கிரியை செய்யும் ஆட்கள்



     அப்போஸ்தலனாகிய பவுல் உட்பட  இருநூற்றெழுபத்தாறு பேர், அகுஸ்து பட்டாளத்தை சேர்ந்த யூலியு என்னும் பேர்க்கொண்ட நூற்றுக்கதிபதியின் தலைமையில், இத்தாலியா தேசத்திற்கு, போகும்படி கப்பல் பிரயாணம் செய்தார்கள்.  அப்பொழுது யூரோக்கிலியத்தோன்  என்னும் கடும் காற்று, அவர்களை  தாக்கிற்று. கப்பல்  அதில் சிக்கிக் கொண்டபடியினால் அவர்களால்  தொடர்ந்து  பயணம்  செய்ய முடியவில்லை.  கப்பலின்  தளவாடங்களையும், சரக்குகளையும் கைகளினால் எடுத்து, கடலில் எறிந்தார்கள்.  பல நாட்களாக  சூரியனையாவது,  நட்சத்திரங்களையாவது காணாமலும், போஜனம் பண்ணாமலும், இனித் தப்பிப்பிழைப்போம் என்கின்ற நம்பிக்கை இல்லாமலும் இருந்தார்கள்.  அவர்களை அந்தகார இருள் சூழ்ந்திருந்தது.

    அப்பொழுது, பவுல் அவர்கள் நடுவே நின்று கப்பற்சேதமேயல்லாமல், உங்களில் ஒருவருக்கும் பிராணச் சேதம் வராது என்று தைரியம் சொன்னான். ஏனென்றால், முந்தின நாள் இரவு பவுலே பயப்படாதே!  நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்.  இதோ,  உன்னுடனேக்கூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்று ஒரு தூதனை அனுப்பி, பரலோக தேவன் அவனுக்கு வாக்கு பண்ணியிருந்தார்.  அதனால்தான்,  பவுல் உங்களுக்கு உயிர் சேதம் ஒன்றும் வராது என்று அடித்து  தீர்க்கமாகச் சொன்னான். 

      இதன்படி, வழித்தெரியாமல் சுற்றித் திரிந்த நேரத்தில், வாக்குத்தத்தம் நிறைவேறும் விதமாக அவர்களுக்கு ஒரு கரை  தென்பட்டது. அங்கே சென்று, தப்பித்து பிழைக்க நினைக்கையில் கப்பலில் இருந்த கப்பல் ஆட்கள் வெளியே செல்ல வகைத் தேடினார்கள்.  அப்பொழுது, பவுல் நூற்றுக்கதிபதியையும்,  சேவகர்களையும் நோக்கி,  இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்க மாட்டீர்கள் என்றான்.  (அப்போஸ்தலர் 27)

      பரலோக தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்க,  இவர்கள் இல்லாவிட்டால் நீங்கள் பிழைக்க மாட்டீர்கள் என்று பவுல் சொல்லக் காரணம் என்ன? யார் இவர்கள்? ஏன் இவர்கள் கப்பலில் இருக்கவேண்டும்? இவர்கள் இல்லாமல் பரலோக தேவனால் அவர்களை காப்பாற்ற முடியாதா? என்று ஆராய்ந்து பார்த்தால், ஆவிக்குரிய வாழ்க்கையில் பரலோக தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தினை சுதந்தரித்துக்கொள்ள, இவர்களின் பங்கு மிக அவசியமான ஒன்று என்பது புலப்படும்.

      இந்த தீர்க்கதரிசனச் செய்தியில்  யார் இவர்கள்? இவர்களின் பங்கு ஏன் அவசியமானது? என்பதனை குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்? ஜெபத்துடன் வாசியுங்கள். உங்களுக்கு ஆவிக்குரிய செவிகள் திறக்கப்படும்.  பரிசுத்த ஆவியானவரின்  மெல்லிய சத்தத்தினை கேட்பீர்கள். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். 

    பரலோக தேவனைக் குறித்து விண்ணப்பம் செய்யும்போது, அவற்றினைக் கேட்டு, ஜெபத்திற்கு பதிலாக வாக்குத்தத்தங்களை தீர்க்கதரிசனமாக நமக்கு கொடுப்பார். பின்பு அந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற  சில மனிதர்களைப் பயன்படுத்துவார். அவ்வாறு பயன்படுத்தும் மனிதர்கள் கிரியை செய்யும் ஆட்கள் ஆவார்கள். இந்த ஆட்கள் வாக்குத்தத்தம் நிறைவேறும் வரை,  நம்முடனே கூட இருப்பார்கள். நமக்கு பரலோக ஆலோசனைகளைக் கொடுத்து, வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க உதவி செய்வார்கள். இவர்கள் பரலோக தூதர்களைப்போல் நம்முடன் இருந்து கிரியை செய்வதினால் வாக்குத்தத்தங்கள் எளிதாக சீக்கிரம் நிறைவேறும். 

   ஆனால், இதை தெரிந்த  பிசாசு அவர்கள் கிரியை செய்யக்கூடாதபடிக்கு தடைச் செய்வான்.  அவர்களை நம்மை விட்டு, வெளியே  எடுப்பதில் அதிக முயற்சி செய்வான். எனவே அவர்கள் மூலமாக தேவன் செய்கின்ற கிரியைகளை பிசாசு  தடை செய்யாதபடிக்கு மிகவும் ஊக்கமாகச்  ஜெபிக்க வேண்டும்.  இதனால், நம் வாழ்க்கையில் பரலோக தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள், தாமதமில்லாமல் நிறைவேறும்.  

     வாக்குத்தத்ததினை பெற்ற தேவனுடைய பிள்ளைகள் முதலில் கிரியை செய்யும் ஆட்கள் யார்? யார்? என்பதனை கண்டுப்பிடிக்க வேண்டும்.  அவர்கள் பரலோக கிரியைகளை நடத்தும் படி கருத்தாக ஜெபிக்க வேண்டும்.  அவர்கள்  நம் வாழ்க்கையை விட்டு  வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு முன்பாக செல்லாதபடிக்கு பாதுகாக்கவேண்டும்.  இவ்வாறு செய்வதினால் வாக்குத்தத்தங்களை எளிதாக சுதந்தரிக்கலாம்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..