விரியன் பாம்பு குட்டிகள்

File:Gospel of Matthew Chapter 3-7 (Bible Illustrations by Sweet ...

                 
      யோவான் ஸ்நானன் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கின்றது என்று பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது எருசலேம் நகரத்தார், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்கு சென்று பாவங்களை அறிக்கையிட்டு மனந்திருப்புதலுக்கு என்று ஞானஸ்தானம்  பெற்றார்கள்.  அதில் பரிசேயரும், சதுசேயரும் அநேகர் ஞானஸ்தானம் பெறும்படி அவனிடத்தில் வந்தார்கள்.  மற்றவர்கள் யாரையும் பார்த்து விரியன் பாம்பு குட்டிகளே! என்று சொல்லாமல், பரிசேயரும், சதுசேயரும்  வருகின்றதை கண்டு, அவர்களை பார்த்து  விரியன் பாம்பு குட்டிகளே என்று சொன்னான்.
  
         ஏன் அவன் அப்படி சொன்னான் அவர்களிடத்தில் என்ன  குறை காணப்பட்டது? சாத்தானை சர்ப்பம் என்றும், பாம்பு என்றும் வேதம் அழைக்கின்றது. இவர்களை பாம்பு குட்டிகள் என்று அழைப்பதினால் இவர்கள் சாத்தானின் பிள்ளைகளா? இந்த பரிசேயர் , சதுசேயர்களின் பாவம் என்ன?  கொஞ்சம் இச்செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் இந்த செய்தியை வாசியுங்கள். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசினால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
      
   
         இந்த பரிசேயர்கள் சதுசேயர்கள் கடினமான பிரசங்கங்களை கேட்கும் போது இருதயத்தில் குத்தப்பட்டு மனந்திரும்புவார்கள்.  ஆனால், நாம் செய்யும் பாவத்தை செய்வோம் கடைசி நிமிடத்தில்  பரலோகம் சென்று விடலாம் என்று சொல்லி   மனந்திரும்புதற்கேற்ற கனிகளை கொஞ்சம் கூட கொடுக்க மாட்டார்கள். கனியற்ற வாழ்க்கைதான் காணப்படும். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் எங்கள் தகப்பன் ஆபிரகாம்; நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள், உடன்படிக்கைக்கு சொந்தக்காரர்கள்.  நாங்கள் எப்படி வாழ்ந்தாலும், ஏன் பாவமே செய்தாலும்  தேவன் எங்களை ஏற்றுக்கொள்ளுவார். பரலோகம்கூட்டி கொண்டு செல்லுவார்  என்று சொல்லுவார்கள். 
                      
           இப்படி அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாவத்திலே இரவும் பகலும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு,  வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்  உண்டானவுடன் ஏதோ, அழிவு வந்து விட்டது என்று எண்ணி ஞானஸ்தானம் எடுக்க வந்தார்கள்.   அதைக்கண்ட யோவான்  அவர்களை பார்த்துதான் சாத்தானின் பிள்ளைகள் என்ற அர்த்ததில் விரியன் பாம்பு குட்டிகளே என்றான் .
            
              இன்றைய சபைகளிலும்  சில மனிதர்கள் இப்படி இருப்பதை பார்க்க முடியும். நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், அபிஷேகம் பெற்றுவிட்டேன், சபைக்கு செல்கின்றேன், காணிக்கை கொடுக்கின்றேன் என்று சொல்லி இனி நான் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை;  தேவன் என்னை பாதுகாப்பார்  என்று சொல்லி  கொஞ்சம் கூட கனிகளை கொடுக்கமாட்டார்கள்.  கேட்டால் கிருபையின் உடன்படிக்கை உள்ளது. கிருபை  உள்ளது என்று சொல்லி இஷ்டம் போல் வாழ்வார்கள் இவர்கள் தான் இனறைய கால விரியன் பாம்பு குட்டிகள். இவர்களின் வேர் அருகே தான் கோடாரி வைக்கப்பட்டு உள்ளது. 

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 



நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும் பெற Prophetic Words Ministries 8608833150, 8608096748)

தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் Click Here

Comments

  1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..