வீட்டோடே மாப்பிள்ளை
சிலர்
தான் பெண்ணெடுத்த மாமனார்
வீட்டிலேயே செட்டிலாகி, வீட்டோடே மாப்பிள்ளையாக இருந்து,
மறுபெற்றோராகிய தன்னுடைய மாமனார், மாமியாருக்கு பணிவிடை
செய்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களை கவனிக்காத இந்நாட்களில்,
தன்னுடைய மறுபெற்றோர்களை கவனித்து,
அவர்களுடனே இருந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து,
பராமரிப்பது மிகவும் நல்ல காரியம். இந்த சுபாவம்
எல்லாருக்கும் கிடையாது. இது பாவம் அல்ல, தேவனுடையப் பார்வையில் குற்றமும் அல்ல.
ஆனால், சில சாபத்தினிமித்தமும், தேவக்கோபத்தினிமித்தமும், இப்படிப்பட்ட அடிமைத்தனம்
தொடர்ந்து வரும். பெற்றோர்களை பார்க்க
முடியாமலும், இருதயத்தில் கொஞ்சம்கூட
சமாதானம் இல்லாமலும் பெண்ணெடுத்த மாமனார் வீட்டிலேயே அடிமையாக,
வீட்டோடே மாப்பிள்ளையாக இருப்பார்கள். இது ஒரு அடிமைத்தனத்தின் சாபமாகும்.
இந்த தீர்க்கதரிசன செய்தியில், ஈசாக்கின் மகன் யாக்கோபின் வாழ்க்கையில் இருந்து, வீட்டோடே மாப்பிள்ளை என்ற அடிமைத்தனத்தின் சாபம் ஏன் வருகின்றது? இதன் அறிகுறிகள் என்னென்ன? இந்த சாபத்திலிருந்து எப்படி விடுதலை பெறலாம்? போன்றவற்றினை கொஞ்சம் விரிவாக ஆழமாகத் தியானிக்கலாம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். ஒருவேளை இந்த சாபம் உங்களைத் தொடர்ந்து வருமானால் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். சாபக் கட்டுகளை உடைத்தெறிவார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு–ரெபேக்காள் தம்பதிகளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். மூத்தவன் பெயர் ஏசா, இளையவன் பெயர் யாக்கோபு ஆவான். இவ்விரண்டு பேரில் இளையவனாகிய யாக்கோபைக் குறித்து பரலோக தேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். இதை, அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே வெளிப்படுத்தியிருந்தார். (ஆதியாகமம் 25:23). கிட்டத்தட்ட 78 வயது வரை யாக்கோபு அந்த திட்டத்திற்குள் வராமல், திருமணம் செய்யாமல் கூடார வாசியாகவும், எத்தனாகவும் இருந்தான்.
அவனை தன்னுடைய திட்டத்திற்குள் கொண்டுவருவதற்காக, பரலோக தேவன் கிரியை செய்தார். திருமணம் செய்வதற்காக யாக்கோபின் தாய்மாமனாகிய லாபான் தேசத்திற்கு அனுப்பினார். அங்கு சென்றவன், லாபானின் இரண்டு குமாரத்திகளை விவாகம் செய்து, 20 வருடம் வீட்டோடே மாப்பிள்ளையாக இருந்து, அடிமையாகவும், வேலைக்காரனாகவும் ஊழியம் செய்தான். பகலிலே வெயிலும், இரவிலே குளிரும் அவனைப் பட்சித்தது. தூக்கம் அவனுடையக் கண்களுக்கு தூரமாயிருந்தது. இவ்விதமாய் அவன் பாடுபட்டான்.
எப்பொழுது பரலோக தேவன் தன்னைக் குறித்து வைத்திருக்கும்
திட்டங்களை உணர்ந்தானோ, அதன்பின்பு வீட்டோடே மாப்பிள்ளை என்ற அடிமைத்தனத்திலிருந்து
விடுதலையாகி, தன் தகப்பனுடைய தேசத்திற்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்கும்
திரும்பி வந்தான். அவனுடைய இரண்டு மனைவிகளும்
தன் தகப்பனுடைய தேசத்தையும், வீட்டையும் விட்டு கானான் தேசத்திற்கு வந்தார்கள். யாக்கோபைக்
குறித்த தேவத்திட்டம் நிறைவேறியது.
எனக்கு தெரிந்த ஒரு சகோதரனைக் குறித்து, சர்வ வல்ல தேவன் ஊழியம் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். அவனோ, உலக ஆசைக்கு இடம் கொடுத்து, உலக மனிதர்களை போல வாழ ஆசைப்பட்டு, உலக அரசாங்க வேலைக்கு சென்றுவிட்டாரன். தேவத்திட்டத்திற்கு வெளியே சென்றுவிட்டான். தேவத்திட்டத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அந்த சகோதரனை, இந்த சாபத்தின் ஆவி தாக்கியது. நல்ல ஊர், நல்ல வீடு, நல்ல வசதி, நல்ல பெற்றோர்கள் இருக்க அவர்களையெல்லாம் விட்டு பிரிந்து, தன் மனைவி வீட்டில், வீட்டோடே மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்டான். தன்னுடைய ஊருக்கு செல்ல வேண்டும். தன்னுடைய பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் இருந்தும், அவனால் முடியவில்லை. கொஞ்சம் கூட இருதயத்தில் சமாதானம் இல்லாமல், அடிமைத்தனத்தில் இருக்கின்றான். அவனுடைய மனைவி அவரை அடிமைப்படுத்துயுள்ளாள்.
இந்த நாட்களில் தன்னைக் குறித்து பரலோக தேவன் வைத்திருக்கும் மிகப்பெரிய திட்டத்தினை மறந்து, உலக மனிதர்களை போல் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, உலகத்திற்கு இடம் கொடுக்கின்றவர்களும், பரலோகத் திட்டத்தினை விட்டு வெளியே செல்கின்றவர்களும், தன்னுடைய மனைவி வீட்டில் வீட்டோடே மாப்பிள்ளையாக இருந்து அடிமையாக வாழ்கின்றார்கள்.
இந்த தீர்க்கதரிசன செய்தியை கருத்தாக வாசிக்கின்ற
நீங்களும் ஒருவேளை வீட்டோடே மாப்பிள்ளையாக செட்டிலாகியிருக்கலாம். அது நல்லதுதான்.
அது பாவமல்ல. ஆனால், உங்கள் இருதயத்தில் சமாதானம் இல்லாமல், ஏதோ ஒரு அடிமைத்தனத்தின்
வாழ்க்கையை போல் உணர்ந்தால், முதலில் இந்த தீர்க்கதரிசன செய்திக்கு உங்களை ஒப்புக்கொடுத்து
ஜெபியுங்கள். உங்களை கருத்தாக ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதாவது, தேவத்திட்டத்தை விட்டு
வெளியே வந்திருக்கிறீர்களா? என்று சோதித்துப் பாருங்கள். தேவத்திட்டத்திற்கு வெளியே
இருந்தால், உடனே தேவத்திட்டத்திற்குள் வாருங்கள்.
அடிமைத்தனத்தின் நுகத்தடி உடைக்கப்படும்.
உங்களைக் குறித்த தேவசித்தம் நிறைவேறும்.
உங்கள் பெற்றோர்களோடு சொந்த தேசத்தில் வாழ்வீர்கள். பெற்றோர்களை கவனிப்பது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை
திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment