குடும்ப பிரிவினையின் ஆவி
தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்ககடவன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்.(மத்தேயு 19:6) இதற்கு மாறாக அநேக விசுவாச குடும்பங்களில் பிரிவினைகள் காணப்படுகின்றது. பிரிவினையின் ஆவியால் பாதிக்கப்பட்டு கணவன்-மனைவிப் பிரிந்து, தனித்தனியாக வாழ்கின்றார்கள். தேவன் இணைத்ததை பிரிப்பதற்கு மனிதர்கள் மூலமாக பிரிவினை ஆவிகள் கிரியை செய்கின்றன. இந்த தீர்க்கதரிசன செய்தியில் குடும்பங்களை பிரிக்க பிசாசு பயன்படுத்தும் தந்திரங்கள் என்னென்ன? பிரிவினை ஆவிகள் எப்படி கிரியை செய்கின்றது? பிரிவினை ஆவிகளைக் கொண்டுள்ள மக்கள் எப்படி இருப்பார்கள்? பிரிவினை ஆவிகள் குடும்பத்தை தாக்கியதற்கான அறிகுறிகள் என்னென்ன? இந்த ஆவியிலிருந்து குடும்பத்தை எப்படி பாதுகாக்கலாம்? போன்ற ஆழ்ந்த இரகசியங்களை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். ஜெபத்துடன் தொடர்ந்து வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் நிச்சயமாக பேசுவார்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
சர்வவல்ல தேவன் பூமியிலே பரலோக காரியங்களை நிறைவேற்றுவதற்கு, மனிதர்களை தன்னுடைய ஆவியினால் நிரப்பி, அவர்களை அபிஷேகம் செய்கின்றார். சின்ன காரியமோ பெரிய காரியமோ பரலோக காரியங்களை செய்கின்ற மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். அதேபோல் சாத்தானும் தன்னுடைய இராஜ்ஜியத்திற்கான கிரியைகளை பூமியில் நடத்துவதற்கு மனிதர்களை தன்னுடைய ஆவியால் நிரப்பி அபிஷேகம் செய்கின்றான். இது பிசாசின் அபிஷேகம் ஆகும். இதை சாத்தானுடைய இராஜ்ஜியத்தின் அபிஷேகம் என்றும் அழைக்கலாம்.
சர்வவல்ல தேவனால் இணைக்கப்பட்ட குடும்பங்களை பிரிப்பதற்காகவும், சண்டைகள், குழப்பங்கள், சந்தேகங்களை கொண்டுவந்து கணவன்-மனைவிக்குள் பிரிவினைகளை கொண்டுவரவேண்டும் என்பதற்காகவும், பிசாசு சில மனிதர்களை தன்னுடைய ஆவியால் அபிஷேகம் செய்கின்றான். அவர்களுக்குள் இருக்கும் பிரிவினையின் ஆவி, குடும்பங்களை பிரித்து பிரச்சனைகளை கொண்டுவரும். இப்படிப்பட்ட மனிதர்கள் பிசாசின் கருவிகளாக இருந்து, குடும்பங்களை பிரிப்பார்கள்.
இந்த மனிதர்கள் மூலமாக கிரியை செய்கின்ற ஆவிகள், குடும்பத்தினை தாக்கும்போது கணவன்-மனைவிக்குள் சண்டைகள், சமாதானக்குலைச்சல்கள், முறுமுறுப்புகள் ஏற்படும். சில நேரங்களில் தற்காலிக அல்லது நிரந்தர பிரிவினைகள் ஏற்படும். இதனால் தேவனால் கட்டப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப உறவுகள் சிதைக்கப்படும்.
எனவே, இந்த பொல்லாத நாட்களில் வாழ்கின்ற தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிவினை ஆவியுடன் வரும் மனிதர்கள் மற்றும் மனுஷிகளோடு எக்காரணம் கொண்டும், எந்த ஒரு ஐக்கியமும் வைக்கக்கூடாது. அவர்களை குடும்பங்களுக்குள் அனுமதிக்கவும் கூடாது. மீறினால் குடும்பங்கள் பிரிக்கப்படலாம்.
சரி, பிசாசினால் அபிஷேகம் பண்ணப்பட்டு குடும்பப் பிரிவினையின் ஆவியை கொண்டிருக்கும் மனிதர்களை எப்படி கண்டுபிடிக்கலாம்? என்பதாய் நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விக்கு பதிலாக தொடர்ச்சியாக இந்த ஆவியை கொண்டிருக்கும் மனிதர்களின் அறிகுறிகள் என்னென்ன என்பதனை குறித்து கொஞ்சம் விரிவாக தியானிப்போம்.
குடும்ப பிரிவினை ஆவியின் அறிகுறிகள் :
1.இந்த ஆவியை கொண்டிருப்பவர்கள் கணவனிடம் மனைவியைப் பற்றியும், மனைவியிடம் கணவனைப் பற்றியும் குறைகளையும், இல்லாத பொல்லாதவைகளையும் சொல்லுவார்கள்.
2. கொஞ்சம் கூட பயமோ, பரிதாபமோ, குடும்பங்களை குறித்த தரிசனம் இல்லாமல், ”உன் துணையை விட்டு பிரிந்து டைவர்ஸ் பண்ணி விடு” என்று வாய்க்கூசாமல் உங்களிடமே சொல்லுவார்கள்.
3. உங்களிடம், உங்கள் துணையைப் பற்றி பரியாசம் செய்து, மட்டம் தட்டி பேசுவார்கள்.
4. உங்களையோ அல்லது உங்கள் துணையையோ இச்சையோடு பார்த்து, இச்சித்து தனக்கு உரிமையாக எடுத்துக் கொள்ளத் துடிப்பார்கள்.
5. உங்களிடமோ அல்லது உங்கள் துணையிடமோ மாம்ச பாலியல் உணர்வுகளை தூண்டுகின்ற விதமாக நடப்பார்கள்.
6. ”உன் துணையை விட்டு விட்டு வா, நான் உன்னை ஏற்றுக்கொள்கின்றேன் நாம் சந்தோஷமாக வாழலாம்” என்று ஆசை வார்த்தைகளை தாரளமாக கூறுவார்கள்.
7.உங்களிடமோ அல்லது உங்கள் துணையிடமோ யாருக்கும் தெரியாமல் இரகசியமாக பேசுகின்றவர்களாகவும், இரகசிய சாட்டிங் செய்கின்றவர்களாகவும் இருப்பார்கள்.
8. உங்களிடமோ அல்லது உங்கள் துணையிடமோ யாருமில்லாத தனிமையான நேரத்தில் மட்டும் பேசுவார்கள். யாராவது கூட இருந்தால் பேசமாட்டார்கள்.
9. நீங்கள் உங்கள் துணையோடு வெளியே செல்வதோ, சந்தோசமாக இருப்பதோ, சேர்ந்து எடுத்த போட்டோவை வைப்பதோ கொஞ்சம்கூட அவர்களுக்கு பிடிக்காது.
10. உங்கள் துணை ஏதாவது வியாதியினால் பாதிக்கப்படும்போதும் அல்லது பெலவீனப்படும் நேரத்திலும் சந்தோஷப்படுவார்கள். தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள்.
11. நீங்களோ அல்லது உங்கள் துணையோ தேவைகளுக்காக அவர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
12. உங்கள் மீதோ அல்லது உங்கள் துணை மீது அதிக உரிமை எடுத்து பேசுவார்கள். தவறான நோக்கத்தோடு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பணத்தையோ அல்லது பரிசுப் பொருள்களையோ கொடுப்பார்கள்.
13.குடும்பத்தில் வரதட்சனை பிரச்சனைகளை கொண்டுவருவார்கள். வரதட்சனை காரணம் காட்டி கணவன்-மனைவியை பிரிப்பார்கள்.
14.பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ உன் துனையை விட்டு வெளியே சென்று, வேறு திருமணம் செய்து கொள் என்று ஆலோசனைக் கூறுவார்கள்.
ஆணோ, பெண்ணோ அவர்களிடம் இப்படிப்பட்ட அறிகுறிகள் அதிகமாக காணப்படுமானால், அவர்களிடம் குடும்ப பிரிவினையின் ஆவி உள்ளது என்பதனை அறிந்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட நபர்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இனி இத்தகைய
குடும்பப் பிரிவினை ஆவியால் தாக்கப்பட்ட குடும்பங்களின் அடையாளங்கள் என்னென்ன என்பதனை
தொடர்ச்சியாக பார்க்கலாம்.
குடும்ப பிரிவினை ஆவியால் தாக்கப்பட்ட குடும்பங்களின் அறிகுறிகள்:
1. கணவன்-மனைவிக்குள் எப்பொழுதோ அல்லது அடிக்கடியோ சின்ன சிறு சண்டைகள் அல்லது பெரிய சண்டைகள் வரும். ஒருமனமின்றி சமாதானக் குலைச்சல்கள் காணப்படும். குடும்ப வாழ்க்கை வெறுமையாக இருக்கும்.
2. கணவன்-மனைவி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ்வார்கள்.
3. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் டைவர்ஸ் என்ற வார்த்தையையும், ”நீ வேண்டாம்; நாம் பிரிந்து விடுவோம்” என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருப்பார்கள்.
4. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் ”தற்கொலை செய்துவிடுவேன், உயிரோடிருக்க பிடிக்கவில்லை செத்துவிடுவேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார்கள்.
5. தன் துணையை பார்க்கும் போதும், பேசும் போதும் கொஞ்சம் கூட சமாதானம் இல்லாமல் எரிச்சல்தான் வரும்.
6. துணை யாராவது வியாதிப் பட்டால் மற்றவர்கள் எந்த விதமான Caring-ம் இல்லாமல் அசட்டையாக இருப்பார்கள். துணையைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
7. வீட்டில் தங்குவதை விரும்பமாட்டார்கள். கணவனாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் தங்கி விடுவார்கள். மனைவியாக இருந்தால் அடிக்கடி பெற்றோரின் வீட்டிற்கு சென்று வருவார்கள்.
8.கணவன்-மனைவிக்கான தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனைகள் காணப்படும்.
9. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மற்றவர்களிடம் கள்ளக்காதல் ஏற்படலாம். மணிக்கணக்காக யாரோ ஒருவரிடம் இரகசியமாக பேசலாம்.
10. கணவன் அல்லது மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க மாட்டார்கள் பொய் பேசி கொள்பவர்களாக இருப்பார்கள்.
11. குடும்பத்தின் தரித்திரக் கட்டு அதிகமாக இருக்கும். தேவையான வருமானம் கிடைக்காது.
12. கணவன் அல்லது மனைவி யாராவது
ஒருவருக்கு வேறு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம் அடிக்கடி வரும்.
பிரிவினை ஆவியால் தாக்கப்பட்ட குடும்பத்தில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படும். எனவே, குடும்பத்தில் காணப்படும் போதே, உடனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே துரத்த வேண்டும் தொடர்ந்து இப்படி செய்தால் இந்த ஆவியை எளிதாக ஜெயிக்கலாம்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ClickHere
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment