ஏரோதியாளின் ஆவி



     தனக்கு உரிமை இல்லாத பிற ஆண்மகன் மீதோ  அல்லது திருமணமான மற்றொருத்தியின் கணவன் மீதோ, இரகசிய காதலுக்கு இடம் கொடுத்து, அவனை தனக்கு உரிமையாக எடுக்கத் தூண்டுவது ஏரோதியாளின் ஆவி ஆகும். ஏரோதியாளின் ஆவி என்றால் என்ன? அதன் கிரியைகள் எப்படி இருக்கும்? அது யாரைத்தாக்கும்? அந்த ஆவி தாக்கியதற்கான அறிகுறிகள் என்னென்ன? அது தாக்கினால் என்னனென்ன பாதிப்புகள் ஏற்படும்? இந்த ஆவி தாக்காதபடிக்கு  நாம் எப்படி தப்பலாம்? போன்ற மிக ஆழ்ந்த இரகசியத்தினை ஏரோதியாளின் ஆவி என்ற தலைப்பில் உள்ள இந்த தீர்க்கதரிசன செய்தியில் பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் விரிவாகத் தியானிக்கலாம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இடைப்பட்டு பேசுவார். ஏரோதியாளின் ஆவியைக் குறித்த சத்தியத்தினை அறிந்துக் கொள்வீர்கள். அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

    ஏரோதியாளின் சுபாவத்தை பிரதிபலித்து, அவளின் கிரியைகளை செய்யத்தூண்டுவது ஏரோதியாளின் ஆவி ஆகும். யார் இந்த ஏரோதியாள்? காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கு அதிபதியாக இருந்த பிலிப்புவின் மனைவிதான் ஏரோதியாள். அதிபதியின் குடும்பத்தை சேர்ந்தவள். பிலிப்பு என்பவன் காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாக இருந்த ஏரோதின் சகோதரன் ஆவான். 

  இந்த ஏரோதியாளுக்கு தன் கணவனின் சகோதரரான ஏரோதின் மீது முறையற்ற காதல். அவனோடு குடும்பம் நடத்தவேண்டும் என்று விரும்பினாள். எனவே, அவனை தன் வார்த்தையினாலும், வஞ்சகத்தினாலும் மயக்கி, அவனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டாள். அவனும் தன் சகோதரன் மனைவி என்று பாராமல் அவளை தன் மனைவியாக எடுத்துக்கொண்டான். தனக்கு கணவன் இருக்க, பிற ஆண் மகனோடு அல்லது மற்றொருத்தியின் கணவனோடு ஆசை வைத்து, காதல் செய்து, அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவதும், சேர்ந்து வாழ்வதும் ஏரோதியாளின் ஆவியின் கிரியை ஆகும்.

   இந்த சூழ்நிலையில்தான் தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன், ஏரோதிடம் சென்று உம்முடைய சகோதரன் மனைவியை நீ வைத்துக்கொள்வது நியாயமல்ல என்று கூறினான். இப்படிப்பட்ட பாவங்களை தீர்க்கத்தரிசிகள்தான் தைரியமாக மிகக்கடுமையாக எதிர்த்து நேருக்கு நேர் கூறுவார்கள். இப்படி சொன்னதனிமித்தம் ஏரோது அவனைப் பிடித்து, கட்டி, காவலில் வைத்தான். எப்படியாவது, அவனைக் கொலை செய்து, அழிக்க வேண்டும் என்று ஏரோதியாளும் சதி நினைத்தாள்.

  ஏன் இப்படி நினைக்க வேண்டும்? ஒரு தீர்க்கத்தரிசியை கொல்லும் அளவிற்கு அவளுக்கு என்ன ஆத்திரம் வந்தது? யோவான் ஸ்நானகன் நீதியும், பரிசுத்தமும் உள்ளவனென்று ஏரோது அறிந்திருந்தான். எனவே, அவனுக்கு பயந்து, அவனைப் பாதுகாத்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு, அவன் யோசனையின்படி  அநேக காரியங்களைச் செய்து வந்தான். இதை நன்கு தெரிந்த ஏரோதியாள், ஒருவேளை  பரிசுத்தத்தினை போதித்து, தன்னுடைய கள்ளக்காதலனை தன்னைவிட்டு பிரித்து விடுவானோ என்று பயந்தாள். எனவே, யோவானுக்கு விரோதமாக சதி நினைத்து, அவனைக் கொலை செய்து அழிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினாள். தன்னுடைய முறையற்ற காதலுக்கு இடையூராக இருக்கும் யாரையும், எவரையும், கொலை செய்து அழிக்கத்தூண்டுவது ஏரோதியாளின் ஆவியின் கிரியை ஆகும். 

 பின்பு, ஒருநாள் அவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது தன் பிறந்தநாளைக் கொண்டாடினான். அந்தக் கொண்டாட்டத்தில் தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டில் பிரதான மனுஷருக்கும் விருந்து செய்தான். அவர்கள் எல்லாரும் பந்தியிருக்கும் போது, ஏரோதியாளின் மகள், அவர்கள் நடுவே வந்து நடனம்பண்ணி, அவர்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தினாள். அதில் மயங்கிய ஏரோது, அந்த சிறுபெண்ணிடத்தில், உனக்கு வேண்டியதை தயங்காமல் என்னிடத்தில் கேள், அதை உனக்கு தருவேன்  என்று சொன்னதுமல்லாமல்,  என் இராஜ்ஜியத்தில் பாதிக்கேட்டாலும் உனக்குத் தருவேன் என்று ஆணையும் இட்டுக்கொடுத்தான்.

  உடனே அந்த சிறுமி வெளியே ஓடிச்சென்று, ’நான் என்ன கேட்க வேண்டும்’ என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். ஏரோதியாள் நினைத்திருந்தால், இராஜ்ஜியத்தின்  பாதிக் கேட்டிருக்கலாம்,  பணம், ஆஸ்தி, அந்தஸ்தையெல்லாம் கேட்டிருக்கலாம், ஆனால், அதில் ஒன்றைக் கூடக் கேட்காமல், தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த, யோவான் ஸ்நானகனின் தலையை மட்டும் வெட்டச்சொல்கின்றாள். அவளுக்கு பணம், ஆஸ்தி மீது எந்த ஒரு விருப்பமும் ஆசையும் இல்லை. மாறாக திருட்டு வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஒரு விருப்பம் மாத்திரமே இருந்தது. இப்படி மற்றவர்களின் கணவனை எடுத்துக்கொள்ளவும், அதற்காக எதையும் இழக்க ஆயத்தமாக இருப்பதும் ஏரோதியாளின் ஆவியாகும்.

   உடனே, அந்த சிறுமி சீக்கிரமாய் ஏரோதினிடத்தில் வந்து, யோவான் ஸ்நானகனுடைய தலையை எனக்கு தரவேண்டும் என்று கேட்டாள். அதைக்கேட்டவுடன் ஏரோது மிகவும் துக்கமடைந்தான். அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனாலும், தான் சொன்ன ஆணையினிமித்தமும், கூட பந்தியிருந்தவர்களினிமித்தமும், மறுக்க மனமில்லாமல், உடனே, யோவான் ஸ்நானகனுடைய தலையை வெட்டிக் கொண்டு வரும்படி கட்டளையிடுகின்றான். அதன்படி அவனுடைய தலை வெட்டப்படுகின்றது. முறையற்ற வாழ்க்கை  வாழ வேண்டும் என்பதற்காக தீர்க்கத்தரிசியின் தலை வெட்டப்பட்டது. அவன் கொலை செய்யப்பட்டான்.

     இந்தக் கடைசி நாட்களிலும், ஏரோதியாளின் ஆவி மிகவும் பயங்கரமாக கிரியை செய்கின்றது. இந்த ஆவி நம்முடைய சபையையும், குடும்பங்களையும், உறவினர்களையும் தாக்காதபடிக்கு கருத்தாக நாம் ஜெபிக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஆவிக்கு எதிர்த்து நிற்க வேண்டும். 

  சரி, ஏரோதியாளின் ஆவி எப்படி கிரியை செய்யும்? என்பதனையும், இதன் அறிகுறிகள் என்னென்ன? என்பதனையும், நாம் தெரிந்துக் கொண்டால்தான் அதை நாம் எளிதாக எதிர்த்து நின்று ஜெயமெடுக்கலாம். இந்த செய்தியின் தொடர்ச்சியாக ஏரோதியாளின் ஆவி கிரியை செய்வதற்கான  அறிகுறிகள் என்னென்ன என்பதனை தியானிக்கலாம். 

ஏரோதியாளின் ஆவி கிரியை செய்வதற்கான  அறிகுறிகள்: 

 1.மற்றொருவனின் கணவன் என்று தெரிந்தும், அவனுக்கு நல்ல மனைவி, பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதனை நன்கு அறிந்தும், அவன் மீது வரும் ஈர்ப்பு, ஆசை, காதல், இச்சை போன்றவைகளெல்லாம் இந்த ஆவியின் அறிகுறிகளாகும்.

2.பணத்தையோ, நகையையோ ஒரு பொருட்டாக எண்ணாமல், தன் கணவனுக்கு தெரியாமல் அவ்வப்போது, திருமணமான மற்ற ஆண்மகனுக்கு, இரகசியமாகக் கொடுத்து உதவுவது இந்த ஆவியின் தூண்டுதலாகும். 

3.தனக்கு இருக்கும் நல்ல வாழ்க்கையையும், நல்ல கணவன், பிள்ளைகளையும்,  மானம், மரியாதை, ஆஸ்தி, அந்தஸ்து, பணம் போன்ற எதை இழந்தாலும் பரவாயில்லை, அவனோடு வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற எண்ணம் வந்தால் அது இந்த ஆவியின் அறிகுறியாகும். 

4. எல்லா வசதியும், நல்ல வேலை இருந்தும் தன்னுடைய சொந்த கணவனிடமிருந்து கிடைக்கவேண்டிய Caring கிடைக்கவில்லை என்பதற்காக, திருமணமான பிற ஆண் மகனிடம் Caring –ஐ எதிர்பார்ப்பதும், பாசத்தை எதிர்ப்பார்ப்பதும், ஆசைக்கொள்வதும்  இந்த ஆவியின் அறிகுறியாகும். 

5. திருமணமான அவன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, அவனோடு இரகசியமாக வாழ்கின்றேன் என்ற எண்ணம் வருவதும் இதன் அறிகுறியாகும்.

6. ”நீ உன் மனைவி மற்றும் உன் பிள்ளைகளோடு வாழ்ந்துக்கொள்; நான் என் கணவன் பிள்ளைகளோடு வாழ்ந்து கொள்கிறேன், ஆனாலும், நமக்குள் இரகசியகாதல்   இருக்கட்டும்; நாம் யாருக்கும் தெரியாத அந்தரங்க lover ஆக இருந்துவிடுவோம்” என்பதும், இந்த ஆவியின் கிரியைகளில் ஒன்றாகும். 

7.மாம்ச இச்சைகளைத் தீர்ப்பதற்க்கு கிரியை செய்வது விபச்சார வேசித்தனத்தின் ஆவியாகும். இதற்கு அப்பாற்பட்டு, உடற்பசியை ஒரு பொருட்டாக எண்ணாமல், திருமணமான பிற ஆண் மகனோடு இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் அதற்கான வைராக்கியத்தையும், கொடுப்பது ஏரோதியாளின் ஆவி ஆகும்.

8.தன்னுடைய முறையற்ற காதலுக்கு தடையாகவோ, இடையூராகவோ யாராக இருந்தாலும், அவர்களை கொலை செய்து, அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினையும், அவர்கள் யாராக இருந்தாலும் எனக்கு தேவையில்லை என்ற எண்ணத்தினையும் தருவது ஏரோதியாளின் ஆவியாகும்.

9.வாழ்ந்தால் உன்னோடு மட்டும் தான் வாழ்வேன் என்று உரிமையில்லாத ஆண் மகனோடு வைராக்கியமாக சொல்வது ஏரோதியாளின் ஆவியின் கிரியை ஆகும். 

10.உனக்கு பணம் தருகின்றேன், என்னை விட்டுவிடு என்று சொன்னாலும், பணம், ஆஸ்தியை ஒரு பொருட்டாக எண்ணாமல், பணம் வேண்டாம், நீ மட்டும் போதும் உன்னோடுதான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பது ஏரோதியாளின் ஆவியின் கிரியை ஆகும்.

  மேற்கண்ட கிரியைகள் எல்லாம் ஏரோதியாளின் ஆவியின் அறிகுறியாகும். அறிகுறிகள் நம் வாழ்க்கையில், நம் சபையில், நம் குடும்பத்தில் காணப்பட்டால், உடனே அவற்றை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கடிந்து அப்புறப்படுத்த வேண்டும். மெய்யான விடுதலையை பெறும் வரை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். 

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 



Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..