ஒரு மணி நேரம்…
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனுஷக்குமாரனாக ஊழியம் செய்த காலத்தில், கடைசி நாட்களில் தன்னுடைய சீஷனாகிய பேதுருவை நோக்கி, ஒருமணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்க கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனம் உள்ளது என்றார்.(மத்தேயு 26:40,41) சீஷர்களை நோக்கி ஒருமணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்கக் கூடாதா என்று சொல்வதற்கான காரணம் என்ன? அப்படி பேதுருவுக்கு என்ன சோதனை வந்தது? மற்ற சீஷர்களுக்கு வந்த சோதனைகள் என்ன? தேவனுடைய பிள்ளைகள் தினமும் ஒரு மணி நேரம் விழித்திருந்து ஜெபம் செய்வதன் அவசியம் என்ன? கொஞ்சம் விரிவாக பரிசுத்த வேதவசனத்தின் வெளிச்சத்திலிருந்து இந்த தீர்க்கதரிசன தொகுப்பில் பார்க்கலாம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
தேவனுடைய பிள்ளைகளையோ, தேவஊழியர்களையோ பரலோக அனுமதி இல்லாமல், பிசாசினால் தொடவும், சோதிக்கவும் முடியாது. இது ஆவிக்குரியச் சட்டம். சோதனைக்காரனாகிய பிசாசு சீஷர்களை சோதித்துப் பார்ப்பதற்காக கர்த்தரிடத்தில் சென்று உத்தரவு கேட்டான். கோதுமையை சுளகினால் புடைத்து, அதற்குள் மறைந்திருக்கும் பதரை தனியாக எடுப்பது போல, சீஷர்களையும் புடமிட்டு, அவர்களுக்குள் காணப்படும் பதருகளை, தேவ ஐக்கியத்திலிருந்து பிரித்து தன்னுடைய திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.
”என்னுடைய சீஷர்களை நீ எப்படி சோதிப்பாய்? அவர்களை சோதிக்கக் கூடாது” என்று பிசாசுக்கு எதிர்த்து நிற்காமல், ”அவர்களை சோதித்துப் பார்” என்று கர்த்தராகிய தேவனோ அதற்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால், பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு பிதாவாகிய தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தார்.
இந்த நேரத்தில் கர்த்தராகிய தேவன் அனுமதி கொடுத்ததால் பேதுருவுக்கும் மற்ற சீஷர்களுக்கும் சோதனை கண்டிப்பாக வரும் இது உறுதி. ஆனால், பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு வேண்டிக் கொண்டதினால், முதலில் அவன் எளிதாக ஜெயமெடுத்து, மற்ற சீஷர்களை ஸ்திரப்படுத்துவான். பின்பு அவர்கள் பிசாசை தோற்கடிப்பார்கள். இது பரலோக தேவனின் திட்டமாகும். (லூக்கா 22:31,32)
இந்த திட்டத்தினை பேதுருவிடம் கூறினார். அதற்கு அவன் ”ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றி வர, ஆயத்தமாக இருக்கின்றேன்; யார் தடுத்தாலும், நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்” என்று மாம்சத்தில் வைராக்கியமாக சொன்னான். அதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றைக்கு சேவல் கூவுகிறதற்கு முன்பு நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று தீர்க்கதரிசனமாக கூறினார் (லூக்கா 22:33,34)
அதாவது, பேதுருவையும் மற்ற சீஷர்களையும் சோதித்து பார்க்க பிசாசு திட்டம் தீட்டி, தேவனிடத்தில் அனுமதியும் கேட்கின்றான். கர்த்தராகிய தேவனும் அனுமதியும் கொடுத்துவிட்டார். சோதனை எப்பொழுது நடக்கும் என்றும், பேதுரு சோதனை நேரத்தில் என்னென்ன செய்வான் என்பதையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார். ஏன் சோதனையில் பேதுரு தோற்றுப்போய் மூன்றுதரம் மறுதலிப்பான் என்பதனையும் வெளிப்படுத்தி விட்டார். சாதாரண தீர்க்கதரிசிகள் சொன்னாலே கண்டிப்பாக நடக்கும். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம். எனவே, கண்டிப்பாக நடக்கும் பேதுருவுக்கு சோதனை வரும். அவன் அதில் தோற்றுப் போவான். இது உறுதி கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது.
பின்பு, தன்னுடைய வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்கு சென்று, தன்னுடைய சீஷர்களை நோக்கி சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபியுங்கள் என்று சொல்லிவிட்டு, தானும் ஜெபிக்க சென்றார். ஜெபம் பண்ணின பின்பு திரும்ப தன்னுடைய சீஷர்கள் இருந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்ன சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் என்று கூறினார். அப்பொழுதுதான் பேதுருவையும் நோக்கி ஒருமணி நேரமாவது என்னோடு கூட விழித்திருக்கக் கூடாதா? என்று கூறினார்.
அதாவது, பிசாசின் சோதனைக்கு கர்த்தராகிய தேவன் அனுமதி கொடுத்ததினால் சீஷர்களுக்கு சோதனை வருவது நிச்சயம். அந்த சோதனைக்குட்படாதபடிக்கு தப்பிக்க ஜெபம் பண்ணுங்கள் என்று ஆலோசனை சொன்னார். பேதுரு மூன்றுதரம் மறுதலிப்பான் என்று தீர்க்கதரிசனமாக சொன்னதினால், அவன் மறுதலிப்பது அதி நிச்சயம். ஆனால், சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டு பண்ணுகிற தேவன் அவன் அந்த சோதனையில் அகப்படாதபடி ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும் என்று அவனுக்கு சொன்னார்.(1 கொரிந்தியர் 10:13)
ஆனால், பேதுருவும் மற்ற சீஷர்களும் அந்த ஆலோசனையை அசட்டைப் பண்ணி, ஒருமணி நேரமாவது விழித்திருந்து ஜெபம் பண்ணாமல், நன்றாக தூங்கினார்கள். இதனால், பிசாசு கொண்டு வந்த சோதனையில் சிக்கினார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு நிர்வாணியாக ஓடினார்கள். (மாற்கு 14:50) அதிகாலை நேரத்தில் பேதுருவும் சோதனையில் சிக்கி மூன்றுமுறை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்தான்.
இந்த தீர்க்கதரிசன செய்தியிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் இரகசியம் என்னவென்றால், எதிரியாகிய பிசாசு தினம்தினம் நிமிடந்தோறும் தேவப்பிள்ளைகளை சோதிப்பதற்காக போராடுவான். தேவசமூகத்தில் குற்றம்சாட்டி அதற்கான அனுமதியும் கேட்பான். சில நேரங்களில் நீதியின் பொருட்டு பரலோக தேவன் அனுமதியும் கொடுத்து இருக்கலாம். நமக்கு வரும் சோதனைகளை குறித்தும், அது வரும் நாட்களையும் வெளிப்பாடுகளாகவோ, தரிசனங்களாகவோ, கனவுகள் மூலமாகவோ வெளிப்படுத்தியுமிருக்கலாம்.
ஏன் அந்த சோதனையில் நாம் தோற்றுப்போவோம் என்பதனையும் பெரிய தீர்க்கதரிசிகள் மூலமாக தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், தினமும் ஒருமணி நேரமாவது தேவப்பிரசனத்தில் காத்திருந்து ஜெபித்தால் போதும், அந்த சோதனைக்குள் சிக்கிக்கொள்ளமாட்டோம். இதனால் வீணான போராட்டங்கள் வராது. பிசாசும் ஜெயமெடுக்கமாட்டான். நாமும் மறுதலிக்க மாட்டோம் என்பதாகும்.
நீதியின் பொருட்டு பரலோக தேவன் அனுமதி கொடுத்த சோதனையைக்கூட ஒருமணி நேர ஜெபத்தினால் முறியடிக்கலாம் என்றால், மந்திரவாதிகள், சூனியம் செய்கின்றவர்கள், குறிச்சொல்லுகின்றவர்கள் நமக்கு விரோதமாக செய்கின்ற மாந்திரீக தாக்குதல்களையும், சூனியங்களையும் எவ்வளவு அதிகமாக முறியடிக்கலாம்.
எனவே தேவனுடைய விசுவாச பிள்ளைகள் ”எனக்கு யாரோ
மாந்திரீகம் செய்துவிட்டார்கள்; சூனியம் செய்து விட்டார்கள்” என்று அழுது புலம்பாமல்,
ஒருமணி நேரமாவது கருத்தாக ஜெபிக்க தேவப்பிரசன்னத்தில் அமர்வோம். பிசாசு கொண்டு வரும்
சோதனைகளை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்
இரத்தத்தினாலே ஜெபத்தினால் முறியடிப்போம். எல்லா மகிமையும் திரியேக தேவனுக்கே உண்டாகட்டும்.ஆமென்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment