பூமியில் வாழும் மனிதன் ஆவி, ஆத்துமா,
சரீரம் உள்ளவனாகக் காணப்படுகின்றான். மனிதனின் ஆத்துமாவில் நினைவுகள், யோசனைகள், சிந்தனைகள்,
உணர்ச்சிகள், விருப்பங்கள், சித்தம் போன்றவை காணப்படுகின்றன. இதில் நினைவுகள் பல வகைப்படும். அவை நல்ல நினைவுகள், கெட்ட நினைவுகள்,
சூனிய நினைவுகள், அசுத்த நினைவுகள், அக்கிரம நினைவுகள் என்று பல வகைகளாக பிரிக்கப்படுகின்றது.
இந்த தீர்க்கதரிசன செய்தியில் சூனிய நினைவுகளைக் குறித்தும், அது எப்படி ஆசீர்வாதத்தினையும்,
பரலோக அற்புதத்தினையும் தடுக்கும் என்பதனைக்
குறித்தும் விரிவாக தியானிப்போம் ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் உதவிச்
செய்வார்.
சூனிய நினைவுகள் என்பது பரலோக திட்டத்திற்கும்,
பரலோக சித்தத்திற்கும் மாறாக நினைப்பது ஆகும். ஒருவர் மரணப் படுக்கையில் கிடக்கும்போது,
அவருக்கு அற்புதம் செய்ய வேண்டும் என்பதும், நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்பதும்,
உயிர் பிழைத்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்பதும், தேவனுடைய சித்தம்.
ஆனால் சூழ்நிலைகளையும் மருத்துவ அறிக்கைகளையும் பார்த்து இவரால் எப்படிப் பிழைக்க முடியும்?
எப்படி வாழ முடியும்? என்று சிந்தனைகளில் நினைப்பது சூனிய நினைவுகள் ஆகும். இன்னும்
சிலர் மருத்துவச் செலவுகளைப் பார்த்து இந்த நபர் இறந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பார்கள்.
இப்படிப்பட்ட நினைவுகள் தேவனிடத்தில் இருந்துக் கிடைக்கும் பரலோக அற்புதங்களைத் தடை
செய்யும்.
அந்த மனிதனுக்கு பணம் செலவழித்து மருத்துவம் செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை. சர்வவல்ல தேவனால் எளிதில் அற்புதங்களை செய்துவிட முடியும். ஆனால் சூழ்நிலைகளையும்,
தேவைகளையும், கஷ்டங்களையும் பார்த்து அவிசுவாசமாக சூனிய நினைவுகளுக்கு இடம் கொடுத்தால்,
பரலோக தேவனால் அற்புதங்களைச் செய்ய முடியாது. சூனிய நினைவுகள் பரலோக தேவனின் கரங்களை
கிரியை செய்யக் கூடாதபடிக்கு இறுக கட்டிவிடும்.
இதனால்தான் மரித்த சிறுமியை உயிரோடு எழுப்ப செல்வதற்கு
முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவிசுவாசமான நினைவுகள் உள்ளவர்களை வெளியே துரத்தினார்.
பின்பு அற்புதங்களைச் செய்தார் என்று மாற்கு 5: 40 முதல் 43 வசனங்களில் வாசிக்கின்றோம்.
எனவே, வியாதிப்பட்டவர்கள், பெலவீனப்பட்டவர்கள்
உங்கள் வீடுகளில் இருந்தாலும் வேறு எந்தக் காரியமாக பிரச்சனைகளில் சிக்கி இருந்தவர்கள்
இருந்தாலும் அவிசுவாசமாக யோசித்து, சூனிய நினைவுகளுக்கு இடங்கொடுக்காமல், சர்வ வல்ல
தேவன் அற்புதங்களைச் செய்வார் என்று விசுவாச வார்த்தைகளை பேசுங்கள். தமக்கு விரோதமாக
மற்றவர்கள் நினைக்கும் சூனிய நினைவுகளை கர்த்தாரகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் கர்த்தாரகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும்
Cancel பண்ணி ஜெபியுங்கள் சீக்கிரத்தில் அற்புதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள் ஆமென்.
Switch To ENGLISH HINDI
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல்
பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன
வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள்
Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல்
அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள
E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள்.
Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
கிளிக் செய்யவும் Click
Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும்
நண்பர்களுக்கும்
அதிகமாக SHARE செய்யுங்கள்.
தீர்க்கதரிசன தியானங்களை
You tube –ல் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் Prophetic Meditation
Very useful message thank you jesus
ReplyDeletePraise the lord, thank you bro
ReplyDeleteGlory to Jesus😇
ReplyDeleteGlory to jesus
ReplyDelete