பாவம் செய்கின்ற ஆத்துமா சாகும்
என்று பரிசுத்த வேதத்தில் வாசித்திருப்போம்.(எசேக்கியேல் 18:4, ரோமர் 6:23) பாவம் என்பது
வேறு, பாவத்தினால் வருகின்ற கட்டு என்பது வேறு. பாவம் என்றால் என்ன? பாவத்தின் கட்டு
என்றால் என்ன? என்பதனைக் குறித்து இந்தச் செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிப்போம்.
இது முத்திரிக்கப்பட்ட தீர்க்கதரிசனச் செய்தி. எனவே, ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த
ஆவியானவர் கற்றுக்கொடுத்தால் மட்டுமே இது புரியும். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை
செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
தேவனுடைய
வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அதற்கு விரோதமாக கிரியை செய்வது பாவம் ஆகும். அப்படி பாவம்
செய்கின்ற மனிதன் பாவி என்னப்படுவான். பாவம் செய்ததினிமித்தம் ஒரு ஆவி அந்த மனிதன்
மீது அதிகாரம் எடுக்கும். அது பாவத்தின் ஆவி எனப்படும். அப்படி அதிகாரம் எடுத்து வரும்
ஆவி அந்த மனிதனின், ஆவி, ஆத்துமா, சரீரம், சிந்தனைகள், உணர்ச்சிகள் போன்றவற்றை ஆளுகை
செய்யும். ஆளுகை செய்து கட்டுப்படுத்தும்.
இது கட்டு எனப்படும்.
சுருக்கமாக
தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்ததினிமித்தம், பிசாசின் ஆவிக்கு கிடைக்கும்
அதிகாரத்தினைக் கொண்டு, மனிதனைக் கட்டுப்படுத்துவது, பாவக் கட்டு என்று சொல்லலாம்.
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும். நாம் பாவங்களை
அறிக்கையிடும் போது, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஆனால், பாவத்தினிமித்தம்,
பாவத்தின் ஆவியால் கட்டப்பட்டுள்ளக் கட்டு அப்படியே காணப்படும். எப்பொழுதுக் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதை உடைக்கின்றோமோ, அதுவரைக்கும் அது ஆவி, ஆத்துமா,
சரீரத்தில் தொடர்ந்து இருந்துக்கொண்டு ஆசீர்வாதத்தினையும் தடை செய்யும்.
உதாரணமாக ஒரு
மனிதன் தன்னுடைய வாலிப வயதில் தூஷண வார்த்தைகளை பேசுகின்றவனாக இருக்கின்றான். இரட்சிக்கப்பட்டப்
பின்பு தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட்டான். ஆனால், அந்தக் கட்டுகளை உடைக்கவில்லை. இதனால், அவனுடைய
பாவம் மன்னிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த தூஷண வார்த்தையினிமித்தம் கட்டப்பட்டுள்ளக்
கட்டு தொடர்ந்துக் கிரியைச் செய்யும். அது நாவில் இருந்துக் கொண்டே ஆவிக்குரிய வாழ்க்கைக்கும்,
ஆசீர்வாதத்திற்கும் தடையாக இருக்கும். வருடங்கள்
பல கடந்து முதிர்வயதானாலும் அந்தக் கட்டு அப்படியே
இருக்கும்.
இன்றைக்கும்
அநேகர் இப்படிப்பட்டக் கட்டுகளினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்றோ பாவம் செய்திருப்பார்கள்;
அதை அறிக்கையும் செய்திருப்பார்கள். ஆனால், பாவக்கட்டுகள் உடைக்கப்படாமல் இருப்பதினால்,
இன்றைக்கும் ஆசீர்வாத தடையுடனே இருப்பார்கள். தரித்திரம் தொடர்ந்துப் பிடித்திருக்கும்.
இந்தச் செய்தியை வாசிக்கின்ற நீங்களும் இதே போல் பாதிக்கப்பட்டிருந்தால், உடனே பாவங்களை
அறிக்கையிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பாவக் கட்டுகளை உடைத்தெறியுங்கள்.
அற்புதத்தினைப் பெறுவீர்கள். உங்கள் ஆவியில் மாற்றத்தினைக் காண்பீர்கள்.
(இந்த செய்தியை அதிகமாக SHARE செய்யுங்கள். தினமும் தீர்க்கதரிசன செய்திகள் Notification-ஐ
WHATS APP - ல் பெற Prophetic Words Ministries 8608833150, 8608096748)
Switch To ENGLISH HINDI
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல்
பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன
வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள்
Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல்
அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள
E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள்.
Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
கிளிக் செய்யவும் Click
Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Click Here
Really very Truthful Message Thank you so much Brother
ReplyDeletevery useful.Thank u
DeleteVery useful God bless you glory to jesus
ReplyDeleteDear Bro 'Sin' is the state with which all are born. We do not become a sinner because of our sin activities, but we do sinful activities because of the sin nature with which we are born.
ReplyDelete