் கருவி ஆகும். பரிசுத்த வேதத்தில் ஒரு தேவனுடைய மனிதன் “ஈகோ” வுக்கு இடம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டான். இது எப்படி என்பதனை கொஞ்சம் தியானித்து, வேத வசனத்தின் வழியாக ஆராய்ந்து பார்ப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமான் வீட்டில் போஜனபந்தி இருக்கும்போது, ஒரு பெண் 300 பணம் மதிப்புள்ள விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை கொண்டுவந்து அவருடைய தலையில் ஊற்றினாள். அந்த வீடு முழுவதும் பரிமள தைலத்தால் நிறைந்தது.
அப்பொழுது அவருடைய சீஷர்கள் இதைக்கண்டு விசனமடைந்தார்கள். அவருடைய சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத் இந்த தைலத்தை விற்று தரித்திரருக்கு கொடாமல் போனதென்ன என்றான். அதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள். தரித்திரர்கள் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
யூதாஸ்காரியோத் எப்போதும் பணப்பையை வைத்துக் கொண்டிருப்பவன். 300 பணத்திற்கு விற்று ஏழைக்கும், தரித்திருக்கும் கொடுக்க வேண்டும் என்று சொன்னான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ அவனுடைய வார்த்தைக்கு இடம் கொடுக்காமல் தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னார். மேலும், இந்த ஸ்திரீ என்னிடத்தில் நற்கிரியை செய்திருக்கிறாள் என்று சாட்சியும் சொன்னார். அந்த வார்த்தையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் சொல்லி அவர் கேட்கவில்லையே என்ற ”ஈகோ” வுக்கு இடம் கொடுத்தான். இவனுக்குள் ”ஈகோ” வடிவில் பிசாசு புகுந்தான்.
மத்தேயு 26 ஆம் அதிகாரம் 14 ம் வசனத்தை நன்றாக வாசித்துப் பாருங்கள் அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்தில் போய் நான் அவரை காட்டி கொடுப்பேன் என்று ஆலோசனை பண்ணுகின்றான். எப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையை சொன்ன பின்புதான் அவன் செல்கின்றான்.
ஈகோ அவனுக்குள் வந்தவுடனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேல் கோபப்பட்டு நான் சொல்லி அவர் கேட்கவில்லை, பாவியான ஸ்திரீக்கு உதவி செய்கின்றார்; அவளுக்கு பரிந்து பேசுகின்றார்; இவரை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்று மனக்கடினத்திற்கு இடம் கொடுத்து அவரை காட்டு கொடுக்க துணிந்து விட்டான்.
ஒரு மனிதனுக்குள் ஈகோ இருந்தால் அது இப்படித்தான் தூண்டும். பேச்சை கேட்கவில்லை என்பதற்காக கணவனை பழிவாங்க மனைவி துடிப்பதும் ”ஈகோ” தான். சொன்னதை பாஸ்டர் கேட்கவில்லை என்பதற்காக சபைக்கு வராமல் இருப்பதும், காணிக்கைகளை கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்வதும் ”ஈகோ”தான். இன்னும் பல வழிகளில் இந்த ”ஈகோ” மனிதனுக்குள் கிரியை செய்யும்.
ஆனால், மற்றோர் அப்போஸ்தலனாகிய பேதுருவை பாருங்கள். மத்தேயு 16 ம் அதிகாரத்தில் ”ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாது” என்று கூறினான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்பாலே போ சாத்தானே என்று சொல்கின்றார். கடுமையாக திட்டுகின்றார். அவனிடத்தில் கொஞ்சம் கூட ”ஈகோ” இல்லை. அவரோடு கூட ஜெபத்திற்கு மலைக்கு போகின்றான். அவர் பேசியதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. என் ஆண்டவர் தானே என்று அமைதியாகி விட்டான். அவர் திட்டாமல் யார் என்னை திட்ட முடியுமென்று சமாதானமாகிவிட்டான். (மத் 16)
ஊழியத்தின் கடைசி நாட்களில் யூதாஸ்காரியோத் அவரைக் காட்டிக் கொடுத்தான். யூதாஸை சினேகிதனே என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அழைத்தார்.(மத் 26:50) அவனுக்குள் ”ஈகோ” இருந்ததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவன் மேல் வைத்த அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆண்டவரே என்னை மன்னித்துவிடும் என்று மன்றாடினால் தேவனிடத்திலிருந்து கிருபை கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியவில்லை. நான்றுக் கொண்டு செத்தான். முடிவு கொடூரமாக இருந்தது.
ஆனால், பேதுரு மூன்று முறை அவரை மறுதலிக்கின்றான் சொல்லப்போனால் யூதாஸை விட மிக அதிகமாக மறுதலித்தவன் பேதுருதான். அவனுக்குள் ”ஈகோ” இல்லை குழந்தையைப்போல் இருந்தான். எனவே, பரலோகத்தின் கிருபைகளையும், இயேசு கிறிஸ்துவின் அன்பையும் புரிந்து கொண்டான். மன்னிக்கப்பட்டு மறுபடியும் ஊழியத்தை செய்தான்.
பேதுருவுக்கு பரலோக கிருபைகளை உணரமுடிந்தது. ஈகோ இருந்ததால் யூதாஸ் காரியத்தால் முடியவில்லை. ஈகோ இருக்கும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் கணவன் வைத்திருக்கும் அன்பை மனைவியால் உணர முடியாது. மனைவி வைத்திருக்கும் அன்பை கணவனால் உணரமுடியாது. பாஸ்டர் வைத்திருக்கும் அன்பை விசுவாசிகளால் உணர முடியாது.
எத்தனை கணவன்மார்கள் ”ஈகோ”வுக்கு இடம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஊழியர்கள் ஐக்கியத்தினை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தேவாதி தேவனை விட்டு பிரிந்து சென்றவர்கள் அதிகம்.
எனவே வீணான ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் சிறு குழந்தை போல் மாறுவோமாக பிரிவினையை தரும் ஈகோ சபையின் ஐக்கியத்தில் இருக்கும் நமக்கு வேண்டாம்.
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். )
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். CLICK HERE
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
தேவன் என்னோடு பேசினார் என்னில் காணப்படும் ஈகோ வெளிப்படுத்தினார் அல்லேலூயா
ReplyDeleteஆமென்
யூதஸ், பேதுரு, பற்றி படித்து இருக்கோம் ஈகோ ஒரு மனிதனை எப்படி சாக அடிக்கும். பொறுமை, விட்டு கொடுப்பது, தப்பு பண்ணினாலும் மன்னிப்பு கிடைக்கும் என்பதற்கு பேதுரு வாழ்ந்து காட்டி இருக்கார் ஆண்டவர் பிள்ளையாக இயேசுவின் சிந்தனையோடு மட்டும் வாழ வேண்டும் என்று தேவன் பேசினார் உங்க ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் அதற்காக ஜெபிக்குறேன் நன்றி
ReplyDeleteமிகவும் அருமை கர்த்தர் என்னோடு பேசினார் அல்லேலூயா
ReplyDeletePraise the lord
ReplyDeleteVery nice explanation about EGO
May God Bless you
Good example. இருவருக்கும் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிகவும் அருமை
ReplyDelete